Wednesday, April 29, 2015

கீதை - 12.8 - மனிதன் , இறைவனாகலாம்

கீதை - 12.8 - மனிதன் , இறைவனாகலாம் 

मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय ।
निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः ॥१२- ८॥

மய்யேவ மந ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஸ²ய: || 12- 8||

மய் = ;என்னில்

யேவ  = உறுதியாக

மந = மனதை

ஆதத்ஸ்வ = நிலை நிறுத்தி

மயி = என்னில்

புத்திம் = புத்தியை

நிவேஸய = செலுத்தி

நிவஸிஷ்யஸி = இருந்தால் , குடி இருந்தால்,

மய் = என்னில்

யேவ = உறுதியாக

அத = இனி

ஊர்த்வம் = மேலே

ந = இல்லை

ஸம்ஸ²ய = சந்தேகம்

என்னில் மனதையும், புத்தியையும் செலுத்தி நிலையாக இருந்தால், நீ என்னில் இருப்பாய்  என்பதில் சந்தேகம் இல்லை. 

வாழ்வில் சிக்கல் என்ன என்றால் மனமும் புத்தியும் ஒன்றாக இல்லாமல் பிரிந்து கிடப்பதுதான்.

அதிகம் சாப்பிடாதே என்று புத்தி சொல்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் என்று மனம் அலை பாய்கிறது.

தொடாதே...அது உன்னுடையது அல்ல என்கிறது புத்தி...தொட்டால் என்ன என்று மனம் குறுகுறுக்கிறது....

பொய் சொல்லாதே என்கிறது மனம்...யார் கண்டு பிடிப்பார்கள் , பார்ப்போம் என்கிறது புத்தி..

இப்படி நாளும் , புத்திக்கும் மனதுக்கும் இடையே கிடந்து அல்லல் படுகிறோம்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

என்பார் வள்ளலார்.

உள்ளும் புறமும் எங்கே ஒன்றாக இருக்கிறது ?

மனம் என்பது புலன்களால் செலுத்தப் படுவது.  புத்தி சிந்தனையால் , அரிவால் இயங்குவது.

புத்தி சிந்தித்து, படித்து, படித்தவர்கள் சொல்லக் கேட்டு ஒன்றைச் சொல்லும்.

மனம் கொஞ்சம் அந்த  .போகும்.  பின் அதில் சந்தேகம் கொள்ளும். வேறு ஒன்றை சிந்திக்கும். இது சரியா தவறா என்று ஐயம் கொள்ளும். தவறோ என்று பயம் கொள்ளும்.

புத்தியும் மனமும்  ஒன்று புள்ளியில் குவிவது கடினம்.

அதைத்தான் கண்ணன் சொல்லுகிறான்.

அப்படி மனமும் புத்தியும் ஒன்றில் செலுத்தினால் ..? என்ன ஆகும் ?

"நீ என்னில் இருப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை " என்பது கண்ணனின் வாக்கு. நீ இறை தன்மை அடைவாய் என்கிறான்.

இறை தன்மை அடைய இதைவிட வேறு எளிய வழி இருக்குமா என்ன ?

நீ , நானாகவே மாறிவிடுவாய் ...நீ என்னில் கலப்பாய் என்பதில் சந்தேகம் இல்லை  என்கிறான்.

எப்படி நாட்டியத்தில் இலயித்து ஆடும் கலைஞன் அந்த நாட்டியமாகவே  மாறிவிடுகிறானோ ...அது போல...அவன் வேறு நாட்டியம் வேறு அல்ல. அவனே நாட்டியம்.

அதே போலத் தான் தன்னை மறந்து பாடும்போது, பாடுபவன் அந்த இசையாகவே  மாறி விடுகிறான்.

இறைவன் மேல் மனதையும் புத்தியையும் செலுத்தி ஒன்றி இருக்கும் போது நீங்கள்  இறைவனாகவே மாறி விடுகிறீர்கள்.

மனதையும் புத்தியையும் இணைப்பது யோகம்.

மனிதனை இறைவனோடு இணைப்பது யோகம்.

Tuesday, April 28, 2015

கீதை - 12.7 - உன்னை விரைந்து கரை ஏற்றுகிறேன்

கீதை - 12.7 - உன்னை விரைந்து கரை ஏற்றுகிறேன் 

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥१२- ७॥

தேஷாமஹம் ஸமுத்³த⁴ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக³ராத் |
ப⁴வாமி நசிராத்பார்த² மய்யாவேஸி²தசேதஸாம் || 12- 7||

தேஷாம் = அவர்களை

அஹம் = நான்

ஸமுத்தர்த = கரை ஏற்றுகிறேன்

ம்ருத்யு = மரணம்

ஸம்ஸார = மாறும், தொடர்ந்து செல்லும்

ஸாகராத் = விழுங்கும், கடல்

பவாமி = நான்

நசிராத் = வேகமாக

பார்த = பார்த்தனே

மய்யா = என்னை 

அவேஸித = அடைகிறார்களோ

சேதஸாம் = மனதால்

அவ்வாறு என்னை மனதால் அடைபவர்களை நான் மரணம், பிறவி என்று மாறி மாறி வரும் இந்த சுழலில் இருந்து விரைந்து கரை ஏற்றுவேன் 

ஏன் பக்தி செய்ய வேண்டும் ? பக்தி செய்தால் என்ன கிடைக்கும் ?

மனித மனம் எப்போதும் இலாப நட்ட கணக்கு போட்டுக் கொண்டே இருக்கும்.

இதனால் எனக்கு என்ன இலாபம் என்ற கேள்வி எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

மனதை என்னில் செலுத்தி, காரியங்களை நீக்காக செய்து, என்னை தியானித்து என்று கண்ணன் அடுக்கிக் கொண்டே  போகிறான்.

சரி, எல்லாம் செய்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடை தருகிறான்.

அந்த விடையை பார்க்குமுன் நாம் சற்று நிறுத்தி, இந்த கேள்வியை வேறு விதமாக கேட்டு பார்ப்போம்.

காரியங்களை நமது நன்மைக்காக செய்து, எதிலும் மனம் ஒன்றாமல்,  ஒன்றில்  இருந்து இன்னொன்று என்று மனம் தாவிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும் ?

என்ன ஆகும் என்று எதிர் காலத்தில் கேட்பதை விட, என்ன ஆகிற்று இது வரை , என்ன ஆகிக் கொண்டு இருக்கிறது இப்போது என்று யோசிப்போம்.

ஒரு ஆசை, ஒரு குறிக்கோள் என்று ஒன்றை துரத்துகிறோம். அதை அடைந்தாலே வாழ்வில் நிம்மதி என்று நினைக்கிறோம். அது கிடைத்த பின் என்ன ஆகிறது ? மனம் நிம்மதியாக இருக்கிறதா ?

