Sunday, July 31, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 3

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 3

श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாயஸ்தப = ஆழ்ந்து சிந்தித்து

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, தீர்க்க சிந்தனை, நேர்மை மற்றும் எளிமை. 

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

அதில் முதலாவது

பயமின்மை.....

பொதுவாகவே மத சம்பந்தப் பட்ட நூல்கள், பணியாக இரு, பெரியோர் சொல்வதைக் கேள், கீழ் படிந்து நட என்று நம்மை எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவர்களாக மாற்றி வைத்து விடும். சொன்ன படி கேட்காவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று சின்ன வயதில் தொடங்கி, பாவம் செய்தால் நரகம் என்று பயமுறுத்தும். எண்ணெய் சட்டி, நெருப்பு, என்று ரொம்ப பயமுறுத்தும்.

கீதை தான் முதன் முதலில் பயமின்றி இரு என்கிறது.

தெய்வ சம்மதம் உள்ளவன் பயம் இன்றி இருப்பான். அவன் யாருக்கும், எதற்கும் பயப்படமாட்டான்.

உங்களுக்கும் பயம் எங்காவது இருந்தால், இன்னும் தெய்வ சம்மதம் ஏற்படவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

"காலா என் கால் அருகில் வாடா " என்று சொன்ன பாரதியின் துணிவு இருக்க வேண்டும்.

பயம் எதனால் வருகிறது ?

அறிவின்மையால் பயம் வருகிறது. அறிவின்மையால் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் பயம் வருகிறது.

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்கள் என்னென்ன என்று பட்டியல் போட வந்த கீதை முதலில் சொன்னது "பயமின்மை" யைப் பற்றி.

"அச்சம் தவிர்"

எதற்கும் பயம். உண்மை என்று தெரிந்ததை செய்யப் பயம்.

பயம் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

தெய்வத்தை அணுக வேண்டுமா ? முதலில் பயத்தை விட வேண்டும்.

(வளரும்)

================= பாகம் 2 =============================================

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

உள்ளம் தூய்மையாய் இருக்க வேண்டும். தூய்மை என்றால் அதில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். 

ஒருவன் வள்ளுவரிடம் சென்று சொன்னான் "ஐயா, அறம் தான் உலகத்தில் சிறந்தது என்று சொல்கிறார்கள். நீங்கள் கூட திருக்குறளை அறத்துப் பால் என்று அறத்தில் தான் ஆரம்பிக்கிறீர்கள். இந்த அறம் என்றால் என்ன ? எல்லாவற்றையும் படித்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதை சுருக்கமாக சொல்ல முடியுமா " என்று கேட்டான். 

வள்ளுவரும் சிரித்துக் கொண்டே, "ஒரே வரியில் சொல்கிறேன் கேட்டுக் கொள் " என்று சொல்லி விட்டு உலகில் உள்ள அனைத்து அறங்களையும் ஒரே வரியில் , ஐந்தே  வார்த்தையில் சொன்னார் 

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் "

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. 

உலகில் உள்ள அனைத்து அறங்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

நல்லதோ , தீயதோ, அது முதலில் மனதில் தோன்றி பின் வார்த்தையாக செயலாக பரிணமிக்கிறது. 

மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். 

எனவே, கீதை சொல்கிறது - மனத் தூய்மை வேண்டும் என்று. 

அடுத்தது 

"ஞான யோகத்தில் உறுதி"

ஞானம் கொட்டிக் கிடக்கிறது. திரும்பும் திசை எல்லாம் ஞானம் தான். 

நிறைய படிக்கிறோம். நிறைய கேட்கிறோம். சரி என்று பட்டாலும் செய்வது இல்லை. 

ஏன் ?

ஒன்று சந்தேகம். ஒரு வேளை அது சரியாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற  சந்தேகம்.

இரண்டாவது, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டு உலக விஷயங்களின் பின்னே போவது. 

ஞான யோகத்தில் உறுதி இல்லாமை. ஒரு வழி சரியான வழி என்றால் அதில் உறுதியுடன், தைரியத்துடன் செல்ல வேண்டும். இல்லை என்றால் படிப்பது எதற்கு ? ஞானத்தை தேடுவானேன் ?

"தானம்"

தானத்திற்கும் , தெய்வ சம்பந்தத்திற்கும் என்ன தொடர்பு ? 

பொருள்களின் மேல் பற்று வளர வளர , மேலும் மேலும் வேண்டும் என்று மனம் ஆசைப் படும். அதை பெருக்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தொலைந்து போகுமோ, யாரும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும். இதெல்லாம் தெய்வ சிந்தனைக்கு ஒரு தடைதான் ?

தானம் செய்வதன் மூலம், இந்த பொருள்கள் என்னுடையவை அல்ல.  இவை இல்லாமலும் நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நமக்குத் தெரிய வரும். நாளை பொருள் காணாமல் போனால் கூட ஒரு பெரிய துக்கம் வராது. "என்ன , நானே கொடுப்பதற்கு பதில் யாரோ எடுத்துக் கொண்டார்கள் " என்ற மன நிலை வரும். அது மட்டும் அல்ல, சம்பாதித்ததை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழும் போது நமக்கும் ஒரு மகிழ்ச்சி வரும். நான் அனுபவித்தால் என்ன அவர்கள் அனுபவித்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றும் போது அனைத்துக்குள்ளும் இருக்கும் அந்த ஒன்றைப் பற்றிய ஞானம் தோன்றும். அதன் பெயர் ஆத்மாவோ, உயிரோ, இறைவனோ ...ஏதோ இருந்து விட்டுப் போகட்டும். பிற உயிரை தன் உயிர் போல நினைக்கும் அந்த அருள் உள்ளம் பிறக்கும். 

