Sunday, May 31, 2015

கீதை - 13.1 - இடமும், அதை அறிபவனும்

கீதை - 13.1 - இடமும், அதை அறிபவனும்


श्रीभगवानुवाच
इदम् शरीरं कौन्तेय क्षेत्रमित्यभिधीयते ।
एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः ॥१३- १॥

ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே |
ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||

ஸ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்

இதம் = இந்த

ஸரீரம்= சரீரம், உடல்

கௌந்தேய = குந்தியின் மகனே

க்ஷேத்ரம் இதி = க்ஷேத்ரம்

அபிதீயதே = என்று சொல்லப் படுகிறது

ஏதத் = இது

யோ = எவன்

வேத்தி = அறிகிறானோ

தம் = அவன்

ப்ராஹு: = அறியப்படுகிறான்

க்ஷேத்ரஜ்ஞ = க்ஷேத்ரஞன் என்று

இதி = அவ்வாறு

தத்வித: = அதை அறிந்தவர்கள்

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,  குந்தியின்  மகனே,  இந்த உடம்பு க்ஷேத்திரம் . இதனை அறிவோனை க்ஷேத்திரக்ஞன் என்று அதை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மிக நுட்பமான விஷயத்தை வியாசர் இங்கே விளக்கத் தொடங்குகிறார்.

முதலில், இந்த உடல் க்ஷேத்ரம் என்று  சொல்கிறார். க்ஷேத்ரம் என்றால் என்ன ? காசி , இராமேஸ்வரம் எல்லாம் புண்ணிய க்ஷேத்ரம் என்று சொல்லுகிறோம். க்ஷேத்ரம் என்றால் என்ன ?

க்ஷேத்ரம் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு "கொண்டிருப்பது" என்று பொருள். வயல், இடம், என்று பொதுவாகச் சொல்லுவார்கள்.

புண்ணியத்தை கொண்டிருப்பது புண்ணிய க்ஷேத்ரம்.

இந்த உடல் க்ஷேத்ரம் என்றால் , இந்த உடல் எதையோ கொண்டிருக்க வேண்டும். அது தனக்குள் எதையோ வைத்திருக்க வேண்டும்.

எதை வைத்திருக்கிறது ? 

  
"அறிவோனை க்ஷேத்ரஞன்" என்று அறிந்தவர்கள் கூறுவார்கள்.

இந்த உடலுக்குள் அறியும் ஒன்று இருக்கிறது.

அது புலன்கள் வழியாக செய்திகளைப் பெற்று, அவை என்ன என்று அறிந்து  அதற்கு  தகுந்த மாதிரி நடந்து கொள்கிறது.

இந்த அறியும் செயல்பாட்டை க்ஷேத்ரஞன் என்று கூறுகிறார் வியாசர்.

ஒரு உடல் எவ்வளவு சின்னதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று உண்டு. அது என்ன ?

தன்னைச்  சுற்றியுள்ளதை அறிவது . க்ஷேத்ரத்தை அறிவது.

பசி என்றால் உணவு உண்ணவேண்டும் என்று அறிந்து உணவை நோக்கிப் போகிறது.

ஆபத்து என்று அறிந்தால் பாதுகாப்பை நோக்கிப் போகிறது.

இப்படி தன்னைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது.

எது அறிகிறது ? உடலா ? உடல் வெளியில் இருந்து வரும் செய்திகளை உள்ளே தள்ளும்  ஒரு கருவி. அவ்வளவுத்தான்.

அறியும்  செயல் உள்ளே நிகழ்கிறது.

அந்த அறியும்  செயலை, க்ஷேத்ரஞன் என்று குறிப்பிடுகிறார்.

  உயிர் என்றோ , ஆத்மா என்றோ போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அறியும் செயல்  நிகழ்கிறது. அந்த செயல்பாட்டுக்கு க்ஷேத்ரஞன் என்று பெயர்.

 சரி,அதனால் என்ன ? இதைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது ?


பார்ப்போம்  

Saturday, May 30, 2015

கீதை - 13.1 - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

கீதை - 13.1 - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்


अर्जुन उवाच 
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||

அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான் 

ப்ரக்ருதிம் = பிரகிருதி 

புருஷம் = புருஷம் 

சைவ = மேலும் 

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம் 

க்ஷேத்ரஜ்ஞன் = க்ஷேத்ரஜ்ஞன்  

மேவ ச = அவற்றுடன் 

ஏதத்³வேதி³தும் = இவற்றை அறிய 

இச்சா²மி = இச்சை கொண்டுள்ளேன் 

ஜ்ஞாநம் = ஞானம் 

ஜ்ஞேயம்= ஞேயம்

ச கேஸ²= கேசவனே 

கேசவா, பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் இவற்றை அறிய விரும்புகிறேன் 

வாழ்கை , உலகம் என்றால் என்ன ?