அடுத்த ஒன்றிற்கு மனம் ஆசைப் படுகிறது.

மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப் படுகிறது.

கிடைத்தவுடன்  கொஞ்ச நாள் சந்தோஷம், திருப்தி....பின் சிறிது நாளில் அதுவே சலிக்கத் தொடங்குகிறது.  பின்  அதன் மேல் வெறுப்பு கூட வந்து விடுகிறது. அதை விட்டு விட்டு அடுத்ததை தேடுகிறோம்.

மேலே போவதும், கீழே வருவதும்
சந்தோஷமும், வெறுமையும்
ஒன்று போய் மற்றொன்றாய் வந்து வந்து போகிறது....

இது தான் பெரிய மாயச் சுழல்....

இதில் இருந்து எப்படி விடுபடுவது...

கண்ணன் சொல்கிறான் ...காரியங்களை உனக்காக செய்யாதே, மனதை ஒருமுகப் படுத்து, தியானம் செய் ...

செய்தால்

இந்த சுழலில் இருந்து உன்னை விரைந்து கரையேற்றுகிறேன் என்கிறான்.

நமக்கு எல்லாமே உடனே வேண்டும்.

ஒரு நாள் உடற் பயிற்சி செய்தால் எடை குறைய வேண்டும்.
ஒரு நாள் கோவிலுக்குப் போனால் உடனே கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் ...

அவசரம், அவசரம் ...எல்லாவற்றிலும் அவசரம்....

கண்ணன் சொல்கிறான்..."விரைந்து  உன்னை கரை ஏற்றுகிறேன்" என்கிறான்.

நம்பிக்கை வேண்டும்.

சொல்பவர்கள் சொன்னால் நம்பிக்கை வரும். கண்ணன் சொல்கிறான். அல்லது வியாசர் சொல்கிறார்.

இப்படி செய்தால் விரைந்து கரை ஏறலாம் என்று.

கரை ஏறியவர்கள் சொல்கிறார்கள்.

பொய்யா சொல்லப் போகிறார்கள்.

செய்துதான் பார்ப்போமே.

Monday, April 27, 2015

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 2

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 2

ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥१२- ६॥

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||

யே = அவர்கள்

து = மேலும்

ஸர்வாணி = அனைத்து

கர்மாணி = செயல்களையும்

மயி = எனக்கு

ஸந்ந்யஸ்ய =  அர்பணித்து

மத்பரா: |  = என்னையே பரம் என்று கொண்டு

அநந்யேந = வேறு எதிலும்

எவ  = நிச்சயமாக

யோகேந = யோகத்தில் இருந்து

மாம் = என்னில், என்னை

த்யாயந்த = தியானித்து

உபாஸதே = வழிபடுகிறார்களோ

http://bhagavatgita.blogspot.in/2015/04/126-1.html

யார் அனைத்து தொழில்களின் பலன்களையும் எனக்கு அர்பணித்து, என்னை பரமாகக் கொண்டு, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் என்ன தியானம் பண்ணி வழி படுகிறார்களோ

என்ன இது பக்தி ரொம்ப கடினமான ஒன்றாக இருக்கும் போல் இருக்கிறதே. ஏதோ கோவிலுக்குப்  போனோமா , பஜனை செய்தோமா, நைவேத்தியம் செய்த  பிரசாதங்களை உண்டோமா என்று இல்லாமல் இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே !

அனைத்து செயல்களையும் எனக்கென்று அர்பணித்து ....
என்னையே பரம் என்று கொண்டு
வேறு எதிலும் மனதை செலுத்தாமல்
யோகத்தில் என்னையே தியானித்து வழிபட்டால்

இதை சற்று கூர்ந்து கவனித்தால் பக்தி யோகத்தினுள் கர்ம யோகம் பின்னி பிணைந்து இருப்பது  தெரியும்....

"அனைத்து செயல்களையும்"...பக்தியில் செயல் எங்கே வந்தது ?

செயல் வேறு பக்தி வேறு அல்ல.

அப்படி நினைப்பதால்தான் ஏதேதோ அயோக்கியத்தனங்களை செய்து விட்டு  கோவிலுக்குப்  போய் புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

பக்தி வேறு, செய்யும் தொழில் வேறு அல்ல.

நாம் செய்யும் செயலையே பக்தியாக மாற்ற முடியும்.

எப்படி ?

நாம் தெருவில் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறோம்.  போக்குவரத்தை  ஒழுங்கு செய்யும் ஒரு constable நிறுத்து என்று கையைக் கட்டுகிறார்....நாம் நிறுத்துகிறோம்.

அவர் யார் நம்மை  நிறுத்த ? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு constable தானே என்று  யாரும் நினைப்பது இல்லை...ஏன் ?

அவர் ஒரு தனி மனிதர் இல்லை.  அவர் இந்த நாட்டின் , இந்த அரசாங்கத்தின் ஊழியர்.  ஒரு சாதாரண மனிதன், ஆயிரம் வண்டிகளை ஒரு கையைக் காட்டி நிறுத்த முடிகிறது  . எப்படி ? அவர் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால். அப்படி இருப்பதால் அவருக்கு அளவு கடந்த அதிகாரம் , சக்தி கிடைக்கிறது.

அதே போல், நீங்கள் செய்யும் செயல்களை இறைவனின் செயல், இறைவனுக்காக  செய்யும் செயல் என்று நினைத்து செய்யுங்கள். உங்கள் ஆற்றல் அபரிமிதமாக வெளிப் படும்.

ஒரு குட்டி அரசாங்கத்தின் ஒரு கடை நிலை ஊழியனுக்கு இத்தனை  சக்தி என்றால்  ஒரு மிகப் பெரிய சக்தியின் ஊழியனாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு  சக்தி இருக்கும் ?

சில பெரிய நிறுவனங்களில் பெரிய அதிகாரியின் உதவியாளர்  சில சமயம் பெரிய  அதிகாரியை விட சக்தி உள்ளவர் போல செயல் படுவார்.

அது அவருடைய உண்மையான சக்தி அல்ல. அது ஒரு பொய் தோற்றம்.

உண்மையான சக்தி அந்த உயர் அதிகாரியிடம் இருக்கிறது. அந்த அதிகாரிக்காக  செய்யும் போது ,  உதவியாளரும் அந்த சக்தியைப் பெறுகிறார்.

கண்ணன் சொல்கிறான் "அனைத்து செயல்களின் பலன்களை எனக்கு அர்பணித்து "

முதலில் ஒரு மாபெரும் சக்தியின் செயலை நீங்கள் செய்கிறீர்கள்.