அன்பும், அருளும் பிறக்கும். 

தானம் துறவுக்கு இட்டுச் செல்லும். 

துறவு துன்பங்களில் இருந்து விடுதலை தரும். 

தானம் பற்றி மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/161-2.html

=================== பாகம் 3 ======================================================

தானம் ஏன் செய்ய வேண்டும் ?

ஆத்மாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தானம் செய்ய வேண்டும்.

அது எப்படி ....ஆத்மாவுக்கும், தானம் செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ?

நமக்கு பிடித்த ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...ஒரு பேனாவை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ஆசை ஆசையாக வைத்து இருக்கிறோம். யாருக்கும் தருவது இல்லை. நண்பர்கள் கேட்டால் கூட தருவது இல்லை.

சிறிது நாள் கழித்து , உங்கள் பிள்ளை கேட்கிறான்...அந்த பேனா தனக்கு வேண்டும் என்று. நீங்கள் சந்தோஷமாக கொடுக்கிறீர்கள் அல்லவா. உனக்கு இல்லாததா என்று ஆசையோடு கொடுக்கிறீர்கள். அவன் அதை உபயோகப் படுத்துவதை கண்டு மகிழ்கிறீர்கள்.

என்ன ஆயிற்று ?

எப்படி அவன் மகிழ்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது ?

காரணம் பிள்ளையின் மேல் உள்ள அன்பு.

இழப்பிலும் மகிழ்ச்சி தருவது அன்பு.

அந்த அன்பு மகன், மகள், கணவன் , மனைவி என்ற உறவுகளைத் தாண்டி எல்லோரிடமும் தோன்றும் போது அதற்கு அருள் என்று பெயர்.

அப்போது, நீங்கள் ஆசை ஆசையாக சேர்த்து வைத்த பொருளை மற்றவர்களுக்குத் தருவதிலும் உங்களுக்கு ஒரு ஆனந்தம் இருக்கும்.

அவர்கள் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சி என்றால், அவர்களையும் உங்களையும் பிணைப்பது எது ? அவர்களுக்குள் மகிழும் ஏதோ ஒன்று உங்களுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது என்றால் அவர்களுக்குள் இருப்பதும் உங்களுக்குள் இருப்பதும் ஒன்றென ஆகும் அல்லவா.

இது ஆத்மாவைப் பற்றி சிந்திக்க உதவும்.

எல்லாம் நானே, அனைத்திலும் நானே இருக்கிறேன் என்ற எண்ணம் வர வேண்டும் என்றால் தானம் பண்ணிப் பாருங்கள். ஒரு பசித்தவன் நீங்கள் தந்த உணவை உண்டு பசியாறும் போது உங்களுக்குள்ளும் பசி ஆறுவதை உணர்வீர்கள்.

மேலும்,

மகள் கேட்டாள் என்று ஆசையாக வைத்திருந்த நகையை தாய், மகளுக்கு போட்டு அழகு பார்ப்பாள்.

யாருக்கும் கொடுக்காத காரின் சாவியை மகனுக்குத் தந்து, அவன் ஓட்டுவதைக் கண்டு தந்தை பெருமிதம் கொள்வார்.

அன்பு , பொருள்கள் மேல் உள்ள பற்றை விட உதவி செய்யும்.

அருள், அதை விரிவாக்கும்.

துறவுக்கு அன்பும் அருளும் அடுத்த அடுத்த படிகள்.

சுயநலம் விலக வேண்டும் என்றால், தானம் செய்து பாருங்கள்.

கொடுப்பதில் உள்ள சுகம் தெரியும்.

இழப்பதில் உள்ள அருமை தெரியும்.

சொல்லித் தெரியாது காமம்.

சொன்னாலும் புரியாது தானம் என்பார்கள்.

செய்து பாருங்கள் புரியும்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/161-3.html

Thursday, July 21, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 2

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 2

श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாயஸ்தப = ஆழ்ந்து சிந்தித்து

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, தீர்க்க சிந்தனை, நேர்மை மற்றும் எளிமை. 

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

அதில் முதலாவது

பயமின்மை.....

பொதுவாகவே மத சம்பந்தப் பட்ட நூல்கள், பணியாக இரு, பெரியோர் சொல்வதைக் கேள், கீழ் படிந்து நட என்று நம்மை எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவர்களாக மாற்றி வைத்து விடும். சொன்ன படி கேட்காவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று சின்ன வயதில் தொடங்கி, பாவம் செய்தால் நரகம் என்று பயமுறுத்தும். எண்ணெய் சட்டி, நெருப்பு, என்று ரொம்ப பயமுறுத்தும்.

கீதை தான் முதன் முதலில் பயமின்றி இரு என்கிறது.

தெய்வ சம்மதம் உள்ளவன் பயம் இன்றி இருப்பான். அவன் யாருக்கும், எதற்கும் பயப்படமாட்டான்.

உங்களுக்கும் பயம் எங்காவது இருந்தால், இன்னும் தெய்வ சம்மதம் ஏற்படவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

"காலா என் கால் அருகில் வாடா " என்று சொன்ன பாரதியின் துணிவு இருக்க வேண்டும்.

பயம் எதனால் வருகிறது ?

அறிவின்மையால் பயம் வருகிறது. அறிவின்மையால் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் பயம் வருகிறது.

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்கள் என்னென்ன என்று பட்டியல் போட வந்த கீதை முதலில் சொன்னது "பயமின்மை" யைப் பற்றி.

"அச்சம் தவிர்"

எதற்கும் பயம். உண்மை என்று தெரிந்ததை செய்யப் பயம்.