உடல், அதில் உள் இயங்கும் ஒரு  சக்தி,  உடலுக்கு வெளியே இயங்கும் உள்ள பொருள்கள், அந்த பொருள்களுக்கு இடையே நிகழும் பரிமாற்றம் இவற்றைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன் என்கிறான். 

நான் யார், என்னை இயக்குவது எது, இந்த உலகம் எதனால் ஆனது, எனக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றி இந்த அத்யாயம் அலசுகிறது. 

பிரகிருதி = இது உயிரற்ற பொருள் 
புருஷன் = சக்தி. Spirit என்று சொல்லுவார்களே அது. 
க்ஷேத்திரம் = இவை இரண்டும் இயங்கும் வெளி அல்லது இடம் 
க்ஷேத்திரக்ஞன் = இந்த வெளியை அறிபவன் 
ஜ்ஞாநம் = அறிவு, knowledge 
ஜ்ஞேயம் = அறியப்படுவது 

இவற்றைப் பற்றி ஆராய்கிறது இந்த அத்யாயம். 

மிக ஆழ்ந்த பொருள் பொதிந்த அத்யாயம்.


கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஆத்ம யோகம் இவற்றைப் பற்றியெல்லாம் கண்ணன்  கூறினான். அர்ஜுனன் அவற்றை முழுவதுமாக அறிந்தான் இல்லை. அவனுக்குள் குழப்பமே நிற்கிறது. 

கண்ணா, அதைஎல்லாம் விடு, நான் யார் ? இந்த உடலா, எனக்குள் இருக்கும் உயிரா ? 

இந்த உலகம் என்பது என்ன ? இந்த உலகை அறிந்து கொள்ளும் நான் யார் ? அறியும் ஞானம் என்பது என்ன ? எதை  அறிகிறேன் ? இவற்றைச் சொல்லு  என்கிறான். 

கண்ணனும் சொல்ல ஆரம்பிக்கிறான். 

வாருங்கள். அர்ஜுனனோடு கூட சேர்ந்து நாமும் இவற்றைப் பற்றி புரிந்து கொள்ள முயல்வோம்.

Thursday, May 28, 2015

கீதை - 12.20 - தர்மம் என்ற அமிர்தம்

கீதை - 12.20 - தர்மம் என்ற அமிர்தம் 


ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥१२- २०॥

யே து த⁴ர்ம்யாம்ருதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
ஸ்²ரத்³த³தா⁴நா மத்பரமா ப⁴க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: || 12- 20||

யே = அவர்கள்

து = மேலும்

தர்ம்யாம்ருத =  தர்மம் என்ற அமிர்தத்தை

இதம் = இந்த

யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட

பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
 
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன் 

மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு

பக்தாஸ் = பக்தர்கள்

தே = அவர்கள்

அதீவ = மிக அதிகமான

மே = அவன்

ப்ரியா: = பிரியமானவன்


இந்தத் தர்மம் என்ற அமிர்தத்தை நான் கூறியபடி என்னை பரமாகக் கொண்டு  நம்பிக்கையுடன்  வழிபடும் பக்தர் எனக்கு மிக இனியவர் 

மொத்தம் 36 குணங்களை வியாசர் கூறினார். இதுதான் தர்மம். இதை கடை பிடியுங்கள்  என்று சொல்கிறார்.

ஏன்  கடை கடை பிடிக்க வேண்டும் ? கடைபிடித்தால் என்ன ஆகும் ? கடை பிடிக்காவிட்டால்  என்ன ஆகும் ? இதெல்லாம் நடை முறையில் சாத்தியமா ? என்று  பல கேள்விகள் நமக்குள் எழுவது சகஜம்.

எனவே "நம்பிக்கையுடன்" என்று குறிப்பிடுகிறார். நம்பிக்கையுடன் ஆரம்பிக்க வேண்டும்.

மருத்துவர், மருந்து தருகிறார். நோய் குணமாகும் என்றும் நம்பித்தான் உண்கிறோம். கேள்வி கேட்டு கொண்டு இருப்பதில்லை.

பிறவி பிணிக்கு வியாசர் என்ற மருத்துவர் தரும் மருந்து இது.

