Wednesday, April 30, 2014

கீதை - 10.1 - உனது நலம் வேண்டி சொல்கிறேன்


கீதை - 10.1 - உனது நலம் வேண்டி சொல்கிறேன்

பத்தாவது அத்யாயம் விபூதி யோகம்.

விபூதி என்றால் பெருமை, உயர்வு.

இறைவனின் பெருமை பற்றி கூறும் அத்யாயம்.


श्रीभगवानुवाच
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥१०- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஸ்²ருணு மே பரமம் வச: |
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா || 10- 1||


ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்

பூ⁴ய = மீண்டும்
ஏவ = உறுதியாக
மஹாபா³ஹோ  = வலிமையான தோள்களை உடையவனே
ஸ்²ருணு = கேள்
மே = என்னுடைய
பரமம் = உயர்ந்த
 வச: | = வசனங்களை
யத் = அது
தே = உனக்கு
அஹம் = நான்
ப்ரீயமாணாய = அன்பு கொண்டவனான நீ
வக்ஷ்யாமி = சொல்லுகிறேன்
ஹிதகாம்யயா = உன் நன்மைக்காக

மீண்டும் சொல்லுகிறேன். என்னுடைய உயர்ந்த சொல்லினைக் கேள். நீ என்மேல் அன்பு கொண்டவன். உனது நலம் நாடி இதனை உனக்கு சொல்லுகிறேன். 

இது வரை சொன்னது அர்ஜுனனுக்கு புரிந்த மாதிரி இல்லை. கர்ம யோகம் என்கிறான், பக்தி யோகம் என்கிறான், ஞான யோகம் என்கிறான் எது உயர்ந்தது, எது சரியான வழி என்ற குழப்பம் அர்ஜுனன் மனதில் கட்டாயம்   இருக்கும்.

எனவே, அந்த குழப்பத்தை போக்க மீண்டும் ஒரு முறை கூறுகிறேன் என்கிறான்.

சொல்வதற்கு முன்னால் இரண்டு விஷயங்களை கூறுகிறான்.

ஒன்று, நீ என்னில் அன்பு கொண்டவன்.

இரண்டாவது, உன் நன்மை கருதி கூறுகிறேன்.

அன்பு (ப்ரீத்தி) - பயம் இல்லை, பக்தி இல்லை - அன்பு இருக்கிறது.

நம்முடைய நன்மைக்காக சொல்லப் பட்ட ஒன்று கீதை.

என்ன சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.



No comments:

Post a Comment