பயம் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

தெய்வத்தை அணுக வேண்டுமா ? முதலில் பயத்தை விட வேண்டும்.

(வளரும்)

================= பாகம் 2 =============================================

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

உள்ளம் தூய்மையாய் இருக்க வேண்டும். தூய்மை என்றால் அதில் உள்ள அழுக்குகளை போக்க வேண்டும். 

ஒருவன் வள்ளுவரிடம் சென்று சொன்னான் "ஐயா, அறம் தான் உலகத்தில் சிறந்தது என்று சொல்கிறார்கள். நீங்கள் கூட திருக்குறளை அறத்துப் பால் என்று அறத்தில் தான் ஆரம்பிக்கிறீர்கள். இந்த அறம் என்றால் என்ன ? எல்லாவற்றையும் படித்தால் குழப்பம் தான் மிஞ்சுகிறது. அதை சுருக்கமாக சொல்ல முடியுமா " என்று கேட்டான். 

வள்ளுவரும் சிரித்துக் கொண்டே, "ஒரே வரியில் சொல்கிறேன் கேட்டுக் கொள் " என்று சொல்லி விட்டு உலகில் உள்ள அனைத்து அறங்களையும் ஒரே வரியில் , ஐந்தே  வார்த்தையில் சொன்னார் 

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் "

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. 

உலகில் உள்ள அனைத்து அறங்களுக்கும் மூல காரணம் மனம் தான்.

நல்லதோ , தீயதோ, அது முதலில் மனதில் தோன்றி பின் வார்த்தையாக செயலாக பரிணமிக்கிறது. 

மனம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். 

எனவே, கீதை சொல்கிறது - மனத் தூய்மை வேண்டும் என்று. 

அடுத்தது 

"ஞான யோகத்தில் உறுதி"

ஞானம் கொட்டிக் கிடக்கிறது. திரும்பும் திசை எல்லாம் ஞானம் தான். 

நிறைய படிக்கிறோம். நிறைய கேட்கிறோம். சரி என்று பட்டாலும் செய்வது இல்லை. 

ஏன் ?

ஒன்று சந்தேகம். ஒரு வேளை அது சரியாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற  சந்தேகம்.

இரண்டாவது, இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்று ஒதுக்கி வைத்து விட்டு உலக விஷயங்களின் பின்னே போவது. 

ஞான யோகத்தில் உறுதி இல்லாமை. ஒரு வழி சரியான வழி என்றால் அதில் உறுதியுடன், தைரியத்துடன் செல்ல வேண்டும். இல்லை என்றால் படிப்பது எதற்கு ? ஞானத்தை தேடுவானேன் ?

"தானம்"

தானத்திற்கும் , தெய்வ சம்பந்தத்திற்கும் என்ன தொடர்பு ? 

பொருள்களின் மேல் பற்று வளர வளர , மேலும் மேலும் வேண்டும் என்று மனம் ஆசைப் படும். அதை பெருக்க வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தொலைந்து போகுமோ, யாரும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்களோ என்ற பயம் வரும். இதெல்லாம் தெய்வ சிந்தனைக்கு ஒரு தடைதான் ?

தானம் செய்வதன் மூலம், இந்த பொருள்கள் என்னுடையவை அல்ல.  இவை இல்லாமலும் நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நமக்குத் தெரிய வரும். நாளை பொருள் காணாமல் போனால் கூட ஒரு பெரிய துக்கம் வராது. "என்ன , நானே கொடுப்பதற்கு பதில் யாரோ எடுத்துக் கொண்டார்கள் " என்ற மன நிலை வரும். அது மட்டும் அல்ல, சம்பாதித்ததை மற்றவர்களுக்கு கொடுத்து அவர்கள் மகிழும் போது நமக்கும் ஒரு மகிழ்ச்சி வரும். நான் அனுபவித்தால் என்ன அவர்கள் அனுபவித்தால் என்ன. எல்லாம் ஒன்றுதான் என்று தோன்றும் போது அனைத்துக்குள்ளும் இருக்கும் அந்த ஒன்றைப் பற்றிய ஞானம் தோன்றும். அதன் பெயர் ஆத்மாவோ, உயிரோ, இறைவனோ ...ஏதோ இருந்து விட்டுப் போகட்டும். பிற உயிரை தன் உயிர் போல நினைக்கும் அந்த அருள் உள்ளம் பிறக்கும். 

அன்பும், அருளும் பிறக்கும். 

தானம் துறவுக்கு இட்டுச் செல்லும். 

துறவு துன்பங்களில் இருந்து விடுதலை தரும். 

தானம் பற்றி மேலும் சிந்திப்போம்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/161-2.html

Sunday, July 17, 2016

கீதை - 16.1 - தெய்வ சம்பந்தம் - பாகம் 1

கீதை - 16.1 -  தெய்வ சம்பந்தம் - பாகம் 1

श्रीभगवानुवाच
अभयं सत्त्वसंशुद्धिर्ज्ञानयोगव्यवस्थितिः ।
दानं दमश्च यज्ञश्च स्वाध्यायस्तप आर्जवम् ॥१६- १॥
ஸ்ரீ பகவாநுவாச
அபயம் ஸத்த்வஸம்ஸு²த்தி ⁴ர்ஜ்ஞாந யோக³வ்யவஸ்திதி: |
தா³நம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

அபயம் = பயம் இன்றி

ஸத்த்வஸம்ஸு²த்தி = உள்ளத் தூய்மை

ஞான யோக = ஞான யோகத்தில்

வ்யவஸ்திதி: = உறுதியுடன்

தாநம் = தானம்

தமஸ் = புலன்களை கட்டுப் படுத்தி

ச = மேலும்

யஜ்ஞஸ்= அர்ப்பணிப்புடன்

ச = மேலும்

ஸ்வாத்யாயஸ்தப = ஆழ்ந்து சிந்தித்து

ஆர்ஜவம் = நேர்மையுடன், எளிமையுடன்

பயமின்மை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, தானம், புலனடக்கம், தன்னலமின்மை, தீர்க்க சிந்தனை, நேர்மை மற்றும் எளிமை. 