இதை கடை பிடிப்பதை ஏதோ கடமை என்று நினைக்காமல்,  இதை ஒரு வழிபாடு  என்றே கொள்ள வேண்டும் கூறுகிறார்.

முயன்று பார்ப்போம்.


Wednesday, May 27, 2015

கீதை - 12.19 - இனிய வாழ்கை அமைய

கீதை - 12.19 - இனிய வாழ்கை அமைய 


तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् ।
अनिकेतः स्थिरमतिर्भक्तिमान्मे प्रियो नरः ॥१२- १९॥

துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||



துல்ய = துல்யமாக, சமமாக

நிந்தா = நிந்தனைகளை

ஸ்துதி =  துதிகளை,பாராட்டுகளை

மௌநீ = மெளனமாக

ஸந்துஷ்டோ  = முழுதும் திருப்தி அடைந்து

யேந கேநசித் = எதை அடைந்தாலும், அதன் மூலம்  


அநிகேத: = அ + நிகேத = வீடு இல்லாமல்

ஸ்தி²ரமதிர்  = ஸ்திர + மதி = உறுதியான புத்தியுடன்


பக்திமாந் = பக்திமான்

மே = என்

ப்ரியோ நர: = பிரியமானவன்


புகழையும் இகழையும் நிகராகக் கொண்டு , மெளனமாக, எது கிடைத்தாலும் அதில் மகிழ்ந்து, வீடு இல்லாமல்,  ஸ்திர புத்திய உடைய பக்தன் எனக்கு இனியவன். 

புகழையும் இகழையும் நிகராகக் கொண்டு = புகழும் இகழும் வெளியில் இருந்து   வருவன. மக்கள் தங்களுக்கு பிடித்ததை புகழ்வார்கள், பிடிக்காததை இகழ்வார்கள்.  இவை ஒன்று போல் இருப்பது இல்லை. இன்று பிடித்ததை நாளை  பிடிக்கவில்லை என்பார்கள். இன்று பிடிக்காததை நாளை , பிடிக்கிறது  சொல்வார்கள்.  இன்று புகழ்கிறார்களே என்று ஒன்று செய்தால், நாளை அதையே இகழ்வார்கள். உண்மையான பக்தன் இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளக்  கூடாது.  எல்லாம் ஒன்றுதான் என்று மேலே செல்ல வேண்டும்.

மனிதர்களின் புகழுக்காக செய்ய ஆரம்பித்தால் பின் நம் குறிக்கோள் மறந்து போகும்.  ஒன்று செய்கிறோம், அதனால் புகழ்  வருகிறது. அந்த புகழ் பிடித்துப் போய் விட்டால் , மீண்டும் மீண்டும் அதைச் செய்ய வேண்டி  இருக்கும்.ஒரு கால   கட்டத்தில் நமக்கே சலிப்பு வந்தாலும், புகழுக்காக செய்ய வேண்டி இருக்கும்.  ஒரு நாள் புகழ்ந்த அதே மனிதர்கள் இகழவும் தலைப் படுவார்கள்.  அட, இதுக்கா இத்தனை நாள் மெனக்கெட்டேன் என்று வருந்த வேண்டி வரும்.

புகழில் சந்தோஷப் பட்டால், இகழ்வில் வருந்துவது தவிர்க்க முடியாதது.

பதவியோ,பதவி உயர்வோ கிடக்கும் போது சந்தோஷப் பட்டு பார்ட்டி கொடுப்பவன்,  அந்த பதவி போகும்போது கட்டாயம் அழுவான்.

ரெண்டும் ஒன்றென்று இருக்க வேண்டும்.

மெளனமாக: வாய் பேசாமல் மெளனமாக இருப்பது ஒன்றும் கடினம் இல்லை. மனம், புத்தி மெளனமாக இருக்க வேண்டும். அது மிக மிக கடினம்.

அருணகிரிநாதருக்கு , முருகன் உபதேசித்தது இரண்டே இரண்டு வார்த்தைகள்தான்.

"சும்மா இரு"

அவ்வளவு தான்.

அந்த இரண்டு வார்த்தைகளுக்கு , இரண்டு  வார்த்தைகளுக்கு பொருள் ஒன்றும் தெரியவில்லையே என்று   வருந்தினார் அருணகிரி.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற  என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

மனம் ஓடிக் கொண்டிருந்தால் சொல்லும் ஓடிக் கொண்டே இருக்கும்.  வாய் திறக்காவிட்டாலும் , சப்தம் இருந்து கொண்டே இருக்கும்.

மௌனம் ஞான  வரம்பு என்று  சொல்லுவார்கள்.

பேசுவதால் பயனில்லை என்பார் பாரதி. பேசுவது என்றால் மற்றவர்களிடம் பேசுவது மட்டும்  அல்ல, நமக்குள் நாம் பேசுவதும் தான்.

எதிலும் முழு திருப்தி அடைந்து ....சிலருக்கு எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். ஓட்டை பாத்திரம் என்று நிறையும் ? இருப்பதில் திருப்தி வந்து விட்டால், இல்லாததற்கு மனம் ஆசைப் படாது.


வீடு இல்லாமல் : வீடு இல்லாமல் என்றால் ஏதோ இருக்க இடம் இல்லாமல் என்று அர்த்தம் அல்ல.  ஒரு ஓட்டலில் தங்குகிறோம். அதை நம் வீடு என்று நாம்   சொல்வது இல்லை.ஏன் ? ஏன் என்றால் அது நம்முடையது அல்ல. சில நாள்  இருப்போம்.பின்  காலி செய்து விட்டுப் போய் கொண்டே இருப்போம்.  ஐயோ, இந்த அறையை காலி செய்கிறேனே என்று என்றாவது வருந்தியது உண்டா.

நாம் இருக்கும் வீடும் அப்படித்தான். ஒரு நாள் அதை விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதான். அப்படி பற்று இல்லாமல் இருக்க வேண்டும்.

ஓட்டல் அறையில் எல்லா சௌகரியங்களும் இருக்கும். இருக்கும் வரை அவற்றை அனுபவித்துக் கொள்ள வேண்டியது. போகும் போது ஒரு கவலை இல்லாமல்  கிளம்ப விடுகிறோம் அல்லவா, அது போல நம்மை சுற்றியுள்ள பொருள்கள், உறவுகள் எல்லாம் இருக்கும் வரை நாம் அனுபவித்துக் கொள்ள வேண்டியது. இல்லை என்றால், பெரிதான துக்கம் ஒன்றும்  கொள்ளத் தேவையில்லை.

வீடு என்று ஒன்று இல்லாமல்  என்பதன் அர்த்தம் , பற்றற்று இருத்தல்.

அப்படிப்பட்டவன் , என் மனதிற்கு இனியன் என்கிறான் கண்ணன்.

கண்ணனுக்கு இனியனோ இல்லையோ, அப்படி இருந்தால் நமக்கு நாமே இனியவர்களாக இருப்போம். வாழ்கையே இனிமையாக மாறிப் போகும்.

எல்லாம் முடியாவிட்டாலும், முடிந்தவரை முயல்வோமே ?





Tuesday, May 26, 2015

கீதை - 12.18 - பிரிந்தோம், சேர்வோம்

கீதை - 12.18 - பிரிந்தோம், சேர்வோம் 


समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः ।
शीतोष्णसुखदुःखेषु समः सङ्गविवर्जितः ॥१२- १८॥

ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||

ஸம: = சமமாக

ஸத்ரௌ ச மித்ரே = சத்ரு, மித்ரு = பகைவனிடத்தும், நண்பனிடத்தும்

ச = மேலும்

ததா = அதே போல

மாநாபமாநயோ: = மானத்திலும், அவமானத்திலும்

ஸீதோஷ்ண = சீத + உஷ்ண = சீதம் என்றால் குளிர்ச்சி; உஷ்ணம் என்றால் சூடு. குளிரிலும், வெப்பத்திலும்

ஸுக துகே ஷு = சுகத்திலும், துக்கத்திலும்

ஸம: = சமமாக

ஸங்க³விவர்ஜித: = பற்று இல்லாதவனோ . சங்கம் என்றால் சேர்த்தல், பற்று கொள்ளுதல். விவர்ஜித என்றால் விலகுதல்.  பற்றில் இருந்து விலகி இருப்பவன். பற்றில்லாதவன்

பகைவனிடம், நண்பனிடமும்
மானத்திலும், அவமானத்திலும்
குளிரிலும், வெப்பத்திலும்
இன்பத்தையும், துன்பத்தையும் 
சமமாக கொள்பவன் எவனோ ....


அது எப்படி முடியும் ? என்ற கேள்விதான் முதலில் நமக்குத்  தோன்றும்.

நண்பனையும், பகைவனையும் ஒன்றாக எப்படி கருத முடியும் ?
அதே போல மான அவமானங்களை ஒன்றாக எப்படி கொள்ள முடியும்.

