கீதை - 9.30 - பாவம் செய்பவனும் நல்லவனே - பாகம் 2
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥९- ३०॥
அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||
அபி = கூட
சேத் = ஆனால்
ஸுது³ராசாரோ = பாவ காரியங்களை செய்தாலும்
ப⁴ஜதே = பஜதே
மாம் = என்னை
அநந்யபா⁴க் = விலகாமல்
ஸாது = சாது
எவ = நிச்சயமாக
ஸ = அவன்
மந்தவ்ய: = கொள்ளப்படுவான்
ஸம்யக் = முழுவதும்
வ்யவஸிதோ = உறுதியுடன்
ஹி = நிச்சயமாக
ஸ: = அவன்
பாவ காரியங்களை செய்பவனாக இருந்தாலும், விட்டு விலகாமல் என்னை வழிபடுபவனை நல்லவன் என்றே கொள்ள வேண்டும், ஏன் என்றால் அவன் அதில் உறுதியாக இருக்கிறான்.
அது எப்படி பாவம் செய்து விட்டு பக்தி செய்தால் அது சரியாகி விடுமா ? அப்படி என்றால் எல்லோரும் எல்லா பாவங்களையும் செய்து விட்டு, அன்புடன் இறைவனை தொழுதால் போதுமா ? எல்லா பாவங்களும் போய் விடுமா ?
இது சரிதானா ? இது நடைமுறைக்கு சாத்தியப்பட்டு வருமா ?
முதலாவது, பாவம் என்பது வேறு, பாவம் செய்பவன் என்பவன் வேறு. பாவ காரியங்களை செய்யாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பாவம் செய்தவர்களை ஒதுக்க வேண்டும் என்றால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டோம்.
இரண்டாவது, பாவிகளை விலக்கி வைத்து விட்டால் , அவன் பாவம் செய்து கொண்டே இருப்பான். அது அவனுக்கும் நல்லது அல்ல, அவன் இருக்கும் சமுதாயத்திற்கும் நல்லது அல்ல. அவனை சரி செய்து அரவணைத்துக் கொள்ள வேண்டும். எப்படி ?
மூன்றாவது, பாவத்தில் இருந்து எப்படி விடுபடுவது ? பாவம் முதலில் மனதில் சிந்திக்கப் படுகிறது. பின் செயல் படுத்தப் படுகிறது. சிந்தனையை மாற்றினால் செயல் மாறும்.சிந்தனையை எப்படி மாற்றுவது ? கீதை ஒரு வழி சொல்கிறது - " விட்டு விலகாமல் என்னை வழிபடு " (Undivided Devotion ) என்கிறது.
அதாவது,மனதை பாவ காரியங்களில் இருந்து விலக்கி என்னை விட்டு விடாமல் நினை , வழிபடு என்கிறது.
மனமும் உடலும் பாவ காரியங்களுக்கு பழகி விட்டது. அதை மாற்ற வேண்டும் என்றால், மனதை முதலில் உயர்ந்த ஒன்றில் பதிக்க வேண்டும்.
உயர்ந்த ஒன்றில், உயர்ந்த நிலையில் மனதை செலுத்த வேண்டும். எதைச் சொன்னாலும் மனம் அதை ஆயிரம் கேள்வி கேட்கும். எனவே கிருஷ்ணன், "என்னில் பக்தி கொண்டு" என்று மனதை திசை திருப்ப ஒரு வழி சொல்கிறான்.
உங்களுக்கு கிருஷ்ணன் வேண்டாம் என்றால் வேறு சிறந்த எதில் வேண்டுமானாலும் மனதை திசை திருப்புங்கள். மனம் எங்கே செல்கிறதோ, உடல் அங்கே செல்லும். பாவத்தில் இருந்து விடுபட இது ஒரு வழி.
இப்படி பாவிகளைக் கூட நல் வழிப் படுத்த முயல்கிறது கீதை.
வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்தவர்
அருணகிரி பெண் பித்தராக இருந்தவர்
கண்ணப்பர் உயிர் கொலை புரியும் வேடவனாக இருந்தவர்
பாவத்தில் இருந்து மீண்டு நல்லவர்களாக மாற முடியும்.
பாவிகள் மீதும் கருணை மழை பொழிகிறது கீதை.
I like பாவிகள் மீதும் கருணை மழை பொழிகிறது கீதை உயர்ந்த ஒன்றில், உயர்ந்த நிலையில் மனதை செலுத்த வேண்டும். எதைச் சொன்னாலும் மனம் அதை ஆயிரம் கேள்வி கேட்கும். எனவே கிருஷ்ணன், "என்னில் பக்தி கொண்டு" என்று மனதை திசை திருப்ப ஒரு வழி சொல்கிறான்.
ReplyDeleteSakalam Krishna arpanam
I would like share one story here
ReplyDeleteTwo friends are there One wanted to go temple to listern to discourse on Ramayanam
another decided to go to Dasi's place . Here the friend who went to discourse on Ramayanam thought about his friend who gone to dasi 's place and imagine how happy he will be. The other person who went to Dasi's place always thought abt Discourse on Ramayanam and he attained Vaigundam !