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்களை பட்டியல் போடுகிறது கீதை. தெய்வ சம்பந்தம் உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் ?

அதில் முதலாவது

பயமின்மை.....

பொதுவாகவே மத சம்பந்தப் பட்ட நூல்கள், பணியாக இரு, பெரியோர் சொல்வதைக் கேள், கீழ் படிந்து நட என்று நம்மை எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவர்களாக மாற்றி வைத்து விடும். சொன்ன படி கேட்காவிட்டால் சாமி கண்ணைக் குத்தும் என்று சின்ன வயதில் தொடங்கி, பாவம் செய்தால் நரகம் என்று பயமுறுத்தும். எண்ணெய் சட்டி, நெருப்பு, என்று ரொம்ப பயமுறுத்தும்.

கீதை தான் முதன் முதலில் பயமின்றி இரு என்கிறது.

தெய்வ சம்மதம் உள்ளவன் பயம் இன்றி இருப்பான். அவன் யாருக்கும், எதற்கும் பயப்படமாட்டான்.

உங்களுக்கும் பயம் எங்காவது இருந்தால், இன்னும் தெய்வ சம்மதம் ஏற்படவில்லை என்று அறிந்து கொள்ளுங்கள்.

"காலா என் கால் அருகில் வாடா " என்று சொன்ன பாரதியின் துணிவு இருக்க வேண்டும்.

பயம் எதனால் வருகிறது ?

அறிவின்மையால் பயம் வருகிறது. அறிவின்மையால் குழப்பம் வருகிறது. குழப்பத்தால் பயம் வருகிறது.

தெய்வ சம்பந்தம் உள்ளவர்களின் குணங்கள் என்னென்ன என்று பட்டியல் போட வந்த கீதை முதலில் சொன்னது "பயமின்மை" யைப் பற்றி.

"அச்சம் தவிர்"

எதற்கும் பயம். உண்மை என்று தெரிந்ததை செய்யப் பயம்.

பயம் நம்மை முடக்கிப் போட்டு விடும்.

தெய்வத்தை அணுக வேண்டுமா ? முதலில் பயத்தை விட வேண்டும்.

(வளரும்)

Thursday, July 14, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 8

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 8

ஸ்லோகம் 19: குழப்பமும் தடுமாற்றமும் இன்றி , எவன் நானே புருஷோத்தமன் என்று அறிகிறானோ, அவனே அனைத்தும் அறிந்தவன். அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்.

குழப்பமும் தடுமாற்றமும் ஏன் வருகிறது ? அனைத்தும் ஒரு சக்தியின் வெளிப்பாடு என்ற ஞானம் இல்லாததால் வருகிறது.

"அவன் என்னை அனைத்து வடிவிலும், நிலையிலும் வணங்குகிறான்."

என்கிறது கீதை.

நான் வணங்கும் கடவுள் இப்படித்தான் இருப்பார். அவர் வேறு மாதிரி இருக்க மாட்டார். அவரை மட்டும் தான் வணங்குவேன் என்பதெல்லாம் குழப்பம் மற்றும் தடுமாற்றத்திற்கே வழி வகுக்கும். அனைத்து வடிவிலும், நிலையிலும் அவன் ஒன்றுதான்.

அவனருளே கண்ணாகக் கணினல்லால் இப்படியன்
இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என் றெழுதிக் காட்டொணாதே

என்பார் திருநாவுக்கரசர்.

ஸ்லோகம் 20: குற்றம் அற்றவனே, இவாறாக இரகசியமான  இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரத குலத்தவனே ,  இதை  உணர்ந்தவன்  புத்திமானாவான். அவனே செய்யத் தகுந்ததை செய்வான். 

எது அனைத்திலும் இருப்பதோ, இதில் இருந்து அனைத்தும் வருமோ, எது அனைத்துமாய்  பரந்து விரிந்து நிற்கிறதோ அதை அறிபவன் புத்திமான். மயக்கமும் குழப்பமும் அற்றவன் புத்திமான். பற்றற்று இருப்பவன் புத்திமான். வினைகளுக்கு காரணம் தெரிந்து அவற்றை தவிர்ப்பவன் புத்திமான். அவன் செய்யும் காரியங்கள் சரியானதாக இருக்கும். அந்த புத்தி, ஞானம் இல்லாதவன் இதைச் செய்தாலும் அது தவறாகத்தான் போகும்.

எனவே, அந்த புத்தி, ஞானம் , உணர்வு வராதவரை பேசாமல் இருப்பது உத்தமம்.

பதினைந்தாம் அத்யாயம் தொகுப்பு முற்றியது.

மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.

மூலத்தைப் படியுங்கள். குழப்பம் இல்லாதவர் வியாசர்.

என் உரை தவறாக இருக்கலாம். மூலம் தவறாக இருக்க முடியாது. உரைகள்  மூலத்தை படிக்க ஒரு தூண்டுகோல். அவ்வளவுதான். உரையே மூலமாக முடியாது. உரைகளை படித்து விட்டு நின்று விடாதீர்கள். மூலத்தை அறிய, உரைகள் ஒரு படிக்கட்டு. அவ்வளவே.

எதெதெற்கோ நேரம் ஒதுக்கும் போது, கீதையின் மூலத்தை படிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.