இதெல்லாம் ஏதோ வார்த்தை ஜாலம் போல இருக்கிறதே தவிர நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற சந்தேகம் எழுவது ஞாயம்.

பின் ஏன் வியாசர் அப்படி சொல்கிறார் ?

சிந்திப்போம்.

முதலில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நமது உள்ளும் புறமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. நாம் வெளியில் என்ன செய்கிறோமோ அது  உள்ளுக்குள் நிகழும். அதே போல் உள்ளுக்குள் என்ன செய்கிறோமோ அது வெளியில் நிகழும்.

எப்படி ?

நான் ஒரு மதத்தை பின் பற்றுகிறேன். அதில் சொன்ன செய்திகள் எனக்கு உடன் பாடாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இன்னொரு மதத்தில் வேறு விதமாக சொல்கிறார்கள் என்றால் அந்த மதமும், அதன் கொள்கைகளும் எனக்கு பிடிக்கவில்லை. சில சமயம் கண்டும் காணாதது போல  ,இருக்கிறேன், சில சமயம் வெறுப்பு வந்தாலும் சகித்துக் கொள்கிறேன், சில சமயம் சண்டை பிடிக்கவும் செய்கிறேன்.

இந்த வெறுப்பு, சண்டை , கோபம் எப்படி வந்தது ?

உள்ளுக்குள் எனக்கு ஒரு மதத்தின் கோட்பாடுகள் பிடித்தது...வெளியில் அந்த கோட்பாடுக்கு ஒத்து வராதவர்கள் மேல் கோபம் வருகிறது.

உள்ளே நிகழ்ந்த பிரிவு, வெளியே  படுகிறது.

அதே போல, வெளியே ஒரு நாட்டுக்கு எல்லை என்று கோடு  வரைகிறோம்.

இதுவரை என் நாடு, அது உன் நாடு என்று சொல்லி  விடுகிறோம். இந்த வெளிப் பிரிவு  என்ன செய்கிறது என்று பாருங்கள்.  அந்த  நாட்டுக் காரன் மேல் பகை கொள்ள வைக்கிறது. அவன் மேல் வெடி குண்டைத் தூக்கி போட வைக்கிறது. அவன் நமக்கு எதிரான ஒரு விளையாட்டில் தோற்றால் மனம் கொக்கரிக்கிறது.

ஏன், வெளியே நிகழ்ந்த பிரிவு மனதுக்குள் சென்று ஆட்டி வைக்கிறது.

இப்படி உள்ளும் புறமும் பிரித்து பிரித்து வைத்து நாம் யார் என்பதையே மறந்து இந்த பிரிவுகளினால் உந்தப் பட்டு ஒரு இயந்திரம் போல செயல் படுகிறோம்.

ஆண் பெண் பிரிவு
ஜாதி, மதம், நாடு, மொழி, இனம், செல்வம் , ஏழ்மை , படித்தவன், படிக்காதவன், என்று ஆயிரம் பிரிவுகளை செய்து வைத்து இருக்கிறோம்.

ஒவ்வொரு பிரிவும் நம்மையும் பிரித்துப்  போடுகிறது.

சிதைந்து போய் நிற்கிறோம்.

நம்மை நம்மால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.

என் மதம், என் நாடு, என் மொழி என்னை பிரித்துப் போடுகிறது. இந்த பிரிவுகள் இல்லாத நான் யார் ?

இப்படி சிதைந்து கிடக்கும் நம்மை ஒன்று சேர்க்க முயல்கிறது கீதை.

இந்த பிரிவுகள் வெவ்வேறு தளங்களில் நிகழ்கிறது.

- மனதில்
- புத்தியில்
- உடலில்

என்ற மூன்று தளங்களில் நிகழ்கிறது.

பகை நட்பு - மனதில் நிகழும் பிரிவு. அவன் எனக்கு பகை ஏன் என்றால் நான் நம்புவதை அவன் நம்புவதில்லை, என்னை விட உயர்ந்தவனாக இருக்கிறான், எனக்கு வர வேண்டியதை அவன் எடுத்துக் கொள்கிறான் என்று மனதில் நாம்  நினைப்பதால்  பகை வருகிறது.

மானம், அவமானம் - புத்தியில் நிகழ்வது. வெற்றி  தோல்வி, மானம் அவமானம் எல்லாம் புத்தியில் நிகழ்வது.

சூடு, குளிர்ச்சி - உடலில் நிகழும் பிரிவு.

