Saturday, April 26, 2014

கீதை - 9.33 - நிரந்தர சுகம்

கீதை - 9.33 - நிரந்தர சுகம்


किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥९- ३३॥

கிம் புநர்ப்³ராஹ்மணா: புண்யா ப⁴க்தா ராஜர்ஷயஸ்ததா² |
அநித்யமஸுக²ம் லோகமிமம் ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம் || 9- 33||

கிம்  புநர் = சொல்லவும் வேண்டுமோ ?
ப்³ராஹ்மணா:  = பிராமணர்களும்
புண்யா = மறுபடியும்
ப⁴க்தா = பக்தர்கள்
ராஜர்ஷயஸ் = இராஜ ரிஷிகள்
ததா² | = மேலும்
அநித்யம் = நித்யம் இல்லாதது 
அஸுக²ம் = சுகம் இல்லாதது
லோகம் = லோகம் 
இமம் = இந்த 
ப்ராப்ய = அடைதல்
ப⁴ஜஸ்வ =  பஜனை செய்வதன் மூலம்
மாம்  = என்னை

அப்படி இருக்க அந்தணர்களும் இராஜ ரிஷிகளும் என்னை வணங்குகிறார்கள். நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் வந்து தோன்றிய பின், நீ என்னை வழி படுவாய் 



முந்தைய ஸ்லோகத்தில் வைசியர்கள், சூத்திரர்கள், மற்றும் பெண்கள் பர கதி அடைவதைப் பற்றி பார்த்தோம்.

இந்த ஸ்லோகத்தில், அந்தணர்களும், இராஜ இரிஷிகளும் என்னை வழி படுகிறார்கள். நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் நீயும் என்னை வழி படு என்கிறான்.

அந்தணர்களும் இராஜரிஷிகளும் என்று சொல்லவதின் அர்த்தம் என்ன ?

அந்தணர்கள் அறிவு சார்ந்த வாழ்கை வாழ்பவர்கள். பற்றற்றவர்கள்.

இராஜ ரிஷிகள் அனைத்தையும் அனுபவித்து புலன் இன்பங்களை கடந்து சென்றவர்கள்.

புலன் இன்பங்களின் மேல் ஆர்வம் இல்லாதவர்களும்,  புலன் இன்பங்களை அனுபவித்து  அவற்றை கடந்து சென்றவர்களும் என்னை வணங்குகிறார்கள்.

நிரந்தரம் இல்லாததும், சுகம் இல்லாததுமான இந்த உலகில் ....

"லோகம்" என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் சொல்லப் பட்டாலும்  அதன் ஆழ்ந்த அர்த்தம் "அனுபவம்" என்பதாகும்.  காம லோகம் என்று சொல்லும்போது காம அனுபவங்களை சார்ந்த உலகம் என்றுதான் கொள்ள வேண்டும்.

அனுபவங்கள் நிரந்தரம் இல்லாதவை. மாறிக் கொண்டே இருப்பவை.

அனுபவங்கள் முதலில் இன்பத்தை , சுகத்தை தந்தாலும் நாளடைவில் சலிப்பையும் வெறுப்பையும் தருபவை.

நிரந்தரம் இல்லாத, சுகம் இல்லாத அனுபவங்களை விட்டு நிரந்தரமான, எப்போதும்  சுகம் தருவதைப் பற்றி  எப்போதும் நினை (பஜனை செய்).






No comments:

Post a Comment