அந்த செயலின் பலனை, அந்த சக்திக்கே நீங்கள் விட்டு விடுங்கள்.

இப்போது என்ன ஆகிறது ?

நீங்கள் மிகப் பெரிய ஆற்றல் உள்ளவர்கள் ஆகிறீர்கள்.

நீங்கள் மிகப் பெரிய சக்தியைப் பெறுகிறீர்கள்.

அதன் மூலம் செய்யும் செயல்களின் பலன்களுக்கு நீங்கள் பொறுப்பு எடுக்காததால்  உங்கள் மனம் லேசாகிறது. நல்லதோ கெட்டதோ அது அந்த உயர்  அதிகாரியின் பாடு. நான் என் வேலையைச் செய்கிறேன் என்று நீங்கள் இருப்பதால் மனதில் குழப்பம் இல்லை, சிக்கல் இல்லை, மனம் இலேசாகி சந்தோஷத்தில்   மிதக்கிறது.

இது பக்தி.

 "என்னையே பரம் என்று".

நான் அல்ல செய்வது...நான் ஒரு மிகப் பெரிய சக்தியின் ஒரு அங்கம்...அந்த சக்தி  என் மூலம் வெளிப் படுகிறது...நான் ஒரு கருவி அவ்வளவுதான் என்று நினைக்கும் போது , செயலின் விளைவுகள் உங்களை பாதிப்பதில்லை.

நாம் சில காரியங்களில் வெற்றி பெறாமல் போய் விடுகிறோம்...நினைப்பது நடப்பது இல்லை ....

ஏன் ?  நன்றாகத்தான் முயற்சி செய்கிறோம், கடினமாக உழைக்கிறோம்....இருந்தும்  வெற்றி சில சமயம் கை நழுவி போய் விடுகிறது ...

ஏன் ?

அதற்கும் இந்த ஸ்லோகதிற்கும் என்ன சம்மந்தம் ?

பக்தி யோகத்தில் அது எங்கிருந்து வந்தது....

காரணம் இருக்கிறதே....என்ன என்று நாளை பார்போம்

================== பாகம் 2 ==============================================

என்னையே பரம் என்று கொண்டு

மேலே சொன்ன உதாரணத்தில், அந்த சாலையை ஒழுங்கு செய்யும் constable , அவர் ஒரு   அரசாங்கத்தின் அங்கம் என்று என்ன வேண்டும். ஒரு அரசாங்கத்தின்  வேலையை அவர் செய்கிறார் என்ற எண்ணம் வேண்டும். ஒரு தனி  மனிதனின் வேலை அல்ல போக்கு வரத்தை சரி செய்வது.

இந்த உலகில் நாம் செய்யும்  வேலைகள் ஏதோ நமக்காக நாம் செய்து கொள்வது  அல்ல. இறைவனின் வேலை என்று நினையுங்கள், உங்களுக்கு பக்தி  இருந்தால். உலக நன்மைக்கு என்று நினையுங்கள், பக்தி இல்லாவிட்டால், இறை நம்பிக்கை இல்லாவிட்டால். உலகம் வேறு , இறைவன் வேறு  அல்ல.

அப்படி நினைக்கும் போது வெற்றி தோல்வி உங்களை பாதிக்காது.  எல்லோருக்கும் நல்லது   நடக்க வேண்டும் என்று நினைத்து செய்கிறீர்கள். அதில்  எவ்வளவு நடந்தாலும் வெற்றி தான்.

இதை அவனுக்காகச் செய்கிறோம் அல்லது உலக நன்மைக்காக செய்கிறோம் என்ற  எண்ணம் வரும்போது தவறான செயல்களைச் செய்ய முடியாது. எல்லா  செயலிலும் ஒரு இறைதன்மை கலந்து விடும்போது பக்தி தானாகவே  பரிணமிக்கிறது.

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

என்பார் மணிவாசகர். எல்லா வேலையும் அவனுக்காக, அவனால் செய்யப்படுகிறது  என்று நினைத்தால் எந்நேரமும் அந்த சிந்தனைதான் இருக்கும்.

தன்னை மறந்த இலயம்.

"வேறு எதிலும் மனம் செல்லாமல்"

தோல்விகளுக்கு முதல் காரணம் மனம் செய்யும்  செயலில் ஒன்று படாமல் இருப்பதுதான். ஒன்றைச் செய்யும்போதே , இதை விட அது நல்லா இருக்கே,

இந்த படிப்பு படிப்பதை விட அந்த படிப்பு படித்திருந்தால் நல்லா இருக்கும்
இந்த வேலையை விட அந்த வேலை நல்லா இருக்கு
இதை விட அது, அதை விட இன்னொன்று என்று மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தால்  எங்கே ஒழுங்காக வேலை செய்ய முடியும்.

மனதை முதலில் ஒருமுகப் படுத்த வேண்டும் - concentration .

மனதை எதில் செலுத்தினாலும் அதை விட பெரியது, சிறந்தது ஒன்று தோன்றிக்  கொண்டே இருக்கும். அதை எப்படி தடுத்து நிறுத்துவது ?

"என்னை தியானித்து "

எல்லாவறையும் விட உயர்ந்த ஒன்றின் மேல் மனதை செலுத்தி விட்டால் அது வேறு எங்கும்   ஓடாது.

பக்தி உள்ளவர்கள், இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனை நினைக்கிறார்கள்.

மற்றவர்கள் , அவர்களின் மன விசாலத்துக்கு தகுந்த படி யோசிக்கலாம்.

முக்கியமானது என்ன என்றால் வேலையை வேலையாகப் பார்க்காமல் , அதை எதற்காக செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்.

நோக்கம் விரிவடைய விரிவடைய மனம் விசாலப் படும்....வெற்றி   தோல்விகள்  பெரிதாகத் தெரியாது...

நம்மைத் தாண்டி, நாம் செய்யும் வேலைகளைத் தாண்டி மனம் செல்லும்.

நான் என்பது மறந்து, என்னுடையது என்பது மறந்து செயல் படுவது தான்  பக்தி....

ஒரு நாள் முயன்று பாருங்கள்.  பிடித்திருந்தால் தொடருங்கள்....