இவற்றை ஒன்றாகப் பாருங்கள் என்றால் உடனே சுடு தண்ணியை எடுத்து கோடை காலத்தில் மேலே ஊற்றிக் கொள்வது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.  இந்த பிரிவுகள் ஏன் வருகின்றன, இவற்றால் நமக்குள் என்ன மாற்றங்கள்   நிகழ்கிறது என்று சிந்திக்க வேண்டும்.

பொதுவாக பிரிவுகள் இயற்கையில் இல்லை. நாமே கற்பனை செய்வது கொள்வது தான். நமக்கு சௌகரியமாக இருக்க செய்த பிரிவுகள், பின்னாளில் நமக்கு துன்பம் தரத் தொடங்குகின்றன.

இவற்றை அறிந்து கொண்டால்,  மனமும்,  அறிவும், உடலும் ஒன்று படும்.

We will become an  integrated human being.

சிந்திப்போம் .....

 




Sunday, May 24, 2015

கீதை - 12.17 - அனுபவங்களின் உச்சம், தன்னை தான் அறிவது

கீதை - 12.17 - அனுபவங்களின் உச்சம், தன்னை தான் அறிவது  


यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभपरित्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥१२- १७॥

யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||

யோ = எவன்

ந ஹ்ருஷ்யதி = மகிழ்வது (களிப்புடன் கூடிய மகிழ்வு) இல்லையோ

 ந த்வேஷ்டி = வெறுப்பு கொள்வது இல்லையோ

 ந ஸோசதி =  வருந்துவது இல்லையோ

 ந காங்க்ஷதி  = ஆசை கொள்வது இல்லையோ

ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ = சுப + அசுப + பரித்யாகி = நல்லதையும் கெட்டதையும் துறந்து

 பக்திமாந் = பக்தி கொண்டவன்

ய: ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய:  = பிரியமானவன்

ஆனந்த களிப்பும், பகையும் இன்றி,
துயரமும்  ஆசையும் இன்றி  
நன்மையும் , தீமையும் துறந்த பக்தனே எனக்கு இனியவன் 

இதைப் படிக்கும் போது ஏதோ உப்பு சப்பு அற்ற வாழ்கையை கீதை உபதேசிக்கிறதோ என்று  நமக்குத் தோன்றும். மகிழ்ச்சியும் இல்லை, துன்பமும் இல்லை,  பகையும் இல்லை, ஆசையும் இல்லை, நன்மையையும் தீமையும் இல்லை  என்றால் பின் என்னதான் இருக்கிறது வாழ்வில் என்று கேட்கத் தோன்றும்.

அப்படி ஒரு வாழ்வு தேவையா ? அதில் என்ன சுகம் இருக்க முடியும் ?

சற்று சிந்திப்போம்.

இன்பம், துன்பம், நன்மை , தீமை, என்ற இவை எல்லாம் ஆசை என்ற புள்ளியை  சுத்தி சுத்தி வருகின்றன.

ஆசை நிறைவேறினால் இன்பம், நன்மை .
ஆசை நிறைவேறாவிட்டால் துன்பம், தீமை.
ஆசைக்கு தடையாணவற்றின் மேல் வெறுப்பு, கோபம், பகை.
ஆசைக்கு துணையானவற்றின் மேல் நட்பு, அன்பு.

இப்படி எல்லாம் ஆசையைச் சுற்றியே வருகின்றன.

ஆசையை வெல்வது எப்படி ?

ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை வென்றால் துன்பத்தை வெல்லலாம் என்று  சொல்வது எளிது. செய்வது எப்படி ?

ஆசை எதன் மேல் வருகிறது ? இல்லாத ஒன்றின் மேல் ஆசை வருகிறது. அது வேண்டும் என்று  ஆசை வருகிறது.

ஆசை பொருளின் மேல் இல்லை, பொருள் தரும் சுகத்தில் , அனுபவத்தில் ஆசை.

ஆசை பெண்ணின் மேல் இல்லை, அவள் தரும் இன்பத்தில், அந்த அனுபவத்திற்கு ஆசை.

எனவே எல்லா ஆசையும் ஒரு புதிய அனுபவத்திற்குத் தான்.

கார் வேண்டும், வீடு வேண்டும், டிவி வேண்டும், நிலம் வேண்டும், நகை வேண்டும் என்று பலப் பல ஆசைகள். என்று இவை எல்லாம் நிறைவேறி நாம்  ஆசையை கடந்து செல்வது ?

