கீதை - 9.22 - செயலில் பக்தி
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥९- २२॥
அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||
அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||
சிந்த யந்தோ = மனதை செலுத்தாமல்
மாம் = என்னை
யே = அவர்கள்
ஜநா: = மக்கள்
பர் உபாஸதே = முறையுடன் உபாசித்து
தேஷாம் = அவர்களின்
நித்யா = எப்போதும்
அ பி⁴யுக்தாநாம் = என்னையே நினைத்து, பக்தியுடன்
யோக³ = தேவைகளை
க்ஷேமம் = பாதுகாத்து
வஹாம்ய = பொறுப்பு
அஹம் = நான்
வேறு எந்தவித நினைப்பும் இன்றி என்னையே வழிபடுவோர், அந்த நித்திய யோகிகளின் தேவைகளையும், பாதுகாப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.
யோக க்ஷேம - என்ற இந்த இரண்டு வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் சொல்கிறார்கள். நன்மை தீமை என்று ஒரு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது பக்தர்களின் நன்மை தீமைகளுக்கு நானே பொறுப்பு என்ற அர்த்தத்தில். அது அவ்வளவு சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. நன்மை சரி. தீமை ?
இன்னொரு அர்த்தம் - அவர்களின் தேவைகளைத் தந்து, அவர்களிடம் இருப்பவற்றை பாதுகாக்கிறேன் (protection ).
இந்த ஸ்லோகத்தை மேலோட்டமாக பார்த்தால் இது ஏதோ , கிருஷ்ணன் நமக்கு வேண்டிய குளிர் சாதன பெட்டி, தொலை காட்சி பெட்டி, கணணி போன்ற பொருள்களை தந்து அவை நல்ல படியாக செயல் படவும், அதை வேறு யாரும் திருடிக் கொண்டு போகாமல் இருக்கவும் உதவி செய்வான் என்று சொல்வது போல இருக்கிறது.
நடக்கிற காரியமா ? வியாசர் அப்படி சொல்வாரா ?
அப்படி அல்ல பொருள்.
நாம் எப்படி வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும் என்று சொல்லித் தருகிறது இந்த சுலோகம்.
நாம் எந்த காரியத்தை செய்தாலும், அதில் வெற்றி பெற, அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை பாதிக்கிறது. நம்மை மாற்றுகிறது.
அப்படி என்றால் காரியங்களை சிறப்பாகச் செய்தால் நம்மிடம் நல்ல பாதிப்பு இருக்கும். ஏனோ தானோ என்று செய்தால், அதன் பாதிப்பும் அப்படித்தான் இருக்கும்.
காரியங்களை செய்வதன் மூலம் நாம் நம்மை உயர்த்திக் கொள்ள முடியும்.
பக்தி யோகம் , கர்ம யோகத்துடன் இணையும் சுலோகம் இது.
செய்யும் காரியத்தை பக்தியுடன் செய்யலாம்.
எப்படி ?
மூன்று படிகள்.
முதலாவது:
"வேறு ஒன்றிலும் மனதைச் செலுத்தாமல்": (concentration ). ஒரு காரியத்தை செய்யத் தொடங்கிவிட்டால் வேறு எதிலும் மனதைச் செலுத்தக் கூடாது. எடுத்த காரியத்திலேயே கவனம் முழுவதும் இருக்க வேண்டும். படிப்பு என்றால் படிப்பில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். வேலை என்றால் அதில் மட்டும் கவனம். ஒன்றை செய்யும்போதே மற்றொன்றில் மனம் தாவக் கூடாது.
இரண்டாவது,
"முறையுடன் உபாசித்து" : ("Completely engaged "): உபாசனை என்றால் இலயித்தல். அதோடு ஒன்றி. அது வேறு தான் வேறு என்று இல்லாமல், அதனோடு இணைந்து விடுவது. மனமும், உடலும், சிந்தனையும் செய்யும் வேலையில் இணைந்து செயல் படுவது.
மூன்றாவது,
"பக்தியுடன்" (Devotion ): செய்யும் வேலையில் ஒரு அர்ப்பணிப்புடன் செய்தால் அந்த வேலை வெற்றிகரமாக முடிவது மட்டும் அல்ல, அந்த வேலை நம் மீது ஒரு சிறந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை கொஞ்சம் மாற்றி யோசிப்போம்.
பொதுவாக நாம் எப்படி வேலை செய்கிறோம் ?
ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும் போதே முதலில் அதில் ஒரு சந்தேகம். இது சரிதானா, இதை நாம் செய்ய முடியுமா என்று .
பின் குழப்பம் , இதை விட அது சிறந்ததா, அப்படி செய்யலாமா,இப்படி செய்யலாமா என்று குழப்பம்.
பின் பயம், சரியாக வருமா, வராவிட்டால் என்ன செய்வது என்று.
பின் ஆசை, சரியாக வந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று.
இப்படி ஆயிரம் சலனங்களுக்கு நடுவே நாம் காரியம் செய்கிறோம்.
கீதை சொல்கிறது
- ஒன்று பட்ட சிந்தனையுடன்
- முழுமையாக ஈடுபட்டு
- ஒரு அர்ப்பணிப்பு மன நிலையில் இருந்து செயல் பட வேண்டும் என்கிறது.
சரி, அப்படி செய்தால் என்ன கிடைக்கும் ?
I like these three steps
ReplyDeleteமுதலாவது: