Wednesday, September 23, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் - பாகம் 2

इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்

இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா? 
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.

======================== பாகம் 2 =====================================================

என் பக்தன் அறிவான் அறிவான் .

நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைவதில் ஒரு ஆர்வமும், ஒரு அர்பணிப்பான  (dedicated ) முயற்சியும், அடைய வேண்டும் என்பதில் ஒரு தீராக் காதலும் வேண்டும். அப்படி இருந்தால் தான்  நினைத்ததை அடைய முடியும். ஏனோ தானோ என்று செய்து, வந்தால் வரட்டும்,  வராவிட்டால் போகுது என்று என்று இருந்தால் நாம் நினைத்ததை அடைய முடியாது. அப்படியே அடைந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருக்காது. 

உலகில் உள்ள சாதாரண பொருள்களுக்கே அப்படி என்றால், ஒரு இறை தன்மையை அடைய வேண்டும் என்றால்  எவ்வளவு அர்பணிப்பும் (dedication ) ஒரு விருப்பும் இருக்க   வேண்டும் ?

இறை தன்மையை அடைய வேண்டும் என்றால் அதன் மேல் ஒரு விருப்பும், இடையறாத முயற்சியும் வேண்டும் அல்லவா ?

பக்தி என்றால் என்ன ? பக்தி என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. காதல், அர்பணிப்பு என்ற பொருள்கள் இந்த இடத்தில் பொருந்தி வரும். 

கண்ணன் மேல் காதலும், அவனை அடைய வேண்டும் என்ற அர்பணிப்பும் இருந்தால் கண்ணனை மட்டும் அல்ல நாமும் கண்ணன் போல ஆகி விடுவோம் என்று கண்ணனே கூறுகிறான். 

 இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

என் பக்தன் அறிவான் என்றால், ஏதோ கண்ணன் என்ற ஒரு உருவத்தின் மேல் பக்தி கொள்வது என்று அர்த்தம் அல்ல. கண்ணன் என்பது ஒரு நிலை. ஒரு படி. அந்த நிலையின் மேல் பக்தி கொண்டவன் அந்த நிலையை அடைவான் என்கிறான். 

மேலும்,

இறைதன்மையை அடைய வேறு வழி இல்லையா ? படித்து பார்த்து அதன் மூலம் அடைய  முடியாதா  ? ஞான மார்க்கம் உதவாதா ? கர்ம மார்க்கம் உதவாதா ?

பக்தியே அவனை அறியவும், அவன் நிலையை அடையவும் உதவும் என்கிறான். 

பக்தி என்றால் ஏதோ பூஜை பண்ணுவது, கோவிலுக்குப் போவது, மொட்டை அடிப்பது, படியில் உருளுவது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. 

பக்தி என்பது காதல். பக்தி என்பது சுயநலம் இல்லாத நிலை. எல்லாவற்றையும் அர்பணிப்பது. அப்படி அன்போடு அர்பணிக்கும் போது மனிதன் இறை நிலை அடைகிறான். 

சித்தமும் சொல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

என்பார் மணிவாசகர். அறிவு செல்லாது. ஞானம் உதாவது. ஆனால் பக்தி என்ற வலையில் அவன் அகப்படுவான் என்கிறார். 

அறிவு, ஞானம், க்ஷேத்ரம் இவற்றை பற்றி பேச வந்த கண்ணன், கடைசியில் என் பக்தன் இதை அறிவான் என்றான். 

அறிவுக்கும் பக்தியே அடிப்படை. 

அறிவு பக்தியில் தான் போய் முடியுமோ ?

கற்றதானால் ஆய பயன் என் கொல் , வாலறிவன் நற்றாள் தொழார் எனின் 

என்பார் வள்ளுவர். 

அவனைத் தொழுவது, அவனாகவே ஆக வேண்டும் என்று. 

அறிவு பக்தியில் கொண்டு போய் விடுகிறது. 

பக்தி இறைவனை தொழ வைக்கிறது. 

அந்த பக்தி இறைவனிடம் சேர்பிக்கும் என்கிறது கீதை. 

Sunday, September 20, 2015

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான்

கீதை - 13.18 - என் பக்தன் இதை அறிவான் 

इति क्षेत्रं तथा ज्ञानं ज्ञेयं चोक्तं समासतः ।
मद्भक्त एतद्विज्ञाय मद्भावायोपपद्यते ॥१३- १८॥

இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||

இதி = இதுவே

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்

ததா = அதே போல

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறியப்படுவது

ச = மேலும்

உக்தம் = சொல்லப்படுவது

ஸமாஸத:= தொகுத்து கூறினேன்

மத் பக்த = என் பக்தன்

ஏதத் = இந்த

விஜ்ஞாய = அறிந்த பின்

மத்³பா⁴வாய = என் தன்மையை 

உபபத்யதே  = அடைகிறான்

இதுவே க்ஷேத்ரம், அறிவு, அறியப்படுவது. இதை என் பக்தன் அறிவான். அறிந்த பின் என் தன்மையை அடைவான். 

இதுவரை கூறிய அனைத்தையும் இங்கே தொகுத்து உரைக்கிறான்.

இதுதான் அறிவு, அறியப்படுவது, அறியும் களம்.

சரி, இது யாருக்குக் கிடைக்கும் ?

என் பக்தன் இதை அடைவான் என்கிறான் கண்ணன்.

இது கொஞ்சம் உறுத்துகிறது. அது என்ன "என் பக்தன் அறிவான்" என்பது. கண்ணன் மேல்  பக்தி இல்லாதவர்கள் முட்டாள்களாவே இருக்க வேண்டியதுதானா ?

அறிவுக்கும், பக்திக்கும் என்ன சம்பந்தம் ?

போன ஸ்லோகத்தில் இந்த அறிவானது அனைத்து உயிர்களுக்கு உள்ளும் இருக்கிறது என்றான்.  இப்போது என்ன என்றால் , என் பக்தன் இதை அறிவான் என்கிறான்.

இது அறிவு சார்ந்த ஒன்றா ? அறிவை, ஞானத்தை அடைய வேண்டும் என்றால்  கண்ணன் மேல் பக்தி செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடைய வாதமா?
அப்படியே ஏற்றுக் கொண்டாலும், கண்ணன் மேல் பக்தி கொண்ட அனைவரும் ஞானிகளாக ஆகி விட்டார்களா.

கண்ணன் மேல் தீராத பக்தி கொண்ட அர்ஜுனன் பெரிய ஞானியாகி விட்டானா ?

பதினெட்டு அத்யாயம் கேட்ட பின்னும், அவனுக்கு தெளிவு பிறக்கவில்லை. மேலும்  மேலும் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

இதுவா ஞானம் ? அர்ஜுனனை விட கண்ணன் மேல் யார் பக்தி செய்ய முடியும் ?

சிந்திப்போம்.

கீதை - 13.17 - ஞான ஒளி

கீதை - 13.17 - ஞான ஒளி 

ज्योतिषामपि तज्ज्योतिस्तमसः परमुच्यते ।
ज्ञानं ज्ञेयं ज्ञानगम्यं हृदि सर्वस्य विष्ठितम् ॥१३- १७॥

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||

ஜ்யோதிஷம் = ஒளி வடிவானது, அனைத்து ஒளிகளுக்கும் மூலமானது 

அபி = இருந்தும்

தத் = அது

ஜ்யோதிஸ் =  ஒளி தருகிறது

தமஸ: = இருளிலும்

பரம் = உயர்ந்த

உச்யதே = கூறப்பட்டது

ஜ்ஞாநம் = அறிவு

ஜ்ஞேயம் = அறிதல் 

ஜ்ஞாநக³ம்யம் = அறியப்படுவது

ஹ்ருதி³ = மனதில்

ஸர்வ = அனைத்திலும்

ஸ்யவிஷ்டிதம் = இருப்பது

அது ஒளி வடிவானது. அனைத்து ஒளிகளுக்கும் ஆதாரமானது. 
உயர்ந்தது. இருளையும் அறியச் செய்வது. அதுவே அறிவு, அறிதல் மற்றும் அறியப்படுவது. அனைத்து உயிர்களின் மனதிலும் இருப்பது. 

இது வரை கண்ணன் ஞானத்தையும், ஞான க்ஷேத்ரத்தையும் பற்றி கூறி வந்தான்.

அந்த ஞானம் எங்கே இருக்கிறது, அதன் பலன் என்ன, அதை எப்படி அடைவது என்று  இங்கே சொல்கிறான்.

"அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியானது".

அது ஒளி வடிவானது. ஒளிகளுக்கெலாம் ஆதாரமானது.

அப்படி என்றால் என்ன ? அது என்ன ஒளி ? சூரிய ஒளியா ? விளக்கின் ஒளியா ?  என்ன  ஒளி அது ?

இங்கு ஒளி என்று சொல்லப் படுவது வெளி உலகின் ஒளி அல்ல. தெளிந்த அறிவே  அல்லது ஞானமே இங்கு ஒளி என்று சொல்லப் படுகிறது.

இப்போது ஸ்லோகத்தின் அர்த்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

அது ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறது.

நாம் ஒரு பொருளை பார்க்கும் போது என்ன நிகழ்கிறது.

அந்தப் பொருளின் மேல் விழும் ஒளி , பிரதிபலித்து நம் கண்களை அடைகிறது. கண் திறந்து இருந்தாலும், ஒளி வந்து நம் விழித் திரையில் விழுந்தாலும் நம் அறிவு  அது இன்னது என்று அறிந்து சொல்லாவிட்டால் நம்மால் அந்தப் பொருள்  இன்னது என்று அறிய  முடியாது.

விளக்கின் ஒளியோ அல்லது சூரியனின் ஒளியோ அது எந்த ஒளியாக இருந்தாலும்  அந்த ஒளியையும் கண்டு  சொல்லுவது நம் அறிவே. அந்த அறிவே  ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக  விளங்குவது.

அதுவே இருளையும் அறிந்து கொள்ள உதவுகிறது.

எந்த வெளிச்சமும் இருளை அறிந்து கொள்ள முடியாது. ஒரு மெழுகுவர்தியின் சுடரிடம் இருள் எப்படி இருக்கும் என்றால் கேட்டால் அதற்குத்  தெரியாது. இருள் என்பதை ஒளி அறியவே முடியாது.

ஆனால் நம் அறிவென்ற ஒளி இருளையும் அறியும்.

அதுவே உயர்வானது.

அந்த அறிவு, ஞானம் இல்லை என்றால் எத்தனை வெளிச்சம் வெளியில் இருந்தாலும்  நம்மால் ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாது.

சரி, இது என்ன பெரிய  விஷயமா . நம் அறிவு நமக்கு உலகை அறிந்து கொள்ள உதவுகிறது. இதைச் சொல்ல கண்ணனும், வியாசரும் வேண்டுமா ?

 வேண்டாம்தான்.

ஆனால், அடுத்து சொல்லப் போகும் விஷயம் மிக மிக முக்கியமானது.

அந்த  அறிவை எப்படி பெறுவது ? எதைப் படித்தால் அதைப் பெற முடியும்  ? எந்த  குரு நமக்கு அதைத் தர முடியும் ?

கண்ணன் சொல்லுகிறான் - அந்த அறிவொளியானது அனைத்து உயிர்களின் மனத்திலும்  இருக்கிறது.

ஞானம் உள்ளே இருக்கிறது.  அது வெளியில் இருந்து வருவது இல்லை.

நமக்குள் இருக்கும் அந்த ஞானத்தை நாம் அறியாமல்  இருக்கிறோம்.

கீதை , அதை நமக்கு  உணர்த்துகிறது.

நீங்கள் எங்கும் போக  வேண்டாம்.யாரையும் கேட்க வேண்டாம். எதையும் படிக்க  வேண்டாம். உங்களுக்குள் அந்த உயர்ந்த ஞானம் இருக்கிறது என்று   நம்புங்கள்.  அதை  உணருங்கள்.

"உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற" என்பார் மணிவாசகர்.

"அடியேன் அறிவிற்கு அளவானது அதிசயமே " என்று அதிசயப்படுகிறார் அபிராமி பட்டர்.

அறிவோம்

Saturday, September 19, 2015

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும்

கீதை - 13.16 - அது பிரிந்தும் பிரியாமலும் 

अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥

அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||

அவிபக்தம் = பிரியாத, பிளவு படாத

 ச = மேலும்

பூதேஷு = அனைத்து உயிர்களிலும்

விப⁴க்தம் = பிரிந்து

இவ = இதே மாதிரி, இது போல

ச = மேலும்

ஸ்திதம் = இருந்து

பூத = உலகை

பர்த்ரு = தாங்கி

ச = மேலும்

தத் = அது

ஜ்ஞேயம் = அறிந்து கொள்

க்ரஸிஷ்ணு  = உள்வாங்கிக் கொள்வது  , கிரகித்துக் கொள்வது 

ப்ர பவிஷ்ணு = உற்பத்தி செய்வது 

ச = மேலும்

உயிர்களில் பிரிந்தும் பிரியாமலும் இருப்பது. அதுவே பூதங்களைத் உருவாக்கிறது, தாங்குகின்றது, பின் உள்வாங்கிக் கொள்கிறது. 

நவீன அறிவியலும், கணிதமும், தர்கமும் நம் அறிவை ஒரே வழியில் செலுத்துகின்றன. முரண்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

எப்படி ஒன்று பிரிந்தும் இருக்கும், பிரியாமலும் இருக்கும்.

உயிர்களை விட்டு பிரியாமல் அவற்றின் உள்ளே இருக்கும், பிரிந்து அவற்றிற்கு வெளியேயும்  இருக்கும் ?

ஒண்ணு உள்ளே இருக்கணும், இல்லை வெளியே இருக்கணும் என்று தான் நம் மனமும்  அறிவும் எண்ணும் .

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் மின்சாரம் எங்கும் இருக்கிறது. அதுவே ஒரு  விளக்கினுள், ஒரு தொலைக்காட்சி பெட்டியுனுள், ஒரு மின் விசிறியில் செல்லும்போது  அந்த கருவியின் உள்ளே சென்று ஒரு வித செயல் பாட்டைத் தருகிறது. ஒளியாக, நிழற் படமாக, காற்றாக வெளிப் படுகிறது.

மின்சாரம் அந்த கருவிகளுக்கு வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. உள்ளே இருக்கும் போது , எதன் உள் இருக்கிறதோ அதற்கு தகுந்த  மாதிரி செயல் படுகிறது. எப்படி ஒரே மின்சாரம் குளிரவும் வைக்கிறது, சுடவும் வைக்கிறதோ அது போல எங்கும் நிறைந்திருக்கும் அந்த சக்தி ஒவ்வொரு   உயிரிலும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது.

மின்சாரம் பற்றி அறியாத ஒருவன் என்ன நினைப்பான் ? அது எப்படி ஒரே மின்சாரம் இப்படி மாறுபட்ட செயல்களைச் செய்ய முடியும் ? ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாத செயல்களை செய்ய முடியும் என்று நம்ப மறுப்பான். மின்சாரம் பற்றிய அறிவை அடைந்தால், அது விளங்கும்.

அதைத்தான் வியாசர் இங்கு சொல்கிறார்.

மின்சாரம் போன்ற ஒரு சக்தி இருக்கிறது. அது என்னவெல்லாம் செய்கிறது தெரியுமா ?

அனைத்து பூதங்களையும் உருவாக்கிறது.
அவற்றை காக்கிறது.
அவற்றை உள் வாங்கிக் கொள்கிறது.

அப்படி ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு அப்புறம் வருவோம்.

அபப்டி ஒரு சக்தி இருக்க முடியும் என்று தோன்றுகிறது அல்லவா ?

அதுவே ஒரு நல்ல ஆரம்பம்தான்.

Wednesday, September 16, 2015

கீதை - 13.15 - அது தூரத்தில் இருக்கிறது. அருகில் இருக்கிறது. - பாகம் 5

கீதை - 13.15 -  அது தூரத்தில் இருக்கிறது. அருகில் இருக்கிறது.   - பாகம் 5

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||

பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.

முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?

அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.

===================பாகம் 4 ==============================================

ஸூக்ஷ்மத்வாத் = அது நுண்மையானது.

நுண்மையானது என்றால் என்ன. ரொம்ப ரொம்ப சின்னது என்று அர்த்தமா ?

இல்லை.

லட்டு தின்கிறோம். லட்டு கண்ணுக்குத் தெரிகிறது. அதன் எடை தெரிகிறது. அதன் நிறம் தெரிகிறது. ஆனால் சுவை தெரியாது. அந்த இனிப்பு நுண்மையானது. அந்த இனிப்பு எங்கே இருக்கிறது ? லட்டில் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனாலும் அது தெரிவது இல்லை.

சுவிட்சை ஆன் செய்தால் வெளிச்சம் வருகிறது. வெளிச்சம் வரும் பல்பு தெரிகிறது. அதன் கட்டமைப்பு தெரிகிறது. ஆனால் , அந்த வெளிச்சத்தை உண்டாக்கும்  மின்சாரம் தெரியாது. அது நுண்மையானது. அது தான் செயல் படுத்துகிறது.  ஆனால் , அது தெரியாது.

ஒருவர் நம்மிடம் பேசுகிறார்.  அவர் பேசுவது நமக்கு கேட்கிறது. அவர் வாய் அசைவது கண்ணுக்குத் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் அவர் நாக்கு அசைவது கூடத் தெரியும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவர் குரல் நாங்கள் (Vocal chord ) அசைவது கூடத் தெரியலாம். அந்த குரல் நாணை அசையச் செய்வது எது ? அது தெரியாது. அது தான் சப்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால், அது தெரியாது. அது நுண்ணியமானது.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், செயல் பாடு தெரியும். செயல் படுத்தும் அந்த சக்தி தெரியாது. அது நுண்ணியமானது.

இந்த உலகம் தெரிகிறது. அதில் உள்ள பொருள்களும், உயிர்களும் தெரிகிறது. அவற்றின் செயல் பாடு தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு நுண்ணிய ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ?  அதை அறிய வேண்டும். அதை அறிந்தால், அனைத்தும் அறிந்த மாதிரி தான்.

மின்சாரத்தை அறிந்து கொண்டால், அது எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் அல்லவா. ஒவ்வொரு பல்பாகப் போய் சோதனை செய்ய வேண்டாம். எல்லா பல்பிலும் அது அப்படித்தான் வேலை செய்யும் என்று நாம் அறிந்து கொள்வதைப் போல.

உலகத்தின் பின்னால் உள்ள அந்த நுண்ணிய ஒன்றை புரிந்து கொண்டால் எல்லாம் அறிந்து கொண்ட மாதிரிதான்.

இன்னமும் இருக்கிறது இந்த ஸ்லோகத்தில் ...

=================== பாகம் 5 =============================================

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

அது எப்படி தூரத்திலும் அருகிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் ?

சில பேர் மூக்குக் கண்ணாடியை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து விட்டு பேசுவார்கள். பின் சிறிது நேரம் கழித்து , கண்ணாடியை எங்கே வைத்தேன் , எங்கே வைத்தேன் என்று வீடெலாம் தேடுவார்கள். யாரவது வந்து, "என்ன தேடுகிறீர்கள் " என்று கேட்டால், "இந்த மூக்குக் கண்ணாடியை எங்கேயோ வைத்து விட்டேன்..எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை ..தேடுகிறேன்" என்பார்கள். 

"அது தான் உங்க நெத்தி மேலேயே இருக்கே " என்று சொன்னவுடன் , "அட , ஆமா இங்கே தான் இருக்கு...இதை விட்டு விட்டு என்கலாமோ தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று அசடு வழிவார்கள். 

சட்டைப் பையில் பேனாவை வைத்துக் கொண்டு, வீடெலாம் தேடுவது இல்லையா...அது போலத்தான். 

புரியாதவரை , அறியாதவரை, அது தூரத்தில்தான் இருக்கும். புரியும் போது , அறியும் போது அது அருகில் இருக்கும். அருகில் என்ன அருகில், உங்களுக்குள்ளேயே இருக்கும். எங்கும் தேட வேண்டாம். 

உள்ளம் பெரும் கோவில்,ஊனுடம்பு ஆலயம் என்பார் திருமூலர். 

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'

இந்த உடம்பாகிய கோவிலுக்குள்ளே இருப்பான் அவன்  என்கிறார்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்பார் மணிவாசகர்.

எப்போதும் உள்ளேயே இருப்பவன்.

ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க  மேலும் மேலும் பொருள் தருவது கீதை.

கீதை - 13.15 - அது நுண்மையானது - பாகம் 4

கீதை - 13.15 -  அது நுண்மையானது  - பாகம் 4

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||

பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.

முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?

அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.

===================பாகம் 4 ==============================================

ஸூக்ஷ்மத்வாத் = அது நுண்மையானது.

நுண்மையானது என்றால் என்ன. ரொம்ப ரொம்ப சின்னது என்று அர்த்தமா ?

இல்லை.

லட்டு தின்கிறோம். லட்டு கண்ணுக்குத் தெரிகிறது. அதன் எடை தெரிகிறது. அதன் நிறம் தெரிகிறது. ஆனால் சுவை தெரியாது. அந்த இனிப்பு நுண்மையானது. அந்த இனிப்பு எங்கே இருக்கிறது ? லட்டில் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனாலும் அது தெரிவது இல்லை.

சுவிட்சை ஆன் செய்தால் வெளிச்சம் வருகிறது. வெளிச்சம் வரும் பல்பு தெரிகிறது. அதன் கட்டமைப்பு தெரிகிறது. ஆனால் , அந்த வெளிச்சத்தை உண்டாக்கும்  மின்சாரம் தெரியாது. அது நுண்மையானது. அது தான் செயல் படுத்துகிறது.  ஆனால் , அது தெரியாது.

ஒருவர் நம்மிடம் பேசுகிறார்.  அவர் பேசுவது நமக்கு கேட்கிறது. அவர் வாய் அசைவது கண்ணுக்குத் தெரிகிறது. இன்னும் உற்றுப் பார்த்தால் அவர் நாக்கு அசைவது கூடத் தெரியும். இன்னும் ஆழ்ந்து பார்த்தால் அவர் குரல் நாங்கள் (Vocal chord ) அசைவது கூடத் தெரியலாம். அந்த குரல் நாணை அசையச் செய்வது எது ? அது தெரியாது. அது தான் சப்த்தத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால், அது தெரியாது. அது நுண்ணியமானது.

இப்படி எதை எடுத்துக் கொண்டாலும், செயல் பாடு தெரியும். செயல் படுத்தும் அந்த சக்தி தெரியாது. அது நுண்ணியமானது.

இந்த உலகம் தெரிகிறது. அதில் உள்ள பொருள்களும், உயிர்களும் தெரிகிறது. அவற்றின் செயல் பாடு தெரிகிறது. இவற்றிற்கு பின்னால் ஏதோ ஒரு நுண்ணிய ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ?  அதை அறிய வேண்டும். அதை அறிந்தால், அனைத்தும் அறிந்த மாதிரி தான்.

மின்சாரத்தை அறிந்து கொண்டால், அது எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும் அல்லவா. ஒவ்வொரு பல்பாகப் போய் சோதனை செய்ய வேண்டாம். எல்லா பல்பிலும் அது அப்படித்தான் வேலை செய்யும் என்று நாம் அறிந்து கொள்வதைப் போல.

உலகத்தின் பின்னால் உள்ள அந்த நுண்ணிய ஒன்றை புரிந்து கொண்டால் எல்லாம் அறிந்து கொண்ட மாதிரிதான்.

இன்னமும் இருக்கிறது இந்த ஸ்லோகத்தில் ...

Tuesday, September 15, 2015

கீதை - 13.15 - அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 3

கீதை - 13.15 -  அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 3

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||

பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

======================= பாகம் 3 =========================================

உலகில் எத்தனையோ மதங்கள். ஒவ்வொரு மதத்திலும் எத்தனையோ உட் பிரிவுகள். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் சைவம் , வைணவம் என்ற இரண்டு பெரிய  பிரிவுகள். அவற்றிற்குள் சண்டை சச்சரவு. மற்ற மதங்களிலும் இது போன்ற பிரிவுகளும் சண்டைகளும் உண்டு.

மிகப் பெரிய சமய பெரியார்கள் கூட இந்த பிரிவினைக்கு வழி வகுக்கின்ற மாதிரிதான்  பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்.

ஏன் ?

நான்கு பேர்  ஒரு கோவிலுக்கு போக வேண்டும் என்று கிளம்பினார்கள். ஒவ்வொருவர் இருக்கும் இடமும் வெவ்வேறு. ஒருவர் கோவிலுக்கு கிழக்கே இருக்கிறார், ஒருவர் மேற்கே, மற்றவர் வடக்கே, இன்னொருவர் தெற்கே.

முதாலமவர் , அந்த ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் அந்த கோவிலுக்கு எப்படி போவது  என்று கேட்டார். பெரியவர் சொன்னார் "நேரே மேற்கே 5 கிலோ மீட்டர் தூரம் போய் , இடது புறம் திரும்பி, அங்கே ஒரு பள்ளிக் கூடம் வரும், அதில் வலது புறம் திரும்பி, 1 கிலோ மீட்டர் போனால் கோவில் வரும் " என்றார்.

அடுத்தவரும், அந்த ஊரில் உள்ள இன்னோர் பெரியவரிடம் வழி கேட்டார். அந்த பெரியவர் சொன்னார் "நேரே கிழக்கே 8 கிலோமீட்டர் போனால் ஒரு குளம் வரும், அந்த குளத்தை சுத்திக் கொண்டு வலது புறம் போனால் 2 கிலோ மீட்டரில் கோவில் வரும் " என்றார்.

இதே போல மற்ற இருவருக்கும் வழி சொன்னவர்களும், அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கோவிலுக்குப் போக வழி சொன்னார்கள்.

இந்த நாலு வழியும் வேறு வேறு மாதிரி இருக்கும். நாலும் கோவிலுக்குத்தான் போகிறது. இருந்தும் வேற வேற வழி.

இந்த நாலு பேரும் கோவிலுக்குப் போகாமல் , அவர்களுக்குக் கிடைத்த வழிகளைப் பற்றி விவாதித்திருந்தால் குழம்பிப் போய் விடுவார்கள்.

ஒரே கோவிலுக்கு எப்படி நாலு வழி இருக்கும் ? அதுவும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் என்று. இல்லை, இந்த நாலுமே தவறான வழிகள் என்று முடிவு செய்து  இருப்பார்கள். அல்லது, என் வழிதான் சரியானது, என்று அவர்களுக்குள்  சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்.

வழிகள் வேறு ...ஏன் என்றால், புறப்பட்ட இடம் வேறு.

எல்லோரும் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டு, ஒரே இடத்தை அடைவதானால் ஒரே ஒரு வழி இருந்திருக்கும்.

புறப்படும் இடம் வேறு, சேரும் இடம் ஒன்று என்றால் வழி எப்படி ஒன்றாக இருக்க முடியும் ?

அந்தந்த கால கட்டத்தில், அந்த சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு சில வழிகள் சொல்லப் பட்டன. மக்களின் அறிவு, அவர்களின் வேலை செய்யும் சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் இருந்த பெரியவர்கள் ஒரு வழி சொல்லி இருப்பார்கள்.

அந்த நான்கு பேரும் கோவிலுக்கு அருகில் வந்து விட்டால், வழிகள் மறைந்து போகும். கோவில் தான் கண்ணுக்குத் தெரிகிறதே. பின் வழி எதுக்கு ?

உண்மை தெரிந்து போனால், மதமும், மார்கமும் தேவை இல்லை.

அது வரை, அது ஆளாளுக்கு மாறும்.

இரயில் பெட்டியில் இருப்பவனுக்கு அசையாமல் இருப்பது போலத் தெரிவது, வெளியில் இருப்பவனுக்கு அசைவது போலத் தெரியும்.

அசைவதும் உண்மை தான், அசையாததும் உண்மைதான்.

உண்மை என்பது பார்பவனைப் பொறுத்து மாறும்.

அவனுக்கு அது உண்மை. எனக்கு இது உண்மை.

இதில் சண்டை போட என்ன இருக்கிறது ?

சமயங்களையும், மார்க்கங்களையும், வைத்துக் கொண்டு சண்டை போடுவது சிறுபிள்ளைத்தனம்.

இதைத்தான் கீதை சொல்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது.

ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயங்கள் இருக்கலாம். அது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது.

சிந்திக்க சிந்திக்க ஆழ்ந்த அர்த்தங்களைத் தருவது கீதை.

சிந்திப்போம்.

Monday, September 14, 2015

கீதை - 13.15 - அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2

கீதை - 13.15 -  அது அசைகிறது, அசையாமல் இருக்கிறது - பாகம் 2 

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||

பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

அது எப்படி ஒன்று அசையும் செய்யும் ? அசையாமலும் இருக்கும் ?

ஒன்று அசைகிறது என்று சொன்னால் , அது அசைய இடம். .அந்த இடம், அசையும் அந்த பொருளில் இருந்து வேறு பட்டதாய் இருக்க வேண்டும்.

எங்கும் நிறைந்த ஒன்று எப்படி அசையும் ? அது அசைத்து வேறு எங்கு போகும் ?

அது தான் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறதே.

முந்தைய பகுதியில், அது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து இருக்கிறது என்று பார்த்தோம். அப்படி நிறைந்த ஒன்று அசைய முடியாது அல்லவா ?

சரி, அசைய முடியாது என்று ஏற்றுக் கொண்டால், பின் அசைகிறது என்றும் வருகிறதே. அது எப்படி ?

நீங்கள் ஒரு இரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் அருகில் ஒரு அமர்ந்து இருக்கிறார். அவரைப் பொருத்தவரை நீங்கள் அசையாமல் அந்த இரயில் பெட்டியிலேயே இருக்கிறீர்கள். ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு நீங்கள் இரயிலின் வேகத்தில் செல்வது போலத்தான் இருக்கும்.

இப்போது, நீங்கள் அசைகிறீர்களா ? அல்லது அசையாமல் இருக்கிறீர்களா?

இரண்டும் தான்...அது பார்ப்பவர் பார்வையைப் பொருத்தது அல்லவா ?

அது போல எங்கும் நிறைந்த அந்த ஒன்று, பார்ப்பவர் பார்வையை பொறுத்து அசைவது போலவும் இருக்கும். அசையாதது போலவும் இருக்கும்.

இந்த வரி மிக ஆழமான வரி. இதை சரியாகப் புரிந்து கொண்டால் இறைவன் என்றால் என்ன, ஏன் இத்தனை சமயங்கள், இத்தனை வழி பாடுகள், இத்தனை வழிபடும்  முறைகள் என்று நமக்குப் புரியவரும்.

எத்தனையோ சமய பெரியவர்கள் தோன்றி இருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள். எது சரி, எது தவறு என்று நாம் குழம்பிப் போகிறோம்.

எப்படி ஒன்றுக்கு ஒன்று முரணானவை , இரண்டும் சரியாக இருக்க முடியும் ? ஒன்று இது சரியாக இருக்க வேண்டும், அல்லது அது சரியாக இருக்க வேண்டும்.

அத்வைதம், த்வைதம், விஷிஷ்டாத்வைதம் என்று சொல்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. எப்படி எல்லாமே சரியாக இருக்க முடியும் ?

உருவ வழிபாடு சரியா இல்லையா ? இறைவன் ஒருவனா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவனா ?

இவை அனைத்திற்கும் இந்த ஒரு வரி தீர்வு சொல்கிறது.

எப்படி என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.

Saturday, September 12, 2015

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது

கீதை - 13.15 - உள்ளும் புறமும், அருகிலும், தூரத்திலும் இருப்பது

बहिरन्तश्च भूतानामचरं चरमेव च ।
सूक्ष्मत्वात्तदविज्ञेयं दूरस्थं चान्तिके च तत् ॥१३- १५॥

ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||

பஹிரந்தஸ் = பஹி + அந்தஸ் = வெளியே உள்ளே

ச = மேலும்

பூதாநாம் = அனைத்து உயிர்களிலும்

அசரம் சரம் = சரம் என்றால் அசைவது; அசரம் என்றால் அசையாதது

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

ஸூக்ஷ்மத்வாத் = நுண்ணிய (சூக்ஷுமம் = நுண்ணியது)

தத்  = அது

அவிஜ்ஞேயம் = அறிய முடியாத

தூ³ரஸ்த²ம் = தூரத்தில் உள்ளது

சா = மேலும்

அந்திகே = அருகில் உள்ளது

ச = மேலும் அது

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது. அசைவது, அசையாதது. நுண்மையானது. அறிய முடியாதது. தூரத்தில் இருப்பது. அருகில் இருப்பது.

சரிதான். மண்டை குழம்ப வேறு எங்கேயும் போக வேண்டாம். கீதையில் இரண்டு சுலோகம்   படித்தால் போதும் போல் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

பொறுமையாக, ஒவ்வொரு சொல்லாக பிரித்துப் படித்தால் பொருள் விளங்கும்.

விளங்கிக் கொள்ள முயற்சிப்போம்.

அனைத்து உயிர்களுக்கும் உள்ளேயும் வெளியேயும் உள்ளது

அது எப்படி ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் ? சாஸ்வதமான
உண்மை உள்ளும் புறமும் இருக்கும் என்றால் புரியுமா ? புரியாது.

சரி, ஒரு எளிய உதாரணம் பார்போம்.

உங்கள் வீட்டில் தொலைக் காட்சி பெட்டி இருக்கிறது. அதில் பல நிலையங்களில் இருந்து ஒலி ஒளி அலைகள் வந்து சேர்கிறது. ஆனால் , அனைத்து நிலையத்திலும் உள்ள அலைகள் ஒரே நேரத்தில் தெரிகிறதா என்றால் இல்லை. நீங்கள் எந்த நிலையத்தை தேர்வு செய்கிறீர்களோ அந்த நிலையத்தின் அலை வரிசையில் உள்ளதை நீங்கள் காண முடியும். அனைத்து நிலையங்களின் அலைகள் எங்கும் நிறைந்து இருக்கின்றன. அவை தொலை காட்சி பெட்டிக்கு  வெளியேயும் இருக்கிறது. உள்ளேயும் இருக்கிறது. அது உள்ளே போய் விட்டால் , பின் வெளியே எப்படி இருக்கும் ? உங்கள் பக்கத்து வீட்டுக்காரரும்  அதே நிலையத்தின் ஒளி  பரப்பை பார்க்கிறார். உங்கள் பெட்டிக்கு உள்ளேயும்  இருக்கிறது. உங்கள் பெட்டிக்கு வெளியேயும் இருக்கிறது. அவர் பெட்டிக்கு உள்ளேயும் இருக்கிறது.

ஒன்று உள்ளேயும் வெளியேயும் இருக்க முடியும் என்பது புரிகிறது அல்லவா ?
இது தொலை காட்சி பெட்டிக்கு மட்டும் அல்ல.

வானொலிக்கும் பொருந்தும்.

அவ்வளவு ஏன் ?

ஒரு வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது அனைத்து மாணவர்களின் காதிலும் விழுகிறது. அவர்களின் உடலுக்கு உள்ளே போகிறது. மூளையை சென்று அடைகிறது. அதே சமயம்,  முன் வரிசையில் உள்ள மாணவனின் மண்டைக்குள் சென்ற ஆசிரியரின் சொல் அந்த மாணவனுக்கு வெளியே   சென்று கடைசி வரிசையில் உள்ள மாணவனையும் சென்று அடைகிறது.

உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது.

அது போல, உண்மை  / ஆத்மா / உயிர் என்று சொல்லப்படும் அது அனைத்துக்கும் உள்ளேயும் இருக்கிறது. வெளியேயும் இருக்கிறது.

உங்களுக்கு உள்ளும் இருக்கிறது.

உங்களுக்கு வெளியேயும் இருக்கிறது.

எனக்குள்ளும் இருக்கிறது.

அதற்கு பெயர் என்னவேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்.

உண்மை, பிரமம் , சக்தி, உயிர் , ஆத்மா...பெயரில் என்ன இருக்கிறது. ஏதோ ஒன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.

அது அசைகிறது. அது அசையாமல் இருக்கிறது...

அது எப்படி ஒன்று அசையும் செய்யும், அசையாமலும் இருக்கும்...

சிந்திப்போம்...

Wednesday, August 5, 2015

கீதை - 13.14 - குணம் இல்லாதது, குணங்களை அனுபவிப்பது

கீதை - 13.14 - குணம் இல்லாதது, குணங்களை அனுபவிப்பது

सर्वेन्द्रियगुणाभासं सर्वेन्द्रियविवर्जितम् ।
असक्तं सर्वभृच्चैव निर्गुणं गुणभोक्तृ च ॥१३- १४॥

ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் | 
அஸக்தம் ஸர்வப்⁴ருச்சைவ நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு ச || 13- 14||

ஸர்வேந்த்ரிய = சர்வ + இந்திரிய = அனைத்து புலன்களின் 

குணாபாஸம் = குண + அபாச = குணங்களை ஒளிரச் செய்வது 

ஸர்வேந்த்ரிய = அனைத்து புலன்களையும் 

விவர்ஜிதம் = விட்டு விலகி நிற்பது 

அஸக்தம் = தனித்து நின்று 

ஸர்வ = அனைத்து 

ப்ருச் = நிர்வகிப்பது  

ச = மேலும் 

ஏவ = நிச்சயமாக 

நிர்குணம் = குணம் ஏதும் இல்லாதது 

குணபோக்த்ரு ச = குணங்களை அனுபவிப்பது 

அனைத்து புலன்களையும் ஒளிரச் செய்வது. அனைத்து புலன்களுக்கும் வெளியே நிர்ப்பது. பற்றில்லாதது; அனைத்தையும் நிர்வகிப்பது ; குணமற்றது; குணங்களைத் அனுபவிப்பது.

வாழ்வின் மிகப் பெரிய கேள்வி எது என்றால் , "நான் யார் ?" என்பதுதான்.

நான் என்பது எது அல்லது யார் ?

என் உடலா ? மனமா ? அறிவா ? என் ஞாபகங்களா ? மூளையா ?

நான் என்பது ஒரு தனி ஆள் இல்லை. நான் படித்தது, எனக்கு சொல்லப் பட்டது, என் அனுபவங்கள், நான் இருக்கும் சமுதாயத்தின் எண்ணங்கள் இவை எல்லாம்  கலந்ததுதான் பொதுவாக நான் என்று பரினமிக்கிரது.

ஆனால் , இவை இல்லாம் நானா ? நாளை வேறு ஒரு புத்தகத்தை படித்தால் என்  எண்ணங்கள் மாறலாம். நான் சரி என்று நினைத்தது தவறாகிப் போகலாம். தவறென்று நினைத்தது சரியாகியும் போகலாம்.

நேற்று ஆத்திகனாக இருந்தவன், இன்று நாத்திகனாக மாறலாம்.

அப்படி என்றால் நான் யார் ?

ஆத்திகனாக இருந்தா நான் யார் ?

இப்போது நாத்திகனாக மாறிய நான் யார் ?

இது எல்லாவற்றிற்கும் அடிப்படையில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அந்த ஒன்று எது  ?

அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.

"அனைத்து புலன்களையும் ஒளிரச் செய்வது. அனைத்து புலன்களுக்கும் வெளியே நிற்பது "

அது என்ன ஒளிரச் செய்வது ? வெளியே நிற்பது.

ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம்....

மின்சாரம் எத்தனையோ வேலைகளை செய்கிறது. விளக்கில் ஒளி விடுகிறது; இஸ்திரி பெட்டியில்  சூடு தருகிறது, மின் விசிறியை சுழலச் செய்கிறது, இரயில் பெட்டியை  ஓட வைக்கிறது. அனைத்து கருவிகளையும் இயக்குகிறது. ஆனால், அவற்றிற்கு வெளியே இருக்கிறது அந்த மின்சாரம்.

சர்க்கரை, எத்தனையோ பண்டங்களில் எத்தனையோ சுவையைத் தருகிறது. ஆனால்  அந்தப் பண்டங்கள் சர்க்கரை அல்ல. சர்க்கரை அவற்றிற்கு வெளியே இருக்கிறது.

சூரிய ஒளி அனைத்து பொருள்களின் மேலும் விழுந்து அவற்றை ஒளிரச் செய்கிறது. ஆனால் அந்த பொருள்கள் சூரிய ஒளி அல்ல.

அது போல, நம் புலன்கள் நமக்கு பார்க்க, கேட்க, முகர என்றெல்லாம் உதவி செய்கின்றன. இவற்றை நடத்தி வைப்பது உள்ளே உள்ள ஒன்று. அது, இந்தப் புலன்கள் அல்ல.

"பற்றில்லாதது;"

அது இந்த புலன்களைப் பற்றிக் கொள்ளாது. புலன்கள் வேலை செய்ய, புலன்கள் தரும்   செய்திகளை மூளை அறிய அது உதுவும். ஆனால் , அது புலன்களோ, அறிவோ அல்ல. இவற்றோடு சேராதது. பற்றில்லாதது.

"அனைத்தையும் நிர்வகிப்பது"

புலன்கள் வெளி உலகில் இருந்து வரும் சங்கதிகளை நம் மூளைக்கு அனுப்புகிறது. மூளை அவற்றை ஆராய்ந்து அவை என்ன என்று முடிவு செய்கிறது. பின், அதற்க்கு தகுந்த மாதிரி முடிவு எடுக்கிறது. முடிவு எடுத்த பின் , அவற்றை வேறு புலன்களுக்கு செலுத்துகிறது.

பாம்பு என்று கண் பார்த்துச் அந்த உருவத்தின் பிம்பத்தை மூளைக்கு அனுப்புகிறது.

மூளை " வளைத்து வளைந்து இருக்கிறது, நகர்கிறது, புஸ் புஸ் என்று சத்தம் வருகிறது...இது பாம்புதான் என்று முடிவு செய்கிறது. பின் கால்களுக்கு கட்டளை இடுகிறது....."ஓடு' என்று. கால்கள் ஓடுகின்றன.

இப்படி, "அது" எல்லாவற்றையும் நிர்வகிக்கிறது.

"குணமற்றது, குணங்களை அனுபவிப்பது"

அதற்கென்று ஒரு குணமும் இல்லை. ஆனால், அது அனைத்து குணங்களையும்  அனுபவிக்கிறது.

அதைப் பற்றி மேலும் வியாசர் சொல்கிறார்.

அறிவை அறிவது என்பது என்ன அவ்வளவு சுலபமா ?

Tuesday, July 21, 2015

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது - பாகம் 2

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது  - பாகம் 2

सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥

ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||

ஸர்வத:= அனைத்து பக்கங்களிலும்

பாணி = கைகள்

பாத³ம் = கால்கள்

தத் = அது

ஸர்வத் = அனைத்து பக்கங்களிலும்

அ க் ஷிஸிரோ முக ம் = கண்ககளும், தலையும், முகமும் கொண்டது

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸ்ருதி = செவி

லோகே = உலகில்

ஸர்வம் ஆவ்ருத்ய = எல்லாவற்றையும் சூழ்ந்து

திஷ்ட²தி = நிற்கிறது

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கை கால்கள் இருக்கும், எங்க பார்த்தாலும் கண்ணும், வாயும் இருக்கும், செவி இருக்கும், எல்லாவற்றையும்  சூழ்ந்து நிற்கும் ஒன்றை எப்படி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது. கீதை இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி  நம்மை குழப்புவது போலத் தெரியும்.

சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

கீதை ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு பின்னாடி வருவோம். நீங்கள் சில இந்து கடவுள்களைப்  பார்த்து இருகிறீர்களா ...நிறைய தலை இருக்கும், ஏகப்பட்ட கைகள்  இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு பொருள் இருக்கும்...

அதுக்கு என்ன அர்த்தம் ?

நீங்கள் காலையில் எழுந்து புறப்பட்டு அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகிறீர்கள்.  நீங்களே எழுந்து, பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி அருந்தி,  உடை மாற்றி, வண்டி பிடித்து அல்லது வண்டி ஓட்டி போய் சேர வேண்டிய  இடத்தை அடைகிறீர்கள் ...அப்படித்தானே ?

அது தான் இல்லை.

பல் விளக்க வேண்டும் - அந்த பற்பசையை செய்தது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில்  ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவற்குக்கும் ஒரு வேலை.  எல்லோரும் சேர்ந்து செய்தால் அந்த பற்பசை   உருவாகும். அப்புறம் அதை ஒரு டப்பாவில் போட்டு அடைக்க வேண்டும். அந்த டப்பாவை செய்வது இன்னொரு நிறுவனம். அங்கும் பல பேர்   வேலை செய்கிறார்கள். செய்த டப்பாவை பற்பசை செய்த நிறுவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும்.  கொண்டு செல்லும் நிறுவனத்தில் பல பேர் வேலை செய்கிறார்கள்.  அந்த வாகனம் செல்லும் வழி, அதை செய்தது எத்தனை  கைகள். அந்த வாகனத்தை செய்தது எத்தனை கைகள். செய்த பற்பசையை  நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எத்தனை கைகள் வேண்டும், எத்தனை கால்கள் வேண்டும், எத்தனை கண்கள் வேண்டும், எத்தனை செவிகள் வேண்டும் ?

சரி பற்பசை வந்தாயிற்று, குழாயை திறந்தால் நீர் வருகிறது. அந்த நீரை கொண்டு வர  எத்தனை கைகள், கால்கள், கண்கள் , செவிகள் வேலை செய்தால்  நீங்கள் திறந்தவுடன் நீர் வரும் பல் விளக்க ?

இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன செயலுக்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் கைகள், கால்கள், கண்கள், செவிகள் வேலை செய்து உங்களுக்கு அவற்றை கொண்டு வந்து  சேர்கின்றன.

அதை உணர்த்துவது தான் அந்த பலப் பல கைகளை கொண்ட படங்கள், சிலைகள்.

குறைந்த பட்சம் நாலு கைகளாவது இருக்கும்.

ஏன் ?

உங்கள் இரண்டு கைகள் மட்டும் போதாது உங்கள் வாழ்வை சீராகச் கொண்டு செல்ல.

எத்தனையோ கைகள், கால்கள், கண்கள் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன  அந்த படங்களும், சிலைகளும். அவற்றைப் படைத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு ஆழ்ந்த கருத்தை நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

அத்தனை கைகளும், கால்களும் உங்களுக்கு உதவி செய்கின்றன.  நமது ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஆயிரக் கணக்கான கை கால்கள் இருக்கின்றன.

இப்போது சுலோகத்திற்கு வருவோம்.

அதற்கு எங்கும் கால்கள், கைகைள், கண், செவி, முகம், தலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

சிந்திப்போம்....

============================ பாகம் 2 ====================================

இறைவனை யாரும் பார்த்தது இல்லை. அவன் இருக்கிறானா இல்லையா என்று கூட  சந்தேகம் இருக்கிறது. இறைவன் என்ற ஒருவன் இல்லாமலேயே இந்த  உலகையும் அதில் நிகழ்வனவற்றையும் விளக்க முடியும் என்றால்  இறைவன்  என்பவன் எதற்காக என்ற கேள்வி விடை இல்லாமல் தொக்கி நிற்கிறது.

வாதத்துக்கு இறைவன் இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம்....அவன் ஆணா ? பெண்ணா ? அலியா ? விலங்கா ? செடி கொடியா? எப்படி இருப்பான் ?  உயரமா , குள்ளமா , கறுப்பா , சிவப்பா, குண்டா, ஒல்லியா ? எப்படி இருப்பான் ?

நாம் இப்படி எல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஏதோ "ஒன்று" என்று நினைத்து சிந்திக்கிறோம்.

ஏன் இறைவன் என்பது "ஒன்றாக" இருக்க வேண்டும் ? ஏன் பலவாக அல்லது பலவற்றின்  தொகுதியாக இருக்கக் கூடாது ?

பல அறைகள் கொண்ட இருப்பிடத்தை வீடு என்று சொல்கிறோம்.
பல வீடுகள் கொண்ட இடத்தை ஊர் என்று சொல்கிறோம்.
பல ஊர்கள் கொண்ட இடத்தை நாடு என்று சொல்கிறோம்.
இப்படி படிப் படியாக கூட்டிக் கொண்டே போனால் எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது எது ?

அதற்கு கடவுள், ஆத்மா, இயற்கை, பரம் பொருள் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு வாதத்துக்குத் தான். ஒன்றும் பயபடாதீர்கள்....

இப்போது ஸ்லோகத்தை பார்ப்போம்....

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

அது எல்லாவற்றின் தொகுதி என்று வைத்துக் கொண்டால் அதற்கு எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலை, முகம் , செவி எல்லாம் இருக்கும் அல்லவா ?

அனைத்தையும் கொண்ட தொகுதி என்பதால் அது அனைத்தையும் சூழ்ந்து நிற்கிறது என்று கொள்ளலாம் அல்லவா ?

உங்களையும், என்னையும், அவரையும், இவரையும், அதையும், இதையும் எல்லாம் தன்னுள் அடக்கியது தான் அது.

நம் அனைவரையும் சூழ்ந்து நிற்பது அது. நாம் எல்லாம் அதன் ஒரு பகுதி.

இறைவன் என்பது ஒரு தனித்த ஒன்று அல்ல.  எல்லாவற்றையும் சேர்த்த ஒன்று அது.

நான்கு கைகள், பட்டு பீதாம்பரம், சங்கு, சக்கரம், திரிசூலம், உடுக்கை, மான் தோல், பாற்கடல் என்றெல்லாம் கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள்.

இறை என்பது அனைத்தின் தொகுதி.

முந்தைய ஸ்லோகத்தில் அது சத் அல்ல, அசத் அல்ல என்று பார்த்தோம்.

சத் என்றால் அது ஒரு தொகுப்பில் (genre ) இருக்க வேண்டும். மனிதனாகவோ, மிருகமாகவோ, கல்லாகவோ, புல்லாகவோ என்தோவாக இருக்க வேண்டும். அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அது "சத்" ஆக இருக்க முடியாது.

அசத் என்றால் இல்லாத ஒன்று. இருக்கின்ற ஒன்றை இல்லை என்று எப்படி சொல்ல முடியும் ?

எனவே தான், முன்னோர்கள், அது இரண்டுமாக இருக்கிறது என்று கூறினார்கள்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் அருணகிரி.

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க என்பார் மாணிக்க வாசகர்.

ஒன்றாகக் காண்பதுவே காட்சி என்றாள் ஔவை....

எல்லாம் சேர்ந்த ஒன்றுதான் "அது".