சின்ன மொபெட் வேண்டும் என்று ஆசைப் படுபவனிடம் ஒரு பெரிய Benz காரைத் தந்தால் மொபெட் மேல் உள்ள ஆசை போய்விடும். பெரிய காரே கிடைக்கும்  என்றால் மொபெட்டுக்கு ஏன் ஆசைப் படவேண்டும் ?

அனுபவங்களின் உச்சம் தன்னைத் தான் அறிவது - ஆத்மா , இறை அனுபவம் என்று அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

தன்னைத்தான் அறியும் போது , மற்றைய அனுபவங்கள் தானே மறைந்து போகின்றன.

கார் கிடைத்தவுடன் மொபெட் ஆசை மறைந்து போவது போல.

தன்னைத் தான் அறியும்போது இன்பம், துன்பம், நன்மை , தீமை, கோபம், வெறுப்பு என்பவை  மறையும்.

எப்படி ?

இன்பம் , துன்பம் என்பவை "நான்" என்ற ஒன்றோடு தொடர்பு கொண்டது.

எனக்கு பிடித்தது நடந்தால் இன்பம்,
எனக்கு பிடித்தது நடக்காவிட்டால் துன்பம்,
எனக்கு வேண்டியது நடந்தால் நல்லது, இல்லை என்றால் கெட்டது ....

இந்த "நான்" , "எனக்கு" என்பது என்ன ? இதை அறிவதுதான் தன்னைத் தான் அறிவது.

லட்டு தின்பது இன்பம் என்று நினைக்கிறேன். அதன் மேல் ஆசை படுகிறேன்.

என் உடம்புக்கு லட்டு நல்லது இல்லை என்று அறிந்து கொள்கிறேன். இப்போது லட்டு  உண்ணாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

தன்னைத் தான் அறிவது இன்ப துன்பங்களை கடந்து செல்லும் அனுபவத்தை தரும்.

உங்களுக்கு ஏன் சிலவற்றின் மேல் ஆசை வருகிறது ? உங்களுக்கு ஏன் சிலவற்றின் மேல் வெறுப்பு வருகிறது ? சிலரை பிடிக்கிறது ? சிலரை பிடிக்கவில்லை ? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது ? எதன் மேல் கோபம் வருகிறது ?

உங்களை அறியுங்கள் . இவை எல்லாம் புரிபடும். இவை எல்லாம் புரிபட்டால் அது நிரந்தர இன்பத்தைத் தரும்.




Tuesday, May 19, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 3

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 3


अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்


எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை. 

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....


நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.


மேலும் சிந்திப்போம்.

=============================== பாகம் 2 ===========================================

ஸுசிர் = தூய்மையுடன்

தூய்மை என்பதை அகத்திற்கும் புறத்திற்கும் சேர்த்துப் பார்க்கலாம். 

புறத் தூய்மை எளிதாக விளங்கும். தன் உடலையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீடு எப்படி இருக்கிறது ? நம் மேஜை, நம் சமையல் அறை , படுக்கை அறை , நம் உடை  என்று ஒவ்வொன்றிலும் தூய்மையை  கடைப் பிடிப்பது பக்தி. 

கோவிலில் குப்பை போடுகிறோம். வேலை செய்யும் மேசையைப் பார்த்தால் புத்தகங்களும்,  காகிதங்களும், wire களும் அடைந்து கிடக்கிறது. 

நம் வீடு, அலுவலகம், நம் தெரு , நம் ஊர் என்று எதிலும் தூய்மை கிடையாது. குப்பை குளங்களுக்கு நடுவில்  வாழ்கிறோம். இது அல்ல பக்தி. 

நம் வீட்டு குப்பையை தெருவில் கொண்டு கொட்டிவிட்டு வீடு தூய்மையாகி விட்டது என்று  நினைக்கிறோம்.  தெரு அசுத்தமாகி விட்டது தெரிவதில்லை. 

தூய்மை பக்தியின் அடிப்படை. 

இன்று முதல் நம்மையும், நம் சுற்றுப் புற சூழலையும் தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். அதுதான் பக்தி. 

மனம் சுத்தமாக இருப்பது அகத் தூய்மை. 

உலகில் உள்ள அனைத்து அற நூல்களையும் தொகுத்து நாலே வார்த்தையில் சொன்னார் திருவள்ளுவர். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

எல்லா அறத்திற்கும் அடிப்படை மனதில் மாசு இல்லாமல் இருப்பது. குற்றம் இல்லாமல் இருப்பது. 