வாழ்த்துக்கள்

Sunday, April 26, 2015

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 1

கீதை - 12.6 - பக்தியின் படிகள் - பாகம் 1 

ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः ।
अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते ॥१२- ६॥

யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||

யே = அவர்கள்

து = மேலும்

ஸர்வாணி = அனைத்து

கர்மாணி = செயல்களையும்

மயி = எனக்கு

ஸந்ந்யஸ்ய =  அர்பணித்து

மத்பரா: |  = என்னையே பரம் என்று கொண்டு

அநந்யேந = வேறு எதிலும்

எவ  = நிச்சயமாக

யோகேந = யோகத்தில் இருந்து

மாம் = என்னில், என்னை

த்யாயந்த = தியானித்து

உபாஸதே = வழிபடுகிறார்களோ

http://bhagavatgita.blogspot.in/2015/04/126-1.html

யார் அனைத்து தொழில்களின் பலன்களையும் எனக்கு அர்பணித்து, என்னை பரமாகக் கொண்டு, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் என்ன தியானம் பண்ணி வழி படுகிறார்களோ

என்ன இது பக்தி ரொம்ப கடினமான ஒன்றாக இருக்கும் போல் இருக்கிறதே. ஏதோ கோவிலுக்குப்  போனோமா , பஜனை செய்தோமா, நைவேத்தியம் செய்த  பிரசாதங்களை உண்டோமா என்று இல்லாமல் இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே !

அனைத்து செயல்களையும் எனக்கென்று அர்பணித்து ....
என்னையே பரம் என்று கொண்டு
வேறு எதிலும் மனதை செலுத்தாமல்
யோகத்தில் என்னையே தியானித்து வழிபட்டால்

இதை சற்று கூர்ந்து கவனித்தால் பக்தி யோகத்தினுள் கர்ம யோகம் பின்னி பிணைந்து இருப்பது  தெரியும்....

"அனைத்து செயல்களையும்"...பக்தியில் செயல் எங்கே வந்தது ?

செயல் வேறு பக்தி வேறு அல்ல.

அப்படி நினைப்பதால்தான் ஏதேதோ அயோக்கியத்தனங்களை செய்து விட்டு  கோவிலுக்குப்  போய் புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள்.

பக்தி வேறு, செய்யும் தொழில் வேறு அல்ல.

நாம் செய்யும் செயலையே பக்தியாக மாற்ற முடியும்.

எப்படி ?

நாம் தெருவில் வாகனத்தில் சென்று கொண்டு இருக்கிறோம்.  போக்குவரத்தை  ஒழுங்கு செய்யும் ஒரு constable நிறுத்து என்று கையைக் கட்டுகிறார்....நாம் நிறுத்துகிறோம்.

அவர் யார் நம்மை  நிறுத்த ? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு constable தானே என்று  யாரும் நினைப்பது இல்லை...ஏன் ?

அவர் ஒரு தனி மனிதர் இல்லை.  அவர் இந்த நாட்டின் , இந்த அரசாங்கத்தின் ஊழியர்.  ஒரு சாதாரண மனிதன், ஆயிரம் வண்டிகளை ஒரு கையைக் காட்டி நிறுத்த முடிகிறது  . எப்படி ? அவர் ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பதால். அப்படி இருப்பதால் அவருக்கு அளவு கடந்த அதிகாரம் , சக்தி கிடைக்கிறது.

அதே போல், நீங்கள் செய்யும் செயல்களை இறைவனின் செயல், இறைவனுக்காக  செய்யும் செயல் என்று நினைத்து செய்யுங்கள். உங்கள் ஆற்றல் அபரிமிதமாக வெளிப் படும்.

ஒரு குட்டி அரசாங்கத்தின் ஒரு கடை நிலை ஊழியனுக்கு இத்தனை  சக்தி என்றால்  ஒரு மிகப் பெரிய சக்தியின் ஊழியனாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு  சக்தி இருக்கும் ?

சில பெரிய நிறுவனங்களில் பெரிய அதிகாரியின் உதவியாளர்  சில சமயம் பெரிய  அதிகாரியை விட சக்தி உள்ளவர் போல செயல் படுவார்.

அது அவருடைய உண்மையான சக்தி அல்ல. அது ஒரு பொய் தோற்றம்.

உண்மையான சக்தி அந்த உயர் அதிகாரியிடம் இருக்கிறது. அந்த அதிகாரிக்காக  செய்யும் போது ,  உதவியாளரும் அந்த சக்தியைப் பெறுகிறார்.

கண்ணன் சொல்கிறான் "அனைத்து செயல்களின் பலன்களை எனக்கு அர்பணித்து "

முதலில் ஒரு மாபெரும் சக்தியின் செயலை நீங்கள் செய்கிறீர்கள்.

அந்த செயலின் பலனை, அந்த சக்திக்கே நீங்கள் விட்டு விடுங்கள்.

இப்போது என்ன ஆகிறது ?

நீங்கள் மிகப் பெரிய ஆற்றல் உள்ளவர்கள் ஆகிறீர்கள்.

நீங்கள் மிகப் பெரிய சக்தியைப் பெறுகிறீர்கள்.

அதன் மூலம் செய்யும் செயல்களின் பலன்களுக்கு நீங்கள் பொறுப்பு எடுக்காததால்  உங்கள் மனம் லேசாகிறது. நல்லதோ கெட்டதோ அது அந்த உயர்  அதிகாரியின் பாடு. நான் என் வேலையைச் செய்கிறேன் என்று நீங்கள் இருப்பதால் மனதில் குழப்பம் இல்லை, சிக்கல் இல்லை, மனம் இலேசாகி சந்தோஷத்தில்   மிதக்கிறது.

இது பக்தி.

 "என்னையே பரம் என்று".

நான் அல்ல செய்வது...நான் ஒரு மிகப் பெரிய சக்தியின் ஒரு அங்கம்...அந்த சக்தி  என் மூலம் வெளிப் படுகிறது...நான் ஒரு கருவி அவ்வளவுதான் என்று நினைக்கும் போது , செயலின் விளைவுகள் உங்களை பாதிப்பதில்லை.

நாம் சில காரியங்களில் வெற்றி பெறாமல் போய் விடுகிறோம்...நினைப்பது நடப்பது இல்லை ....

ஏன் ?  நன்றாகத்தான் முயற்சி செய்கிறோம், கடினமாக உழைக்கிறோம்....இருந்தும்  வெற்றி சில சமயம் கை நழுவி போய் விடுகிறது ...

ஏன் ?

அதற்கும் இந்த ஸ்லோகதிற்கும் என்ன சம்மந்தம் ?

பக்தி யோகத்தில் அது எங்கிருந்து வந்தது....

காரணம் இருக்கிறதே....என்ன என்று நாளை பார்போம்

Friday, April 17, 2015

கீதை - 12.5 - உருவமுள்ளதா, உருவமற்றதா ?

கீதை - 12.5 - உருவமுள்ளதா, உருவமற்றதா ?

क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिरवाप्यते ॥१२- ५॥

க்லேஸோ²ऽதி⁴கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் |
அவ்யக்தா ஹி க³திர்து³:க²ம் தே³ஹவத்³பி⁴ரவாப்யதே || 12- 5||

க்லேஸோ =  வலி, துன்பம்

அதிகதர = அதிகமானது

தேஷாம் = அவர்களுக்கு

அவ்யக்தாஸக்தசேதஸாம் = அவ்யக்த + அசக்த + சேதாஸ் = வியக்த என்றால்  தெரிவது. அவ்யக்த என்றால்  தெரியாதது. கண்ணுக்கும்  புலன்களுக்கும் தெரியாத. அதனோடு  மனதால் (சேதாஸ் ) தொடர்புகொள்வது (அசக்த )

அவ்யக்தா  = வெளிப்படாத

ஹி  = அதனால்

கதி = வழி, பாதை

துர்துகம் = கடினமாக

தேஹவத்பி = தேகத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள்

அவாப்யதே = அடைவது

இந்த உருவமற்றதில் ஈடுபட்டோருக்கு தொல்லையும் துன்பமும்  அதிகம். உடலின் மேல் பற்று கொண்டவர்கள் இந்த வழியில் செல்லுவது கடினம்.

கடினமான சமஸ்கிரத ஸ்லோகங்களையும் அதன் வார்த்தைகளையும் கொஞ்சம்  எளிமை படுத்தி சிந்திப்போம்.

இறைவன் இருக்கிறான் என்று வைத்துக் கொண்டால், அவன் எப்படி இருப்பான் ? அவனுக்கு ஒரு உருவம் உண்டா ? உண்டு என்றால் அது என்ன உருவம் ? ஏன் அந்த உருவம் மட்டும் ?  உருவம் இல்லை என்றால் எப்படி ?

கீதை இறைவனைப் பற்றி இரண்டு விதமாகச் சொல்கிறது.

ஒன்று வெளிப்படையான தோற்றம்

இன்னொன்று வெளிப்படாது.

வெளிப்படையான தோற்றம் என்றால் ஏதோ உங்களைப் போல, என்னைப் போல  இருப்பது அல்ல....அனைத்து சராசரங்களையும் அடக்கிய ஒரு பேருருவம். விஸ்வ  ரூபம்.

எல்லாவற்றையும் உள்ளடக்கியது.

இன்னொன்று வெளிப்படாதது....எல்லாவற்றிர்க்குளும் இருப்பது.

இரண்டும் ஒன்றுதான் என்றாலும் ஒருவரால் இரண்டையும் சிந்திக்க முடியாது.

நமக்கு உருவம் இல்லாத ஒன்றை சிந்திப்பதே கடினம்.

உருவம் இல்லாத ஒன்று என்று சொல்லும்போதே உருவம் என்ற ஒன்றை  நாம்  கொண்டுவந்து விடுகிறோம். நம்மை பொறுத்தவரை அனைத்தும் ஒரு உருவத்தில், வடிவில் இருக்க வேண்டும்.  உருவம் இல்லாத ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது.

அதைத்தான் இந்த சுலோகம் சொல்லுகிறது.

தேகத்தின் மேல் அபிமானம் கொண்டவர்கள் உருவமற்ற ஒன்றை சிந்திப்பது  கடினம்  என்கிறார்.

உண்மைதானே.

அப்படிஎன்றால், இரண்டு விஷயங்கள் சாத்தியமானது....

ஒன்று தேகத்தின் மேல் உள்ள பற்றை விட வேண்டும். அல்லது

உருவம்ற்றதை விட்டு விட்டு உருவத்தை வழிபட வேண்டும்.

இதைத் தமிழ் இலக்கியம் சற்று விரித்துப் பார்கிறது...

தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் என்று பார்த்தால் அது இறைவனின் தோற்றத்தை  மூன்று விதமாகப் பிறக்கிறது.

உருவம்
அருவம்
உருவம் அருவம் இல்லாத ஒன்று

அப்பர் பெருமான் சொல்லுவார்

விறகில் தீயினன்
பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்

மணியைக் கையில் எடுத்தால் அதில் உள்ள ஒளி தெரியும்.

பாலை கொஞ்சம் கடைந்தால் அதில் உள்ள நெய் வெளிப்படும்.

விறகை நன்றாகக் கடைந்தால் தீ வெளிப்படும்.

 இரண்டோ, மூன்றோ ...ஏன் இப்படி போட்டு குழப்ப வேண்டும் ? ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது ? ஏன் இவ்வளவு பெரிய சிக்கல்.

உருவம் என்று வந்து விட்டால் ஆளாளுக்கு ஒரு உருவத்தை கொண்டு வந்து இதுதான் உண்மையான கடவுள் என்று சண்டை பிடிக்கிறார்கள்.

பொறுமையாக சிந்தித்தால் சிக்கலே இல்லை.

மேலும் சிந்திப்போம்.

Wednesday, April 15, 2015

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம் - பாகம் 2

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம் - பாகம் 2

संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥१२- ४॥

ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||

ஸந்நியம் = சம் + நியம் = கட்டுப்படுத்திய பின்

யே = அவர்கள்

இந்த்ரியக்ராமம் = இந்திரியங்களை, புலன்களை

ஸர்வத்ர = எல்லா இடத்திலும், எல்லா சமயத்திலும்

ஸமபுத்தய = சம புத்தியுடன்

தே = அவர்கள்

ப்ராப்நுவந்தி = ப்ராப்தி அடைகிறார்கள்.

மாம் = என்னை

எவ  = உறுதியாக

ஸர்வபூதஹிதே = அணைத்து உயிர்களுக்கும் நன்மையே கருதி

ரதா: = மகிழ்ந்து இருப்பார்களோ, இரசித்து மகிழ்ந்து இருப்பார்களோ

புலன்களை அடக்கி , எங்கும், எதிலும்  சமபுத்தி உடையவர்களாய் , எல்லா உயிர்களிடத்தும் யார் நன்மையே விருபுகிரார்களோ அவர்களும் என்னை அடைகிறார்கள். 

மூன்று விஷயங்களை கூறுகிறார்:

முதலாவது, புலனடக்கம்.

இரண்டாவது, சம புத்தி

மூன்றாவது, எல்லா உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள விருப்பம்.

இது மூன்றும் ஏதோ மூன்று தனித் தனி விஷயம் போலத் தெரியும்.

முதலில் புலன்களை அடக்க பயிற்சி செய்யவேண்டும்.  அடுத்தது சம புத்தியை அடைய வேண்டும்.  அதன் பின் எல்லா உயிர்களிடத்தும் நன்மை பெற விழையும்  மனம் வேண்டும்....