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது - பாகம் 1

கீதை - 13.13 - உலகை சூழ்ந்து நிற்பது  - பாகம் 1 

सर्वतः पाणिपादं तत्सर्वतोऽक्षिशिरोमुखम् ।
सर्वतः श्रुतिमल्लोके सर्वमावृत्य तिष्ठति ॥१३- १३॥

ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||

ஸர்வத:= அனைத்து பக்கங்களிலும்

பாணி = கைகள்

பாத³ம் = கால்கள்

தத் = அது

ஸர்வத் = அனைத்து பக்கங்களிலும்

அ க் ஷிஸிரோ முக ம் = கண்ககளும், தலையும், முகமும் கொண்டது

ஸர்வத: = அனைத்து பக்கங்களிலும்

ஸ்ருதி = செவி

லோகே = உலகில்

ஸர்வம் ஆவ்ருத்ய = எல்லாவற்றையும் சூழ்ந்து

திஷ்ட²தி = நிற்கிறது

அது எங்கும் கை கால்கள் உள்ளது;  
எங்கும் கண்ணும் தலையும் ,முகமும் உள்ளது 
எங்கும் செவியுடையது; 
எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கிறது 

இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கை கால்கள் இருக்கும், எங்க பார்த்தாலும் கண்ணும், வாயும் இருக்கும், செவி இருக்கும், எல்லாவற்றையும்  சூழ்ந்து நிற்கும் ஒன்றை எப்படி நம்மால் சிந்தித்துப் பார்க்க முடியும்.  அப்படி ஒன்று கிடையவே கிடையாது. கீதை இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி  நம்மை குழப்புவது போலத் தெரியும்.

சற்று ஆழமாக சிந்தித்தால் உண்மை புலப்படும்.

கீதை ஒரு புறம் இருக்கட்டும். அதுக்கு பின்னாடி வருவோம். நீங்கள் சில இந்து கடவுள்களைப்  பார்த்து இருகிறீர்களா ...நிறைய தலை இருக்கும், ஏகப்பட்ட கைகள்  இருக்கும், ஒவ்வொரு கையிலும் ஒரு பொருள் இருக்கும்...

அதுக்கு என்ன அர்த்தம் ?

நீங்கள் காலையில் எழுந்து புறப்பட்டு அலுவலகத்துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ போகிறீர்கள்.  நீங்களே எழுந்து, பல் துலக்கி, குளித்து, சிற்றுண்டி அருந்தி,  உடை மாற்றி, வண்டி பிடித்து அல்லது வண்டி ஓட்டி போய் சேர வேண்டிய  இடத்தை அடைகிறீர்கள் ...அப்படித்தானே ?

அது தான் இல்லை.

பல் விளக்க வேண்டும் - அந்த பற்பசையை செய்தது ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கில்  ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொருவற்குக்கும் ஒரு வேலை.  எல்லோரும் சேர்ந்து செய்தால் அந்த பற்பசை   உருவாகும். அப்புறம் அதை ஒரு டப்பாவில் போட்டு அடைக்க வேண்டும். அந்த டப்பாவை செய்வது இன்னொரு நிறுவனம். அங்கும் பல பேர்   வேலை செய்கிறார்கள். செய்த டப்பாவை பற்பசை செய்த நிறுவனதுக்கு கொண்டு செல்ல வேண்டும்.  கொண்டு செல்லும் நிறுவனத்தில் பல பேர் வேலை செய்கிறார்கள்.  அந்த வாகனம் செல்லும் வழி, அதை செய்தது எத்தனை  கைகள். அந்த வாகனத்தை செய்தது எத்தனை கைகள். செய்த பற்பசையை  நீங்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எத்தனை கைகள் வேண்டும், எத்தனை கால்கள் வேண்டும், எத்தனை கண்கள் வேண்டும், எத்தனை செவிகள் வேண்டும் ?

சரி பற்பசை வந்தாயிற்று, குழாயை திறந்தால் நீர் வருகிறது. அந்த நீரை கொண்டு வர  எத்தனை கைகள், கால்கள், கண்கள் , செவிகள் வேலை செய்தால்  நீங்கள் திறந்தவுடன் நீர் வரும் பல் விளக்க ?

இப்படி ஒவ்வொரு சின்ன சின்ன செயலுக்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் கைகள், கால்கள், கண்கள், செவிகள் வேலை செய்து உங்களுக்கு அவற்றை கொண்டு வந்து  சேர்கின்றன.

அதை உணர்த்துவது தான் அந்த பலப் பல கைகளை கொண்ட படங்கள், சிலைகள்.

குறைந்த பட்சம் நாலு கைகளாவது இருக்கும்.

ஏன் ?

உங்கள் இரண்டு கைகள் மட்டும் போதாது உங்கள் வாழ்வை சீராகச் கொண்டு செல்ல.

எத்தனையோ கைகள், கால்கள், கண்கள் வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன  அந்த படங்களும், சிலைகளும். அவற்றைப் படைத்தவர்கள் முட்டாள்கள் அல்ல. ஒரு ஆழ்ந்த கருத்தை நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார்கள்.

அத்தனை கைகளும், கால்களும் உங்களுக்கு உதவி செய்கின்றன.  நமது ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஆயிரக் கணக்கான கை கால்கள் இருக்கின்றன.

இப்போது சுலோகத்திற்கு வருவோம்.

அதற்கு எங்கும் கால்கள், கைகைள், கண், செவி, முகம், தலை இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் ?

சிந்திப்போம்....

Friday, July 17, 2015

கீதை - 13.12 - உள்ளதும் அல்லாததும்

கீதை - 13.12 - உள்ளதும் அல்லாததும் 

ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादि मत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥१३- १२॥

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே |
அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||

ஜ்ஞேயம் = அறியப்பட வேண்டியது

யத் = எது

தத் = அதை

ப்ரவக்ஷ்யாமி = ப்ர + வாக் + ஷியாமி = உனக்கு சொல்கிறேன், விளக்குகிறேன் 

யத் = எது

ஜ்ஞாத்வ = எதை அறிந்தால்

அம்ருதம் = அம்ருதத்தை, சாகாமல் இருக்கும் நிலையை 

அஸ்நுதே = அடைவானோ

அநாதி = தொடக்கம் இல்லாதது

மத் பரம் ப்ரஹ்ம = பரம் என்றால் பழமையான. பரம்பரை, பரம சிவன், பரம பதம். பர ப்ரஹ்மம்.

ந ஸத் = இருப்பதும் இல்லை 

தந் = அது

நாஸது = ந அசத் = இல்லாததும் இல்லை

உச்யதே = சொல்லப்பட்டது

எது அறியப்பட வேண்டியதோ, எதை அறிந்தால் இறவா நிலை அடையலாமோ, எது தொடக்கம் இல்லாததோ, பர ப்ரஹமமோ , எது உருவமும் அருவமும் இல்லாததோ அதை பற்றிச் சொல்கிறேன். 

மிக மிக ஆச்சரியமான சுலோகம்.

மிக மிக ஆழமான சிந்தனையை கொண்ட சுலோகம்.

எது தொடக்கம் இல்லாததோ - தொடக்கம் இல்லாத ஒன்று இருக்க முடியுமா ?  ஒவ்வொன்றும் என்றோ ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும். ஏதோ ஒன்றை எடுத்துக்  கொண்டு, எது என்று வந்தது என்றால் அதன் தொடக்கத்தை நம்மால்  கண்டு பிடிக்க முடியும். ஏதோ ஒன்றில் இருந்து ஏதோ ஒரு கால கட்டத்தில்  அது வந்திருக்க வேண்டும்.

நான் என்று வந்தேன் என்று கேட்டால் , என் பிறந்த தினத்தை கூற முடியும். நான் பிறப்பதற்கு முன்னால்  என்னவாக இருந்தேன்  என்று கேட்டால் வேறு எதுவாகவோ  இருந்திருப்பேன். அந்த வேறு எது என்று பிறந்தது என்று கேட்டால்  அதற்கு ஒரு காலம் இருந்திருக்கும். இப்படியே ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே  பின்னால் போனால் எல்லாமும், இந்த உலகம், பிரபஞ்சம் எல்லாம்  என்று ஒரு நாள் தொடங்கி இருக்க வேண்டும் என்று அறிய முடியும்.

அறிவியலும் அதை ஏற்றுக் கொள்கிறது. மகா வெடிப்பு (Big Bang ) என்று சொல்கிறது  அறிவியல்.

அதற்கு முன்னால் என்ன நடந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. ஏன் என்றால்  "முன்னால்" என்ற கேள்வியே காலத்தின் அடிப்படையில் பிறந்த கேள்வி.  காலமே அதில் இருந்துத்தான் தொடங்கியது என்றால் அதற்கு முன்னால் என்ற கேள்விக்கே அர்த்தம் இல்லை. அது தான் காலம் 0. அதுதான்  காலத்திற்கே  தொடக்கம்.

கீதை அந்த அனாதியான இடத்தை தொடுகிறது. அந்த நேரம், அது தான் ஆரம்பம். அதற்கு முன்னால் என்று எதுவும் கிடையாது.

தொடக்கம் இல்லாதது அது.

அனாதியிலே, வெளியில் விளைந்த வெறும் பாழை என்பார் அருணகிரிநாதர்.

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய  விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே

 அது சத் அல்ல, அது அசத் அல்ல .

சத் என்றால் என்ன ? அசத் என்றால் என்ன ?

சத் என்பது நிலையானது, மாறாதது, என்றும் உள்ளது. அதில் இருந்து வந்தது அசத் என்ற மாறும் தோற்றம் கொண்ட இந்த உலகம்.

இந்த சத் மற்றும் அசத்தை சந்தோக்ய உபநிஷத் மிக விரிவாக விளக்குகிறது.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

மண்ணில் இருந்து பானை, சட்டி, குடம் எல்லாம் செய்கிறோம். மண் சத். பானை, சட்டி குடம் எல்லாம் அசத்.

தங்கத்தில் இருந்து வளையல், சங்கிலி, மோதிரம் எல்லாம் செய்கிறோம். தங்கம் சத். ஆபரணங்கள் அசத் .

ஏன் ?

பானையும், சட்டியும், வளையலும், மோதிரமும் அழியும். வேறொன்றாக மாறும். மண்ணும், தங்கமும் அப்படியே இருக்கும். 

மாறுகின்ற வடிவங்களின் (அசத் ) பின்னால் மாறாமல் இருப்பது சத்.

கீதை சொல்கிறது. அது சத் அல்ல. அது அசத் அல்ல என்கிறது.

சரிரீ அன்று அசரீரி அன்று என்பார் அருணகிரி. சரீரம் உள்ளதும் அல்ல. சரீரம் அல்லாததும் அல்ல.

தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 

Thursday, July 9, 2015

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

கீதை - 13.11 - ஞானமும் அஞ்ஞானமும்

अध्यात्मज्ञाननित्यत्वं तत्त्वज्ञानार्थदर्शनम् ।
एतज्ज्ञानमिति प्रोक्तमज्ञानं यदतोऽन्यथा ॥१३- ११॥

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||

அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் = அத்(தி) + ஆத்ம + ஞான + நித்ய + த்வம் =  அதி என்றால் மேலான. உயர்வான.