புரிந்தவரை அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

வாழ்த்துக்கள்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-8.html

Wednesday, July 13, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 7

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 7

ஸ்லோகம் 15: அனைவரின் இதயத்திலும் (உள்ளேயும்) நான் இருக்கிறேன். நினைப்பும், ஞானமும், மறதியும் என்னிடம் இருந்து உருவாகின்றன. வேதங்களில் அறியப்படும் பொருள் நான். வேதத்தை உருவாகியவன் நான். வேதத்தை அறிபவன்  நான்.

நாம் சிறு வயதில் சிலவற்றை அறிந்து கொள்கிறோம். நமக்குச் சொல்லப் படுகிறது. கடவுள், ஆசாரியன், சொர்கம், நரகம், பாவம், புண்ணியம், மறு பிறப்பு, ஆத்மா, கர்ம வினை என்றெல்லாம் ஏதேதோ படிக்கிறோம், யார் யாரோ சொன்னதை கேட்கிறோம். சிறிது காலத்தில் , அது தான் உண்மை , அதைத் தவிர வேறு எதுவும் உண்மை இல்லை என்று சாதிக்கத் தலைப் படுகிறோம். நம்மை போல மற்றவர்களும் இதே போல கேட்டு வளர்ந்து இருக்கலாம் அல்லவா ? அவர்கள் கேட்ட, படித்த உண்மைகள் வேறாக இருக்கலாம் அல்லவா. நாம் அறிந்தது மட்டும் தான் உண்மை என்று எப்படிச் சொல்ல முடியும் ?

மேலும் மேலும் புதிதாக கற்க வேண்டும் என்றால் , பழையனவற்றை மறக்க வேண்டும். நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று அடம் பிடிக்கக் கூடாது. நினைப்பும் , ஞானமும் எப்படி உண்மையை அறிய உதவுகிறதோ அதே போல் மறதியும் தேவை.

அது மட்டும் அல்ல, உண்மை என்பது ஏதோ வேதங்களில், பக்தி பாடல்களில், உபன்யாசங்களில் இருப்பது அல்ல. அப்படி இருந்தால் எல்லோரும்  அதை கண்டு கொள்ள முடியுமே. உண்மை என்பது தனி மனித அனுபவம்.

வேதமும் நானே. வேதத்தை உருவாக்கியவனும் நானே. வேதத்தில் சொல்லப் பட்டவைகளும் நானே.

எல்லாம் நமக்குள் இருக்கிறது. தனி மனித அனுபவமாய். மற்றவர்களின்  அனுபவம் ஒரு போதும் உங்கள் அனுபவமாக முடியாது.

உண்மையை கண்டு அறியும் வழி, வழி அல்லாத வழி. இது வரை யாரும் போகாத வழி. நீங்கள் மட்டுமே போக முடிந்த வழி. தனியாகத்தான் போக வேண்டும்.

இரவல் ஞானங்களை திருப்பி கொடுத்து விடுங்கள்.

உங்கள் ஞானத்தை நீங்களே கண்டு பிடியுங்கள்.

ஸ்லோகம் 16: உலகம் அழியக் கூடியது மற்றும் அழிவில்லாதது என்ற இரண்டு புருஷர்களால் ஆனது. அழியக்கூடியவற்றில் இருந்து விடுதலை பெற்றவனே  அழிவற்றவன் என்று சொல்லப்  படுகிறான்.

 நரை,திரை , மூப்பு என்று வந்தாலும் அவற்றிற்கு கீழே உள்ள நீங்கள்  என்றும் நீங்கள் தான். மாறாதவர். உடல் மாறும். மனம் மாறும். தோற்றம் மாறும். அனைத்தும் மாறினாலும், மாறாத அடிப்படைதான்  நீங்கள். மாறுகின்றவற்றை விட்டு , மாறாத , நிரந்தரமானவற்றை அறிய முற்படுங்கள். 

பெற்றோர், உடன் பிறப்பு, கணவன் , மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்ற அறிவு, சேர்த்த செல்வம், சேமித்த ஞாபகங்கள் எல்லாம் மாறும். 

அப்படி என்றால் மாறாதது எது ? ஒன்று மாறுகிறது என்றால், மாறாதது ஒன்று இருக்க வேண்டும். அலை மாறும், கடல் மாறாதது. 

மாறாத ஒன்று எது என்று சிந்தியுங்கள். 

ஸ்லோகம் 17: இவற்றில் இருந்து வேறு பட்டவன் உத்தம புருஷன். மூன்று உலகங்களிலும் அவனே நிரந்தரமானவன், உயர்ந்தவன், பரமாத்மா.

நாம் நம்மை மற்றவர்களை அல்லது மற்றவற்றை வைத்துதான் இனம் காண்கிறோம். இன்னாரின் பிள்ளை, இதை இதை படித்தவன், இங்கே வேலை செய்பவன், இன்னாரின் கணவன்/மனைவி என்று மற்றவற்றின் மூலம் தான் நாம் நம்மை அடையாளம் காண்கிறோம். இப்படி வேறு ஒன்றின் துணை இல்லாமால் என்னை நான் சொல்வது என்றால்  எப்படி சொல்லுவது ? நான் யார் என்று எப்படி சொல்லுவது. இன்ன மதம், இன்ன ஜாதி, இன்ன நாடு, மொழி, என்று பிற ஒன்றின் துணை இல்லாமல் சொல்வது என்றால் நான் என்னை எப்படி சொல்லுவேன் ? அப்படி மற்றவற்றில் இருந்து வேறுபட்டு தனித்து நிற்பவனே உத்தம புருஷன். அவனே நிரந்தரமானவன். உயர்ந்தவனா. பரமாத்மா. 