இதை மூன்றையும் செய்வது முடிபதற்குள் நம் வாழ்கையே முடிந்து விடும் போல  இருக்கிறதே என்று நமக்கு ஒரு ஆயாசம் தோன்றலாம்.

சரி அப்படியே செய்து முடிப்பதாகவே வைத்துக் கொள்வோம், நம் புலன்களை அடக்கி, மற்றவர்கள் இன்பமாக இருக்க நினைத்து, நன்மை தீமைகளை ஒன்றாகப் பார்த்து ...இது என்ன வாழ்கை என்று ஒரு சலிப்பு ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்கை தேவைதானா ?

இத்தனையும் செய்த பின் இறைவனை அடைந்து என்ன செய்ய ?

கடவுளை அடைய யார் யாருக்கெல்லாம் நல்லது நினைக்க வேண்டி இருக்கிறது...எல்லாம் என் தலை எழுத்து என்று  சலித்துக் கொள்ள தோன்றும்.

கீதை வாழ்கை நெறிமுறைகளுக்கு எதிரானதா, வாழ்வில் இன்பம் கூடாது என்கிறதா ? எல்லோரும் மரக்கட்டை போல வாழ வேண்டும் என்கிறதா ?

இல்லை....

வாழ்வில் மிகப் பெரிய சந்தோஷத்தை சொல்லித் தருகிறது கீதை. எப்படி எப்போதும்  சந்தோஷமாக இருப்பது என்று சொல்லித் தருகிறது கீதை.

அது எப்படி என்று  நாளை பார்ப்போம்....

--------------------------- பாகம் 2 ------------------------------------------------------------------------------

முதலாவது, புலனடக்கம்.

இரண்டாவது, சம புத்தி

மூன்றாவது, எல்லா உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள விருப்பம்.

இது எப்படி   சாத்தியமாகும். அப்படியே சாத்தியமானாலும்  அப்படிப்பட்ட  இன்பமற்ற, கல்லு போல, மரம் போல வாழ்வது தேவையா ? இந்த கேள்விக்கு விடை  தந்தாக வேண்டும். 

என்னிடம்  ஒரு பேனா  இருக்கிறது. நான் ரொம்ப நாளாக வைத்திருக்கும் பேனா.  யாருக்கும் தர  மாட்டேன்.நான் மட்டும்தான் அதை  உபயோகிப்பேன். எனக்குத் திருமணமாகி குழந்தையும் வந்துவிட்டது. 

ஒரு நாள்  என் மகன் என்னிடம் வந்து அந்த பேனாவை கேட்டான். அதைப்  பெற்றுக்  கொண்ட அவன் முகத்தில் அத்தனை  மகிழ்ச்சி.அதை பார்க்கும் போது  எனக்கு மகிழ்ச்சி. 

எப்படி நிகழ்ந்தது ?

பேனா என்னை விட்டு போனது துன்பம். பெரிய இழப்புதான்.  இருந்தும்  சந்தோஷமாக  இருக்கிறது. ஏன் ?

ஏன் என்றால் நான் என் மகன் மேல் கொண்ட  அன்பு.

அன்பு வரும்போது இழப்பும்  மகிழ்வாகும்.

துன்பம் இன்பமாகும். 

ஆனால் அதே பேனாவை பக்கத்து  வீட்டு பையன் கேட்டால் கொடுப்பேனா ? மாட்டேன்.  அப்படியே கொடுத்தாலும்  மகிழமாட்டேன். 

ஏன் ?

ஏன் என்றால் பக்கத்து வீட்டு பையன் மேல் எனக்கு அன்பு  இல்லை.

அவன் மேலும் அன்பு வந்துவிட்டால் பின் அவனுக்கு பேனாவைக் கொடுத்தாலும்   மகிழ்வேன்.

அந்த அன்புக்கு கருணை என்று  பெயர்.

தொடர்பு உடையவர்கள்  மேல் செலுத்துவது அன்பு.  எல்லோர் மேலும் செலுத்துவது  கருணை. 

கருணை அதிகமாகும் போது எல்லாம் மற்றவர்களுக்கு என்று  தோன்றும்.

ஒன்றும் தனக்கென்று  தோன்றாது.

எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டால் பற்று  அற்ற மனம் வரும். 

அது துறவு. 

பொருளின் மேல் ஆசை விடும். அதனால் வரும் துன்பம் விலகும். மனது இலேசாகிப்  போகும். 

பின் என்ன சந்தோஷம்தான், நாளெல்லாம்.

துன்பமாவது, இன்பமாவது ....

 வேண்டியவன்,வேண்டாதவன்  என்று யாரும் இல்லை. 

அன்பு  பெருகட்டும்.

அது கருணையாக  மாறட்டும்.

அந்த கருணை துறவில் கொண்டு சேர்க்கும்.

அந்த துறவு எல்லையற்ற இன்பத்தைத் தரும். 

அன்பில்  தொடங்குங்கள்.

மற்றவை தானாக வரும். 

Tuesday, April 14, 2015

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம்

கீதை - 12. 4 - புலனடக்கம், சம புத்தி, எல்லோருக்கும் இன்பம்

संनियम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ।
ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः ॥१२- ४॥

ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||

ஸந்நியம் = சம் + நியம் = கட்டுப்படுத்திய பின்

யே = அவர்கள்

இந்த்ரியக்ராமம் = இந்திரியங்களை, புலன்களை

ஸர்வத்ர = எல்லா இடத்திலும், எல்லா சமயத்திலும்

ஸமபுத்தய = சம புத்தியுடன்

தே = அவர்கள்

ப்ராப்நுவந்தி = ப்ராப்தி அடைகிறார்கள்.

மாம் = என்னை

எவ  = உறுதியாக

ஸர்வபூதஹிதே = அணைத்து உயிர்களுக்கும் நன்மையே கருதி

ரதா: = மகிழ்ந்து இருப்பார்களோ, இரசித்து மகிழ்ந்து இருப்பார்களோ

புலன்களை அடக்கி , எங்கும், எதிலும்  சமபுத்தி உடையவர்களாய் , எல்லா உயிர்களிடத்தும் யார் நன்மையே விருபுகிரார்களோ அவர்களும் என்னை அடைகிறார்கள். 

மூன்று விஷயங்களை கூறுகிறார்:

முதலாவது, புலனடக்கம்.

இரண்டாவது, சம புத்தி

மூன்றாவது, எல்லா உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள விருப்பம்.

இது மூன்றும் ஏதோ மூன்று தனித் தனி விஷயம் போலத் தெரியும்.