அதி ஆத்மா என்றால் ஆத்மாவின் உயர்வு.

அதி ஆத்ம ஞானம் = ஆத்மாவின் உயர்வைப் பற்றிய ஞானம்

நித்ய த்வம் = எப்போதும் இருப்பது

தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் = தத்வ + ஞான + அர்த + தர்சனம்

தத்துவம் என்றால் உண்மை.

ஞான = ஞானம். உண்மையான ஞானம்

அர்த்த = அர்த்தம், பொருள்

தர்சனம் = அறிவது

ஏதத் = இது

ஜ்ஞாநம் = ஞானம்

இதி = எனவே

ப்ரோக்தம் = சொல்லப் படுகிறது

அஜ்ஞாநம் = அஜ்ஞானம்

யத = எது

அதோ அந்யதா = இதற்கு அந்நியமானது எல்லாம்

எது ஞானம் , எது அஞ்ஞானம் ?

நாம் படிப்பது எல்லாம் ஞானம் ஆகிவிடாது. நிறைய படித்தவன் ஞானியாக மாட்டான். சிலசமயம் கஷ்டப்பட்டு அஞ்ஞானத்தை கூட நாம் தேடிச் சேர்ப்பதும் உண்டு.

எது ஞானம், எது அஞ்ஞானம் என்று தெரியாவிட்டால் எப்படி அஞ்ஞானத்தை விடுத்து ஞானத்தை அடைய முடியும் ?

அறிவு அல்லது ஞானம் என்று சொல்கிறோமே, அப்படி என்றால் என்ன ? எது அறிவு ? அறிவின் தொடக்கமும் முடிவும் என்ன ?

ஒருவன் பெரிய அறிவாளி என்று சொன்னால் என்ன அர்த்தம் ? நிறைய புத்தகங்கள் வாசித்து மனப்பாடம் செய்திருக்கிறார் என்று அர்த்தமா ? 

நாம், வாழ்நாளில் பெரும் பகுதியை அறிவைப் பெருக்குவதில் செலவழிக்கிறோம். பள்ளிக் கூடம், பின் கல்லூரி, பின் புத்தகங்கள் வாசிப்பது, வாசித்தவர்கள் சொல்லக்  கேட்பது என்று வாழ்வில் பெரும் பக்தி ஞானத்தைப் பெருக்குவதிலேயே போய் விடுகிறது.

எதற்காக அறிவைப் பெறுகிறோம் ? கல்வியின் பயன் என்ன ? அறிவு நமக்கு எந்த விதத்தில் உபயோகமாக இருக்கிறது ?

சில சமயம் நாம் பெற்ற அறிவே கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

தவறான புத்தகங்கள், தவறான ஆட்களிடம் பெரும் அறிவு ஆபத்தை விளைவிக்கலாம்.

ஒரு பிரயாணம் கிளம்புகிறோம் என்றால் எந்த ஊருக்குப் போகப் போகிறோம் என்று முதலில் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும் அல்லவா ?

அது போல, அறிவை பெறத் தொடங்குமுன் எதற்க்காக இந்த அறிவு என்று அறிந்து கொள்ள வேண்டும்.

பணம் சம்பாதிக்கவா ? சந்தோஷமாக இருக்கவா ? பிறருக்கு சேவை செய்யவா ? உண்மையை அறியவா ? வீடு பேறு அடையவா ?

எதற்காக ஞானத்தை தேடுகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

ஞானத்தையும், அஞ்ஞானத்தையும் அறிந்து கொள்ள கீதை இரண்டு குறிப்புகளைத் தருகிறது.

ஞானம் என்பது ,

முதாலவது, ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்வது. 

இரண்டாவது, தத்துவ + ஞான + அர்த்த + தர்சினம்

அதாவது, தத்துவ ஞானத்தின் அர்த்தத்தை அறிந்து கொள்வது.

தத்துவ ஞானத்தின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சும்மா படித்துக் கொண்டே போவதாலோ, எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்பிபதாலோ ஞானம் வந்து விடாது.

தத்துவம் என்றால் - உண்மை.

ஞானம் என்றால் = உண்மையைப் பற்றிய அறிவு அல்லது மெய்பொருளைப் பற்றிய அறிவு.

அர்த்தம் = அந்த மெய் பொருளின் அர்த்தம்

தரிசனம் = அறிந்து கொள்வது.

தத்துவ ஞானத்தின் உண்மையை அறிய வேண்டும்.

இதுவே ஞானம்.

இது அல்லாத அனைத்தும் அஞ்ஞானமே.

கோவிலுக்குப் போகிறோம், சமய சின்னகளை அணிந்து கொள்கிறோம், நிறைய பாடல்களை   மனனம் செய்து ஒப்பிக்கிறோம், சமய சடங்குகளை செய்கிறோம்....இதற்கெல்லாம் என்ன அர்த்தம் ?

அர்த்தம் தெரிந்தால் - அது ஞானம்.

இல்லையென்றால் அது எல்லாமே அஞ்ஞானமே ....

Sunday, June 21, 2015

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை

கீதை - 13.10 - உண்மையை அறியும் முறை 

मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणी ।
विविक्तदेशसेवित्वमरतिर्जनसंसदि ॥१३- १०॥

மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ |
விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||

மயி = என்னில்

சா = மேலும்

அநந்ய யோகேந = வேறு எதிலும் செல்லாத யோகம்

 பக்தி = பக்தியுடன்

அவ்யபி⁴சாரிணீ = அ விபசாரிணி

விவிக்ததேஸ = விவிக்த + தேச = தனி இடங்களை

ஸேவித் = நாடி

அரதி = இன்பம் கொள்ளாமல்

ஜந ஸம்ஸதி = மக்கள் கூட்டங்களில்

பிரிவுபடாத யோகத்துடன், என்னிடம் தவறுதல் இல்லாமல் செலுத்தப்படும் பக்தி , தனியிடங்களை நாடுதல் , மக்கள் கூட்டத்தில் இன்பம் இன்மை.

உண்மையை அறிய வேண்டுமா ?

இதுதான் உண்மை என்று யாரும் மற்றவருக்கு சொல்லித் தந்துவிட முடியாது. ஒவ்வொருவரும், தாங்களே கண்டு பிடிக்க வேண்டும்.

எப்படி கண்டு பிடிப்பது ?

அதற்கு வழி சொல்கிறது கீதை.

முதலாவது,  பிரிவுபடாத யோகம்.  யோகம் என்றாலே ஒன்றாக சேர்ப்பது என்றுதான் பொருள்.  பிரிவுபடாத யோகம் என்றால் மனதை ஒன்றிலேயே நிறுத்துதல். மனமும், வாக்கும், செயலும் ஒன்றாக இருத்தல்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வது மிக மிக கடினம். நாம் நினைத்துக் கொண்டிருப்போம், "நான் நினைபதைத் தானே நான் சொல்கிறேன் , செய்கிறேன் " என்று.  ஆழ்ந்து கவனித்தால் நாம் எவ்வளவு பிரிந்து கிடக்கிறோம் என்று தெரியும்.

மனம் ஒன்றை நினைக்கும்.

நாக்கு ஒன்றைச் சொல்லும்.

உடல் மற்றொன்றைச் செய்யும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார்  வள்ளலார்.

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே!

என்பார் பட்டினத்தார்

இதையே

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

என்று பாடினாள் ஆண்டாள்.

மனிதனால் சிந்தித்து
வாயினால் பாடி
கையினால் மலர் தூவி

மனமும், வாக்கும், உடலும் ஒன்று சேர்ந்த யோகத்தில் என்கிறான் கண்ணன்.

சரி, மூன்றையும் ஒன்று சேர்த்து விடலாம். பிரியாத யோகம் கை கூடலாம். அந்த  யோகத்தை  என்ன செய்வது ? யார் மேல் செலுத்துவது ? எதை மனதினால் நினைப்பது ? வாயால் பாடுவது ? கையினால் அர்ச்சிப்பது ?

என் மேல் பிறழாத பக்தியுடன் என்கிறான்.

இங்கே மிக மிக வலிமையான ஒரு வார்த்தையை உபயோகப் படுத்துகிறான் கண்ணன்.

ஒரு விபச்சாரியைப் போல் இல்லாமல் என்று.

ஏன் ?

விபச்சாரி என்ன செய்கிறாள் ?

அவளின் மனமும் உடலும் ஒன்று சேர்வது இல்லை.  மனம் கிடைக்கப் போகும்  பணத்தில் இருக்கிறது. உடல் ஏதோ செய்து கொண்டு இருக்கிறது.

பக்தி அப்படி இருக்கக் கூடாது.

மேலும், ஒரு விபச்சாரி அற்ப பணத்திற்கு தன் விலை மதிக்க முடியாத தன்மானத்தை விற்கிறாள்.

நாம் அவளை விட எந்த விதத்தில் உயர்வு ?

பணத்திற்காக , நம் வாழ் நாள் பூராவும் ஏதோ ஒரு அலுவலகத்தில் , யாருக்கோ,  எதையோ செய்து  கொண்டிருக்கிறோம். செய்யும் வேலையில் எவ்வளவு தூரம்   மனம் ஒன்றிச் செய்கிறோம்.

மனமும் உடலும் ஒன்றாகச் சேராத எந்த வேலையும் ஒரு விபச்சாரியின் வேலைதான்.

"தனி இடத்தை நாடி" - கூட்டம் மனதை சிதற அடிக்கும். மனதை ஒரு நிலை படுத்த  உதவாது. எனவே, தனிமையை நாடி.

"மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்" - ஜனக் கூட்டம் நம்மை ஒவ்வொரு பக்கம்  இழுக்கும். பிள்ளைகள் ஒரு பக்கம், மனைவி/கணவன் ஒரு பக்கம்,  நண்பர்கள் ஒரு பக்கம், உறவு ஒரு பக்கம் என்று நம்மை நாலா பக்கங்களிலும்  இழுத்து அலைகழிக்கும்.

உண்மையைத் தேட வேண்டும் என்றால் இந்த அலைவுகளில் இருந்து விடுபடவேண்டும்.

எனவே மக்கள் கூட்டத்தில் இன்பம் கொள்ளாமல்.

அதற்காக காட்டுப்  போ  என்று சொல்லவில்லை.

மக்களை கண்டு  ஓடி விடு என்று சொல்லவில்லை.

மக்களைத் தேடி நீ ஓடாதே. அவர்கள் வந்தால் மகிழாதே. வரவில்லை என்றால்  துக்கம் கொள்ளாதே.

