கீதை - 9.23 - எல்லா நம்பிக்கைகளும் ஒன்றே
येऽप्यन्यदेवताभक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥९- २३॥
யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||
யே = அவர்கள்
அபி = மேலும்
அன்ய = வேறு
தே³வதா = தேவதைகளை
ப⁴க்தா = பக்தர்கள்
யஜந்தே = வணங்குபவர்கள்
ஸ்²ரத்³த⁴யாந்விதா: = நம்பிக்கையுடன்
தே = அவர்கள்
பி = மேலும்
மாம் = என்னையே
எவ = மட்டும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
யஜந்த்யதி = (அவர்கள்) வணங்குகிறார்கள்
அவிதி⁴பூர்வகம் = தவறான வழியில்
மற்ற அன்னிய தேவதைகளை நம்பிக்கையுடன் வணங்குபவர்களும் , தவறான வழியில் என்னையே தொழுகின்றனர்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒவ்வொரு குறிக்கோள். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு குறிக்கோள்.
படிக்கிற காலத்தில் நல்ல மதிப்பெண் வேண்டுமே என்று,
படித்து முடித்த பின், நல்ல வேலை வேண்டும்,
பின் நல்ல துணை வேண்டும்,
பின் நல்ல குழந்தைகள் வேண்டும்,
பின் அவைகளுக்கு படிப்பு, வேலை, திருமணம்,
பின் வாழ்க்கை பற்றிய சிந்தனை, மூப்பு, மோட்சம், பிறவியில் இருந்து விடுதலை என்று எண்ணங்களும் குறிக்கோள்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.
எது தான் நிரந்தரம் ? எதுவும் இல்லை.
ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை தேடி, அலைகிறோம்.
அந்த தேடல் நிறைவேற வேண்டுமே என்று ஏங்குகிறோம்.
நிறைவேறும் என்று நம்புகிறோம்.
அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை.
நீங்கள் எதை நம்பினாலும், அவை எல்லாம் ஒன்றுதான்.
பொருள்களுக்குள் வேறு பாடு இல்லை - புரிகிறது
மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை - புரிகிறது.
நம்பிக்கைகளுக்குள்ளும் வேறு பாடு இல்லை - எல்லா நம்பிக்கைகளும் ஒன்று தான்.
ஜாதி மத வேறு பாடு இல்லை.
பணக்காரன் ஏழை வேறுபாடு இல்லை
இளையவன் முதியவன் என்ற வேறுபாடு இல்லை
எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒன்றைப் பற்றிதான்.
"வேறு வேறு தெய்வங்களை தொழுதாலும், தவறான வழியில் என்னையே தொழுகிறார்கள்"
யார் எதை வழி பட்டாலும், அது என்னையே வழி படுவதற்கு சமம்.
அது எப்படி எல்லா வழிபாடுகளும், நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?
பணம் வேண்டுபவனும், பதவி வேண்டுபவனும், அதிகாரம் வேண்டுபவனும், முக்தி வேண்டுபவனும், இறைவனை அடைய வேண்டும் என்று விரும்புவனும் - அவற்றை அடைய வேண்டி காரியங்களை செய்து, அவை கிடைக்கும் என்று நம்புகையில், எப்படி எல்லா நம்பிக்கைகளும் ஒன்றாக முடியும் ?
பின் வரும் சுலோகங்களில் அதை விளக்குகிறார் வியாசர்....
நம்புங்கள்....
No comments:
Post a Comment