முதலில் புலன்களை அடக்க பயிற்சி செய்யவேண்டும்.  அடுத்தது சம புத்தியை அடைய வேண்டும்.  அதன் பின் எல்லா உயிர்களிடத்தும் நன்மை பெற விழையும்  மனம் வேண்டும்....

இதை மூன்றையும் செய்வது முடிபதற்குள் நம் வாழ்கையே முடிந்து விடும் போல  இருக்கிறதே என்று நமக்கு ஒரு ஆயாசம் தோன்றலாம்.

சரி அப்படியே செய்து முடிப்பதாகவே வைத்துக் கொள்வோம், நம் புலன்களை அடக்கி, மற்றவர்கள் இன்பமாக இருக்க நினைத்து, நன்மை தீமைகளை ஒன்றாகப் பார்த்து ...இது என்ன வாழ்கை என்று ஒரு சலிப்பு ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்கை தேவைதானா ?

இத்தனையும் செய்த பின் இறைவனை அடைந்து என்ன செய்ய ?

கடவுளை அடைய யார் யாருக்கெல்லாம் நல்லது நினைக்க வேண்டி இருக்கிறது...எல்லாம் என் தலை எழுத்து என்று  சலித்துக் கொள்ள தோன்றும்.

கீதை வாழ்கை நெறிமுறைகளுக்கு எதிரானதா, வாழ்வில் இன்பம் கூடாது என்கிறதா ? எல்லோரும் மரக்கட்டை போல வாழ வேண்டும் என்கிறதா ?

இல்லை....

வாழ்வில் மிகப் பெரிய சந்தோஷத்தை சொல்லித் தருகிறது கீதை. எப்படி எப்போதும்  சந்தோஷமாக இருப்பது என்று சொல்லித் தருகிறது கீதை.

அது எப்படி என்று  நாளை பார்ப்போம்....

Monday, April 13, 2015

கீதை - 12.3 - ஆத்ம வழிபாடு

கீதை - 12.3 - ஆத்ம வழிபாடு 

ये त्वक्षरमनिर्देश्यमव्यक्तं पर्युपासते ।
सर्वत्रगमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् ॥१२- ३॥

யே த்வக்ஷரமநிர்தே³ஸ்²யமவ்யக்தம் பர்யுபாஸதே |
ஸர்வத்ரக³மசிந்த்யம் ச கூடஸ்த²மசலம் த்⁴ருவம் || 12- 3||

யே து = எவர்

அக்ஷரம் = அழியாததும்

அநிர்தேஸ்யம் = விளக்க முடியாததும், கருத முடியாததும் (அ + நிர் + தேச்யம் = காண்பிக்க முடியாதது)

அவ்யக்தம் = வெளிப்பட்டுத் தெரியாததும், புலன் படாததும்.

பர்யுபாஸதே = பர் + உபாசிதே = வழிபடுகிறார்களோ

ஸர்வத்ரகம் = எல்லா இடத்திலும் இருப்பதும் (சர்வத்ர கம் )

அசிந்த்யம் = சிந்தனைக்கு கட்டுப் படாததும்

ச = மேலும்

கூடஸ்த = அனைத்திற்கும் மேலானதும், அனைத்திற்கும் அடிப்படையானதும் 

அசலம் = சலனம் இல்லாததும்

த்ருவம் = நிலையானதும்

அழிவில்லாததும், விளக்க முடியாததும், புலன்களுக்கு அப்பாற்பட்டதும், சிந்தனைக்கு வெளியே இருப்பதும், அனைத்துக்கும் மேலானதும்,  அசைவற்றதும்,நிலையானதுமான அதை வழிபடுகிறார்களோ.....

அழிவில்லாதது - எது அழிவில்லாமல் இருக்க முடியும் ? தோன்றிய எதுவும் அழியும். எனவே, அழிவில்லாதது என்றால் அது தோன்றாதது என்று அர்த்தம். தொடக்கம் இருந்தால்  முடிவு இருக்கும். முடிவு இல்லை என்றால் தொடக்கமும் இல்லை.

ஆதியும் அந்தமும் இல்லா  அருட் பெருஞ் சோதியை 

என்பார் மணிவாசகர்.

அநிர்தேஸ்யம் - விளக்க முடியாதது. பொருளை , செயலை விளக்க முடியும். குணத்தை  விளக்க முடியாது. லட்டு என்றால் என்ன என்று விளக்க முடியும். இனிப்பு என்றால் என்ன என்று விளக்க முடியாது.  குடை என்றால் என்ன என்று விளக்க முடியும். கருப்பு என்றால் என்ன என்று விளக்க முடியாது. குணங்களை  உணர முடியும். விளக்க முடியாது. லட்டை வாயில் போட்டால் இனிப்பு என்றால்  என்ன என்று உணர முடியும். ஆத்மா என்பதை உணர முடியும்.  விளக்க முடியாது.

 ஸர்வத்ரகம் = எல்லா இடத்திலும் இருப்பதும் (சர்வத்ர கம் )

எது எங்கும் நிறைந்து இருக்கும் ? ஒரு குறிப்பிட்ட உருவம் உள்ளது ஒரு இடத்தில்  இருக்கும். அது எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடலாம். உருவம் இல்லாதது   எங்கும் இருக்கும். எனவே, அது உருவம் இல்லாதது என்று நாம் யூகிக்கிறோம்.

அசிந்த்யம் = சிந்தனைக்கு கட்டுப் படாததும்

நம் சிந்தனை , நம் புலன்கள் மூலம் உருவாவது. புலன்கள் அறிவுக்கு செய்திகளை அனுப்பிக் கொண்டே  இருக்கின்றன.நம் அறிவு/மனம் அவற்றை உணர்ந்து, அறிந்து சித்தனை உருபெறுகிறது. புலன்களுக்கு அப்பாற்பட்டதை சிந்தனையால் அறிய முடியாது. கண் இல்லாதவன் நிறம் என்றால் என்ன என்று எவ்வளவு   சிந்தித்தாலும் அறிய முடியாது. சிந்தனையில் அறிய முடியாதது , புலன்களுக்கும் அப்பாற்பட்டது. 

கூடஸ்த = அனைத்திற்கும் மேலானதும், அனைத்திற்கும் அடிப்படையானதும்  

அனைத்திற்கும் மூலம் அது. அதிலிருந்துதான் எல்லாம் தோன்றின. 

போற்றி என் வாழ் முதலாகிய பொருளே 

என்பார் மணிவாசகர் 

அசலம் = சலனம் இல்லாததும் 

எங்கும் நிறைந்து இருப்பது எங்கே போகும் ? நகர்வது என்றால் ஒரு இடத்தில் இருந்து  இன்னொரு இடத்திற்குப் போக வேண்டும். எங்கும் நிறைந்தது எங்கிருந்து  எங்கு போகும் ?