ஸ்லோகம் 18: நான் மாற்றத்தையும், மாறாதவற்றையும் கடந்து நிற்பதால், இந்த உலகில், வேதங்களில் நான் புருஷோத்தமன் என்று கூறப் படுகிறேன். 

மற்றவற்றின் மூலம் என்னை நான் இனம் கண்டு சொல்லுவது என்றால், மற்றவை மாறும் போது, நானும் மாறுவேன்.  வேறு எதன் துணையும் இல்லாமல் , என்னை நான் கண்டு சொல்ல  முடியும் என்றால் அந்த நானே வேதங்களில் சொல்லப் படும் புருஷோத்தமன். 

முயன்று பாருங்கள் வேறு இதன் துணையும் இல்லாமல் உங்களை நீங்கள் எப்படி இனம் காண  முடியும் என்று ?

(தொடரும்....)

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-7.html

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 6

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 6

ஸ்லோகம் 10: "அவன் இருக்கும் போதும், புறப்படும் போதும், குணங்களை சார்ந்து இருக்கும் போதும் அவனை மூடர்கள் காண்பது இல்லை. ஞான த்ரிஷுடி (ஞானக் கண் ) உள்ளவர்களே அவனக் காண்கிறார்கள். "

இன்பமும் துன்பமும் வெளியே இல்லை. இன்பமும் துன்பமும் நமக்குள் இருக்கிறது. அதை மூடர்கள் காண்பது இல்லை. அதை அறிய அறிவு வேண்டும். ஞானம் வேண்டும். இன்பம் வெளியே எங்கோ இருக்கிறது என்றால் அதை எல்லோரும் போய் அடைந்து விடலாமே. துன்பம் வெளியே இருக்கிறது என்றால் அதை விட்டு விலகி விடலாமே. ஏன் முடிவது இல்லை ? ஏன் என்றால் இன்பமும் துன்பமும் நமக்குள்ளே. சிந்தித்துப் பாருங்கள்.

ஸ்லோகம் 11: முயற்சியுடைய யோகிகள் அவனை தங்களுக்குள்ளே காண்கிறார்கள். முயற்சி செய்தாலும், தயாராக இல்லாதவர்கள் அவனை காண மாட்டார்கள். 

யோகிகள் அனைத்தும் தனக்குள்ளே என்று அறிவார்கள். மற்றவர்கள் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் அதை அறிய மாட்டார்கள். ஏன் ? ஏன் என்றால் அவர்கள் அறிந்து கொள்ள தயாராக இல்லை. எவ்வளவு நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னாலும் "அதெல்லாம் சரி,  ஆனால் நடை முறைக்கு சரியாக வராது " என்று ஒதுக்கித்த  தள்ளி விட்டு மீண்டும் உண்மையைத் தேடி பயணத்தைக் தொடர்வார்கள். உண்மை கிடைத்தால், "இது சரி தான், ஆனால், நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள். அவர்கள் உண்மையை அறியத்  தயாராக இல்லை.

மனிதனுக்கு மூன்று பசி உண்டு.

வயிற்றுப் பசி - உணவு தேடும் பசி.

உடற் பசி - காமம்.

அறிவுப் பசி - ஞானம் தேடும் தவிப்பு. பல பேருக்கு இது வருவது இல்லை. பசி என்றால் , அது தீரும் வரை ஓய்வு ஒழிச்சல் இருக்காது. வேறு எதுவும்  பிரதானமாய் படாது.

சாம்ராஜ்யத்தை விட்டு விட்டு ஓடினான் கௌதம சித்தார்த்தன்.

அத்தனை செல்வத்தையும் உதறிவிட்டு விட்டுப் போனார் பட்டினத்தார்.

அது அறிவுப் பசி.

ஸ்லோகம் 12: சூரியன், சந்திரன், அக்னி இந்த மூன்றில் உள்ள ஒளியும் என்னுடையது என்றே உணர்.

ஆயிரம் தான் புத்தகங்கள் இருந்தாலும், எவ்வளவு பேச்சுகளை கேட்டாலும், அறிவின் ஒளி உள்ளிருந்துதான் வர வேண்டும். வெளியில் உள்ளவை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். ஆனால், தெளிவு என்பது , ஞானம் என்பது தனக்குள் இருந்து வர வேண்டும். படித்து அறிய முடியாது. கேட்டு தெரிந்து கொள்ள முடியாது. உள்ளுக்குளே தேட வேண்டும். 

ஸ்லோகம் 13: நான் பூமியில் புகுந்து , உயிர்களை என் சக்தியால் தாங்குகிறேன். ரச வடிவான  சோம பாணமாகி மருந்தாக அவைகளை காக்கிறேன்.

உணவு தெய்வீகமானது. உணவு என்பது உயிரையும் உடலையும் சேர்த்து வைக்கும் அமிர்தம். உணவை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கண்ட நேரத்தில் உண்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, தேவை இல்லாமல் உண்பது என்பதெல்லாம் கூடாது. நமது உள் உணர்வுகளை கூர்மை படுத்தி நம்மை ஞான மார்கத்தில் இட்டுச் செல்ல உணவு கட்டுப்பாடு மிக மிக  அவசியம். உணவு ஞானத்தைத் தூண்டும். உணவு, நோயை போக்கி உயிரை காக்கும். 

ஸ்லோகம் 14: நான் வைசுவாநரனாய், உயிர்களில் உடலை சார்ந்து இருக்கிறேன். ; பிராணன் அபானன் என்பவற்றைக் கொண்டு நான்கு விதமாக உணவை ஜீரனமாக்குகிறேன். 

உணவு எவ்வாறு ஜீரணமாகி உடலோடு சேர்ந்து விடுகிறதோ, அது போல அறிவும் நம்முள் சேர்ந்து ஒன்றோடு ஒன்றாக ஆகி விடுகிறது. நாம் எதையெல்லாம் படிக்கிறோமோ, அறிய முற்படுகிறோமோ நாம் அதுவாகவே ஆகி விடுகிறோம். 

சில பேர், " நீங்கள் சொல்வது எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதை எப்படி கடை பிடிப்பது என்று தெரியவில்லை" என்று கூறுகிறாரகள். நான் அவர்களுக்குச் சொல்லுவது எல்லாம் ஒன்றுதான். நீங்கள் ஒன்றும் கடை பிடிக்க வேண்டாம். கீதையை நீங்கள்  வாசிக்கும் போது அது தானாகவே கரைந்து உங்களுக்குள் மறைந்து விடுகிறது.  உங்கள் எண்ணமும் ,செயலையும் கீதை மாற்றும். நீங்கள் ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம். அடிக்கடி வாசித்துக் கொண்டே இருங்கள். அடிக்கடி உணவு உண்பதைப் போல. நீங்கள் , உங்களை அறியாமலேயே கீதையின் பாதையில்செல்வீர்கள். 

(தொடரும்...)

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-6.html

Tuesday, July 12, 2016

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 5

கீதை - அத்யாயம் 15 - தொகுப்புரை - பாகம் 5

ஸ்லோகம் 4 - உலகத்தில் நாம்  அறிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான ஒன்று எது என்றால் , நம்மை நாமே அறிந்து கொள்வதுதான்.

அது ஏன் முக்கியம் ? நம்மை நாம் அறிவதால் என்ன பெரிதாக நிகழ்ந்து விடப் போகிறது. இத்தனை நாள் என்னை நான் அறியாமல் இருந்து என்ன கெட்டுப் போய் விட்டது ?

நமது அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நாம் யார் என்று அறியாமல் இருப்பது தான். நமது ஆசைகள், கோபங்கள், வருத்தங்கள், கனவுகள், வெறுப்புகள் அனைத்துக்கும் காரணம் நான் தான். நான் ஏன் ஒன்றின் மேல் ஆசை கொள்கிறேன் ? ஏன் சிலவற்றின் மேல் எனக்கு பயம் வருகிறது ? காரணம் எனக்குச் சொல்லப்பட்ட அறிவு, நான் படித்த புத்தகங்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பெரிய கூட்டமே நமக்குள் இருந்து ஆராவாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் தாண்டி, நான் யார் என்று அறிய வேண்டும்.

ஸ்லோகம் 5 - துன்பங்களுக்கு இரண்டு தவறான எண்ணங்கள். ஒன்று நம்மை பற்றியது. இரண்டாவது உலகைப் பற்றியது. தன்னைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு அகந்தை என்று பெயர். உலகைப்  பற்றிய தவறான எண்ணங்களுக்கு மயக்கம் என்று பெயர்.

இந்த இரண்டு தவறான எண்ணங்களை விட்டு, பற்று இல்லாமல், சுக துக்கம் என்ற  பாகு பாடுகளை கடந்து தன்னை அறிந்து அதில் நிலைப்பவன்  எந்த  கேட்டையும் அடைய மாட்டான்.

ஸ்லோகம் 6 : தன்னை அறிந்தவன் இன்பத்தை வெளியில் தேட மாட்டான். தனக்குள்ளேயே அவன் இன்பத்தை காண்பான்.

ஸ்லோகம் 7: இந்த உலகம் அனைத்தும் ஒன்றின் கூறே. ஏதோ ஒன்றில் இருந்து  பல்கி பெருகி வந்ததுதான் இந்த உலகம். நாம் அனைவரும்  அந்த ஒன்றில் இருந்து வந்தவர்கள் தான் என்று தோன்றும் போது, நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்ற ஞானம் தோன்றும்.

ஸ்லோகம் 8: மனதை எப்போதும் நல்ல விஷயங்களிலேயே செலுத்த வேண்டும்.   தீய எண்ணங்கள் , நாளடைவில் தீய  செயல்களை   செய்யத் தூண்டும். தீய புத்தகங்கள், தீய திரைப் படங்கள், தீய தொலைக்காட்சி தொடர்களை  பார்ப்பது , படிப்பது தவிர்ப்பது நல்லது. நல்லதை வாசிக்க வேண்டும். நல்லவர்களோடு பழக வேண்டும். நல்லதையே நினைக்க வேண்டும்.

"நினைவு நல்லது வேண்டும் "

ஸ்லோகம் 9: நாம் நமது எண்ணங்களால் தூண்டப் பட்டு காரியங்களை செய்கிறோம். எண்ணங்கள் எதனால் தூண்டப் படுகிறது ? புலன்களின் மூலம் நமக்கு உள்ளே செல்லும் செய்திகளால்  எண்ணங்கள் தூண்டப் படுகின்றன. அழகான பெண்ணை கண்கள் பார்த்தால், மனதில் ஒரு பரவசம். இனிப்பை பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறுகிறது. புலன்கள் வழி செய்திகள் உள்ளே போகின்றன.  உள்ளே போன செய்திகள் நம்மை  செலுத்துகின்றன. எனவே, எது உள்ளே போகிறது என்று கவனமாக இருக்க வேண்டும்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-5.html

(தொடரும்)

Thursday, July 7, 2016

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 4

கீதை - 15 அத்யாயம் - தொகுப்புரை - பாகம் 4

மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒரு விதத்தில் வளர்கிறது. வேர் நீர் தேடி கீழ் நோக்கி போகிறது. 