கூட்டத்தில் பெரிய இன்பம் இல்லை என்று சொல்கிறது கீதை.

அதில் இன்பம் என்று நினைத்தால் அதன் பின்னே மனம் போகும். பின் உண்மையை எங்கே  தேடுவது ?

எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் ?

என் சிற்றறிவுக்கு எட்டியது இவ்வளவுதான். இதை ஆழ்ந்து சிந்தித்தால் இன்னும் பலப் பல  அர்த்தங்கள் புரிபடலாம்.

முயன்று பாருங்கள்.

Monday, June 15, 2015

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

கீதை - 13.9 - அதீதப் பற்றை விடு

असक्तिरनभिष्वङ्गः पुत्रदारगृहादिषु ।
नित्यं च समचित्तत्वमिष्टानिष्टोपपत्तिषु ॥१३- ९॥

அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு |
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||

அஸக்தி = பற்று இல்லாமல்

அநபி⁴ஷ்வங்க³ = தன்னுடைது என்று கருதாமல்

புத்ர = புதல்வர்களையும்

தா³ர = மனைவியையும்

க்ருஹாதி³ஷு  = வீட்டினையும்

நித்யம் = எப்போதும்

 ச = மேலும்
 ஸமசித்தத்ம் = சம சித்தத்துடன்

இஷ்டா = விரும்பியது

நிஷ்டோப = விரும்பாதது

பத்திஷு = அடையும்போது

பற்றுதல் இன்றி, 
மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடையது என்று கருதாமல் 
விரும்பியதோ, விரும்பாததோ எது வந்தாலும் சம சித்தத்துடன்.

இன்பம் வேண்டும் என்று அனைத்து உயிர்களும் விரும்புகின்றன.

ஆனாலும் துன்பம் கூடவே வருகிறது .

துன்பத்தை யார் கேட்டார்கள்?

யாரும் கேட்காமல் இருக்கும்போது துன்பம் ஏன் வருகிறது. எல்லோரும் கேட்கும்போதும்  இன்பம் ஏன் வர மறுக்கிறது. அப்படியே வந்தாலும் கொஞ்ச நாள் இருந்து விட்டு ஓடி விடுகிறதே ஏன் ?

துன்பத்திற்கு காரணம் என்ன ?

வெளியில் உள்ள பொருள்கள், மனிதர்கள் ...இவைகள் தானே துன்பத்திற்கு காரணம் ? நாமே நமக்கு துன்பம் செய்து கொள்ள மாட்டோம் அல்லவா ? துன்பம் வெளியில் இருந்து வருகிறது என்று அறிய முடிகிறது.

எதெது துன்பம் தரும் ?

ஒவ்வொருத்தருக்கு , ஒவ்வொன்று துன்பம் தரும்.

சற்று ஆழ்ந்து யோசித்தால் துன்பம் அந்த பொருள்களிலோ , மனிதர்களிலோ அல்ல, அவற்றோடு நமக்கு இருக்கும் தொடர்பால் துன்பம் வருகிறது என்று புரியும்.

எப்படி என்று பார்ப்போம்....

இனிப்பு துன்பமா ? லட்டு துன்பமா ? இல்லை. நாம் அதை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது , அது துன்பம் தருகிறது. அளவோடு இருந்தால் துன்பம் இல்லை.  எப்போது இனிப்பை உண்ணக் கூடாதோ, அப்போது அதை உண்டால் துன்பம் வருகிறது.

மனைவி, மக்கள், வீடு, வாசல் - இவற்றோடு அளவுக்கு அதிகமான பற்று இருந்தால் துன்பம் வருகிறது.

பற்றே வேண்டாம் என்று சொல்லவில்லை. 

அநபிஷ்வங்க என்றால் அளவுக்கு அதிகமான பற்று.

நமக்கு வெளியில் இருப்பவை அவைகளுக்கு என்று ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்பு, என்பவை கொண்டிருக்கும். நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவை நூற்றுக்கு நூறு நம்மோடு ஒத்து போகாது.

நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார்களே
என்னை புரிந்து கொள்ளவில்லையே
எனக்கு மரியாதை இல்லையே

என்று வருந்துவதில் பலன் இல்லை.

அவர்கள் நம்மில் இருந்து தனிப்பட்டவர்கள். அவர்கள் அல்லது அவைகள் மேல் அளவுக்கு அதிகமான பற்று  வைப்பது துன்பம் தரும்.

இவற்றின் மேல் மிதமான பற்று ஒரு க்ஷேத்ரஞனுக்கு தேவை.

இவற்றின் மேல் அளவு கடந்த பற்று இருந்தால்  உண்மை (க்ஷேத்ரம்) எது என்று அறிய முடியாது .

ஒன்று, இதற்கே நேரம் சரியாகப் போய் விடும்.

இரண்டாவது, இந்த பற்று அறிவை மயக்கும்.

விட்டு விடுதலையாகி நிற்போம், அந்த சிட்டுக் குருவியைப் போல....

பற்று குறையும்போது அறிவில் தெளிவு பிறக்கும்.

சரி, அறிவு தெளிந்த பின் என்ன செய்வது ?

அடுத்து அதைப் பற்றி கண்ணன் சொல்கிறான்.

Sunday, June 14, 2015

கீதை - 13.8 - அறிபவனின் தன்மை - தொடர்ச்சி

கீதை - 13.8 - அறிபவனின் தன்மை - தொடர்ச்சி 

इन्द्रियार्थेषु वैराग्यमनहंकार एव च ।
जन्ममृत्युजराव्याधिदुःखदोषानुदर्शनम् ॥१३- ८॥

இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச |
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||

இந்த்ரியார்தேஷு = புலன் இன்பங்களில்

வைராக்யம் = விருப்பம் இன்மை

அநஹங்கார  = அஹங்காரம் இன்றி

ஏவ ச = மேலும் உறுதியாக

ஜந்ம = பிறப்பு 

ம்ருத்யு = இறப்பு

ஜராவ்யாதி⁴ = நரை, மூப்பு

துக தோ ஷா = துக்கம் தோஷம்

நுதர்ஸநம் = இவற்றைப் பற்றிய தெளிந்த பார்வை , அல்லது இணைந்த பார்வை

புலன் இன்பங்களில் விருப்பம் இல்லாமை ,  ஆணவம் இல்லாமல், , பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றைப் பற்றிய இணைந்த பார்வை 

வைராக்கியம் (புலன் இன்பங்களில் விருப்பம் இன்மை)....புலன் தரும் இன்பங்களில் விருப்பம் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்குமா ? இன்பமில்லாத  வாழ்வில் என்ன சுகம் இருக்கும். கல்லும், மரக் கட்டையும் போல வாழ வேண்டுமா ? இது தான் கீதை காட்டும் வாழ்வா ?

இல்லை.

புலன் தரும் இன்பங்களை அனுபவிக்க  வேண்டாம் என்று சொல்லவில்லை கீதை. அதை சார்ந்து இருக்காதே என்கிறது. அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்று  சோர்ந்து போய் விடாதே. அது தான் வேண்டும் என்று தவிக்காதே.  அது வேண்டும் என்று அதை துரத்திக் கொண்டு போகாதே. அதே எண்ணமாக இருக்காதே என்று சொல்கிறது.

இரண்டாவது, அஹங்காரம் இன்றி. நான் / எனது என்ற எண்ணம் எப்படி வருகிறது ? நமக்கு மற்றவற்றின் தொடர்பால் இந்த எண்ணம் வருகிறது. என் வீடு, என் மனைவி, என் சொத்து, நான் கட்டியே வீடு, நான் உருவாக்கிய நிறுவனம் என்று மற்றவற்றின் தொடர்பால் நான் / எனது என்ற எண்ணம் உருவாகிறது.

புலன் தரும் இன்பங்களை விடும் போது , அந்த இன்பங்களைத் தரும் பொருள் மற்றும் மனிதர்கள் மேல் உள்ள பற்றும் விடும்.

இருக்கும் போது , கிடைக்கும் போது இன்பம். இல்லை என்றால் துக்கம் இல்லை. ஐயோ, அது இல்லையே, என் கையை விட்டு போய் விட்டதே என்ற கவலை இல்லை.

பிறப்பு, இறப்பு, நரை, மூப்பு இதைப் பற்றிய இணைந்த எண்ணம். பிறப்பும், இறப்பும், மூப்பும்,  நரையும்,துன்பம் தருவன.  நாம் இவை துன்பம் என்றே அறிவது இல்லை. நரை வந்தால் அதை சாயம் போட்டு மறைத்து விடுகிறோம். அப்படி செய்தால் ஏதோ வயது குறைந்து விட்டதைப் போல ஒரு எண்ணம். மூப்பை தள்ளி  வைத்து விட்டதை போன்ற எண்ணம்.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

மரணம் உண்டு என்று அறிந்தாலும், அது இப்போது நிகழாது என்று எல்லோரும் எண்ணுகிறார்கள். மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நினைத்தால் இத்தனை சண்டை, சச்சரவு, கோபம், தாபம், ஆணவம் இவை  வருமா ? ஒவ்வொரு நாளும் மிக மிக இனிமையாகக் கழியும். இருக்கும் கொஞ்ச நாளை சந்தோஷமாக கழிக்க வேண்டுமா , துக்கத்திலும் பயத்திலும் கழிக்க வேண்டுமா ?

பிறப்பு, மூப்பு, மரணம் இவற்றைப் பற்றிய ஆரோக்கியமான சிந்தனை நம்மிடம் கிடையாது.

மூப்பை வெறுக்கிறோம்.

மரணம் பற்றி சிந்திப்பதை தவிர்க்கிறோம்.

இவை ஒரு நல்ல கண்ணோட்டம் இல்லை.

இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள்.

மரணம் இல்லை என்றால் வாழ்கையும் இல்லை.

இது முடியக் கூடியது என்று நினைத்தால் வாழ்க்கையின் மேல் தீராக் காதல் பிறக்கும். நாளை நாளை என்று வாழ்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே போக மாட்டோம்.

இன்றிலிருந்து வாழத் தொடங்குவோம்.

அறிபவனுக்கு இந்த   சிந்தனைத் தெளிவு வண்டும்.

சிந்தியுங்கள். உங்கள் வாழ்வும் இனிமையாக மாறும்.

கீதை படிப்பதில் உள்ள நனமைகளில் இதுவும் ஒன்று.