மாற்றிச் சொல்லவதானால், அனைத்து பாவங்களுக்கும் காரணம் குற்றமுள்ள மனம். 

மனம் தூய்மையாக இருந்தால் குற்றம் எப்படி  வரும் ?

உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தால் அதுவே பக்தி. 

வீட்டையும், மனதையும் சுத்தப் படுத்திப் பாருங்கள்....சுகம் தெரியும். 

பக்தியின் மணம் கமழும். 

மேலும் சிந்திப்போம் 

======================= பாகம் 3 ==================================================

தக்ஷ = திறமையுடன்

தக்ஷ என்பதற்கு திறமை, உறுதியுடன் (fitness ), புத்திசாலித்தனம் என்று பல அர்த்தங்கள் சொல்லலாம். எல்லாவற்றையும் விட சிறந்த அர்த்தம் ஆர்வத்துடன் கூடிய சுறு சுறுப்பு. Alert என்று சொல்லுவதைப் போல. எந்த நேரத்திலும் தயாராக,  அறிவு கூர்மையுடன், உடலில் ஒரு சுறு சுறுப்புடன் இருத்தல். 

பக்தன் என்றால் ஏதோ சோம்பேறித்தனமாக, பஜனை பாடிக் கொண்டு, பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டு இந்த சமுதாயத்திற்கு ஒரு பாரமாய் இருப்பவன் அல்ல.


பக்தன் என்பவன் புத்திசாலியாக இருக்க வேண்டும். சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும்.

 நான் மூன்று வேளை கோவிலுக்குப் போகிறேன், இரண்டு தரம் குளிக்கிறேன், நாள் கிழமைகளில்  விரதம் இருக்கிறேன் என்றால் அது அல்ல பக்தி.

திறமை, வலிமை, தூய்மை...என்று பக்தனின் இலக்கணத்தை கண்ணன் பட்டியல் இடுகிறான்.

அது இன்னும் வரும் ....


Monday, May 18, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2


अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்


எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை. 

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....


நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.


மேலும் சிந்திப்போம்.

=============================== பாகம் 2 ===========================================

ஸுசிர் = தூய்மையுடன்

தூய்மை என்பதை அகத்திற்கும் புறத்திற்கும் சேர்த்துப் பார்க்கலாம். 

புறத் தூய்மை எளிதாக விளங்கும். தன் உடலையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீடு எப்படி இருக்கிறது ? நம் மேஜை, நம் சமையல் அறை , படுக்கை அறை , நம் உடை  என்று ஒவ்வொன்றிலும் தூய்மையை  கடைப் பிடிப்பது பக்தி. 

கோவிலில் குப்பை போடுகிறோம். வேலை செய்யும் மேசையைப் பார்த்தால் புத்தகங்களும்,  காகிதங்களும், wire களும் அடைந்து கிடக்கிறது. 

நம் வீடு, அலுவலகம், நம் தெரு , நம் ஊர் என்று எதிலும் தூய்மை கிடையாது. குப்பை குளங்களுக்கு நடுவில்  வாழ்கிறோம். இது அல்ல பக்தி. 

நம் வீட்டு குப்பையை தெருவில் கொண்டு கொட்டிவிட்டு வீடு தூய்மையாகி விட்டது என்று  நினைக்கிறோம்.  தெரு அசுத்தமாகி விட்டது தெரிவதில்லை. 

தூய்மை பக்தியின் அடிப்படை. 

இன்று முதல் நம்மையும், நம் சுற்றுப் புற சூழலையும் தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். அதுதான் பக்தி. 

மனம் சுத்தமாக இருப்பது அகத் தூய்மை. 

உலகில் உள்ள அனைத்து அற நூல்களையும் தொகுத்து நாலே வார்த்தையில் சொன்னார் திருவள்ளுவர். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

எல்லா அறத்திற்கும் அடிப்படை மனதில் மாசு இல்லாமல் இருப்பது. குற்றம் இல்லாமல் இருப்பது. 

மாற்றிச் சொல்லவதானால், அனைத்து பாவங்களுக்கும் காரணம் குற்றமுள்ள மனம். 

மனம் தூய்மையாக இருந்தால் குற்றம் எப்படி  வரும் ?

உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தால் அதுவே பக்தி. 

வீட்டையும், மனதையும் சுத்தப் படுத்திப் பாருங்கள்....சுகம் தெரியும். 

பக்தியின் மணம் கமழும். 

மேலும் சிந்திப்போம்