கிளைகள் ஒளி தேடி வளைந்து நெளிந்து பரந்து விரிகிறது. மேலும் மேலும் சூரிய ஒளி வேண்டும் என்று ஒரு மரத்திற்கு இன்னொரு மரம் போட்டி போட்டுக் கொண்டு மேல் நோக்கி வளர்கின்றன. 

இப்படி தேவைகளால் மரம் பல விதங்களில் வளர்கிறது.

அது போலத்தான் நாமும், நமது ஆசைகளால், தேவைகளால் உந்தப்ப பட்டு காரியங்களை செய்கிறோம்.

ஓட்டம் நிற்க வேண்டும் என்றால், ஏன் ஓடுகிறோம் என்று சிந்தியுங்கள். எது உங்களை செலுத்துகிறது என்று சிந்தியுங்கள். பணம், புகழ், அதிகாரம், எதிகாலத்தைப் பற்றிய பயம் என்று ஏதோ ஒன்று உங்களை செலுத்திக் கொண்டு இருக்கும்.

உங்களின் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஒரு ஆசை அல்லது தேவை மறைந்து கிடக்கிறது. அது என்ன என்று ஆராய்ந்தால், உங்களை நீங்கள் அறிய முடியும்.  

அவற்றை அறியும் போது , அலைச்சல் நிற்கும். அலை ஓயும். அமைதி நிலவும். 

சரி, ஆசை மற்றும் தேவைகளை அறிந்து விட்டேன். இருந்தும் அவற்றை விட முடியவில்லையே ?

பிள்ளைகள் மேல் உள்ள  பாசம், கணவன்/மனைவி மேல் உள்ள பாசம், உடன் பிறப்புகளின் மேல் உள்ள காதல், பணத்தின் மேல் உள்ள பற்று , அது தரும் சுகம் இது எல்லாம் தெரிகிறது. எப்படி விடுவது ?

மீண்டும் மரத்திற்கே போவோம்.

வேர் வளர்கிறது, கிளை வளர்கிறது, இலை துளைக்கிறது, பூ பூக்கிறது....இவை எல்லாம் வரமால் நிறுத்த என்ன செய்ய வேண்டும் ?  

கிளைகளை வெட்டலாம். எப்படி வெட்டுவது ? அப்படியே வெட்டி போட்டு விட்டால் மரம் மொட்டையாகி ஒரு பயனும் இல்லாமால் அல்லவா போய் விடும் ? குளிர் தரும் நிழல், மணம் தரும் மலர், பசி தீர்க்கும்  கனிகள், பறவைகளுக்கு கூடு என்று இவை எதுவும் இல்லாமல்  எல்லா  கிளைகளையும் வெட்டி விட்டால் என்ன செய்வது ? 

மரத்தை கோடாலியால் வெட்டுவது போல, மன ஆசைகளை பற்றின்மை என்ற கோடாலியால் வெட்ட வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால், ஆசைகளை துறக்க வேண்டாம், அன்பை, காதலை துறக்க வேண்டாம்....அவற்றின் மேல் பற்று இல்லாமல்  இருக்க வேண்டும். அப்படி பற்று இல்லாமல் இருந்தால்  அதுவே மரத்தை கோடாலியால் வெட்டுவதற்கு சமம். 

பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள், சொத்து சுகம் இவை இல்லாம இருக்கட்டும். அனுபவியுங்கள். ஆனால் அவற்றின் மேல் பற்று வைக்காதீர்கள். 

இருந்தால் சந்தோஷம். 

இல்லாததும் இன்னொரு வகை சந்தோஷம் என்று இருங்கள். 

பற்று வைக்காமல் இருப்பது என்றால் என்ன ?

இது என்னது என்று பற்றிக் கொள்ளாமல் இருப்பது. 

இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும். 

முன்பே சொன்னது போல, ஒரு ஆகாய விமானத்தில் போகிறீர்கள், இரயில் வண்டியில் போகிறீர்கள்,  பேருந்தில் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  போய்ச் சேர வேண்டிய இடம் வந்தவுடன் இறங்கி   போய் கொண்டே இருப்பீர்கள் அல்லவா. 

அடடா, எனக்காக இந்த வண்டி எவ்வளவு செய்திருக்கிறது. இந்த வண்டியை விட்டு விட்டு நான் எப்படி போவேன் என்று யாரும் பயணம் செய்த வண்டியை கட்டி பிடித்துக் கொண்டு இருப்பது இல்லை. 

பயணத்திற்கு அது உதவியது. அவ்வளவுதான்.

உங்கள் வாழ்க்கை பயணத்தில் பெற்றோர், உடன் பிறப்பு, நட்பு, செல்வம் எல்லாம் முடிந்த வரை உதவும். அந்த வசதியை அனுபவித்துக் கொள்ளுங்கள். வசதி நின்று போய் விட்டதா, மேலே செல்லுங்கள். 

போகும் வழியில் வண்டி brake down ஆகி நின்று விட்டால், அடுத்த வண்டி பிடித்து போய் கொண்டே இருப்பது போல. 

பயணத்தை தொடருங்கள். இவர்கள் மற்றும் இவைகள் இடையில் வந்தவை. 

இன்னும் வரும். போகும். 

உங்கள் பயணம் , தனிப் பயணம் தான். 

உங்கள் வழியில் சில பேர் சேருவார்கள். சிறிது காலம் கழித்து அவர்கள் தங்கள் வழியில் போவார்கள். நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள். 

பயணம் இனிதே செல்ல வாழ்த்துக்கள்.

http://bhagavatgita.blogspot.in/2016/07/15-4.html