இதை வழிபடுபவர்கள் ....என்று இந்த ஸ்லோகத்தை நிறுத்துகிறார் வியாசர். அடுத்த  ஸ்லோகத்தில் இது முடிவு பெறும்.

மேலும் சிந்திப்போம்....

Saturday, April 11, 2015

கீதை - 12.2 - பக்தியே சிறந்த யோகம்

கீதை - 12.2 - பக்தியே சிறந்த யோகம் 

श्रीभगवानुवाच
मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते ।
श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मताः ॥१२- २॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
மய்யாவேஸ்²ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
ஸ்²ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: || 12- 2||

ஸ்ரீபகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்கிறான்

மயி = என்னில்

ஆவேஷ்ய = முழுவதும் ஆழ்ந்து

மநோ = மனம்

யே = அவர்கள்

மாம்= என்னை

நித்யயுக்தா = எப்போதும் என்னை நினைத்து

உபாஸதே = உபாசனை செய்து

ஸ்ரத்தயா = சிரத்தையுடன்

பரயோ = உயர்ந்த

உபேதாஸ்தே = கூடியவர்களாக

மே யுக்ததமா மதா: =என்னால்  யோகிகளில் சிறந்தவர்களாக கொள்ளப் படுவர்

ஸ்ரீ பகவான் சொல்கிறான், என்னிடம் மனதைச் செலுத்தி , நிதமும் யோகத்தில் ஆழ்ந்து, உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர், யோகிகளில் சிறந்தவர் என்று என்னால் கருதப் படுவர். 

ஆத்மா தரிசனம்.

விஸ்வரூப தரிசனம் என்று இரண்டு இருக்கிறது.

அது போக,

ஞான மார்க்கம்
கர்ம மார்க்கம்
பக்தி மார்க்கம் என்று மூன்று வழிகள் இருக்கிறது.

எது நல்லது, எதில் போவது, எப்படி போவது ?

குழப்பம்தான் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதில் இருந்து எப்படிதான் தெளிவு அடைவது ?

இந்த அத்யாயத்தில் பக்தி யோகம் பற்றி கண்ணன் கூறுகிறான்.

பக்தி என்றால் பல பேர் ஏதோ கோவிலுக்குப் போவது, அர்ச்சனை செய்வது, உண்டியலில் பணம் போடுவது, வீட்டில் இரண்டு வேளை விளக்கு ஏற்றி சில பல  பாடல்களை பாடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவா பக்தி ?

சொல்லப் போனால், ஞான மார்க்கம், கர்ம மார்கத்தை விட பக்தி மார்க்கம் கடினமாக இருக்கிறது, கண்ணன் சொல்வதை வைத்து பார்க்கும் போது.

பக்தி அவ்வளவு எளிமையானதாகத் தெரியவில்லை.

பக்தி மூன்று இலக்கணங்கள் சொல்கிறான் கண்ணன்.

முதலாவது, முழுவதும் ஆழ்ந்து. "ஆவேஷ்ய" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு முழுவதும் ஆழ்ந்து, ஊடுருவி (penetrate ) என்று பொருள். அனைத்து புலன்களும் ஒன்று பட்டு, மிக தீவிரமாக ஆராய்தல் பக்தி. ஏதோ மேலோட்டமாக, நேரம் கிடைத்தபோது செய்வது அல்ல பக்தி.

இரண்டாவது - புலனடக்கத்துடன். உபாசனா என்ற சொல்லுக்கு ஆராதித்தல், ஒன்று படுதல் என்று பொருள்.

மூன்றாவது, உயர்ந்த நம்பிக்கையுடன். "சிரத்தை" என்ற சொல்லுக்கு வெறும் நம்பிக்கை  என்று அர்த்தம் கொள்ள முடியாது. ஒன்றை அடைய வேண்டும் என்று கொள்ளும்  நம்பிக்கை சிரத்தை என்று பெயர்.

இப்படி, முழுவதும் ஆழ்ந்து, புலனடக்கத்துடன், அடைய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செய்யப்படும் செயலுக்குப் பெயர் பக்தி.

அப்படி பக்தி செய்பவர்கள்  சிறந்த யோகிகள் என்கிறான் கண்ணன்.

அப்படி என்றால் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் போன்றவற்றில் செல்பவர்கள் சிறந்தவர்கள் இல்லையா ?

சிந்திப்போம்

கீதை - 12. 1 - இறைவனா ? ஆத்மாவா ?

கீதை - 12. 1 - இறைவனா ? ஆத்மாவா ?

அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே | 
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா: || 12- 1||

அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஏவம் = அப்படியாக
ஸததயுக்தா யே = எப்போதும் அதில் இலயித்து இருப்பவர்கள் 
பக்தாஸ் = பக்தர்கள்
த்வாம் = உன்னை
பர்யுபாஸதே = வழிபடுபவர்கள்  |
யே சாப் = அவர்கள்
அக்ஷரம் = அழியாத , என்றும் நிலைத்து இருக்கும்
அவ்யக்தம்  =  வெளிப்படாத
தேஷாம் = அவர்களில்
கே = யார்
யோகவித்தமா: = யோகத்தில் மேம்பட்டவர் யார்

ஒரு புறம் ஆத்மா அழிவற்றது,  அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை அதை  அறிந்தவன் என்னை அடைகிறான் என்று கீதை கூறுகிறது.

இன்னொரு புறம்  விஸ்வ ரூப தரிசனம் என்று இறைவனின் அனைத்தும் தழுவிய ஒரு   உருவத்தைப் பற்றியும் கூறுகிறது.  இதை அறிவபவன் என்னை அடைகிறான் என்றும் கூறுகிறது.

படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது  இயற்கை.

எந்த வழியில் போவது ?

வெளிப்பட்டு நிற்கும்  வடிவை (manifest  - விஸ்வரூபம்) வழி படுவதா ? அல்லது வெளிபாடாமல் இருக்கும் (unmanifest ) ஆத்மாவை அறிவதா ?

ஆத்மா புலனுக்கு புலப்படாது

வெளிப்பட்ட உருவமோ புலனுக்கு வெளிப் படும்

எந்த வழியில் போவது ?

எது சிறந்தது ?

இரண்டு வழி உண்டென்றால் எது சிறந்து வழி ?

இறைவன் புலன்களுக்கு புலப்படுவானா ?

இந்த குழப்பம் அர்ஜுனனுக்கு வருகிறது.

நமக்கும்தான்.

பக்தி யோகத்தில் கண்ணன் விளக்குகிறான்.

மேலும் சிந்திப்போம்.