Gita 9.1
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
श्रीभगवानुवाच
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥९- १॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||
ஸ்ரீப⁴க³வாநுவாச = பகவான் கூறுகிறான்
இத³ம் = இந்த
து = ஆனால்
தே = உனக்கு
கு³ஹ்யதமம் = அதி இரகசியமான
ப்ரவக்ஷ் = நான் சொல்கிறேன்
அநஸூயவே = அசூயை இல்லாமல்
ஜ்ஞாநம் = ஞானம்
விஜ்ஞாந = விஞ்ஞான
ஸஹிதம் = கூடவே
யத் = எது
ஜ்ஜ்ஞாத்வா = அறிவதன் மூலம்
மோக்ஷ்யஸே = மோக்ஷத்தை அடைவாய்
அஸு²பா⁴த் = துன்பத்தில் இருந்து
நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த பக்தி யோகம் ஆரம்பிக்கிறது.
கிருஷ்ணன் - மிக இரகசியமான ஒன்றை உனக்குச் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.
இரகசியம் என்றால் உடனே நமக்கு ஒரு ஆர்வம் வரும். அது என்ன என்று அறிந்து கொள்ள ஆர்வம் வரும். அதுவும் நமக்கு மட்டும் தான் என்றால் ஆர்வம் மேலும் அதிகரிக்கும்.
ஒரு நல்ல presentation எப்படி இருக்க வேண்டும் என்று வியாசரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
முதலில் என்ன சொல்லப் போகிறோம் என்று சொல்லி விட வேண்டும்.
அடுத்து - சொல்ல வந்ததை சொல்ல வேண்டும்.
கடைசியில் - என்ன சொன்னோம் என்று தொகுத்துச் சொல்ல வேண்டும்.
மேலும், இதை அறிவதால் நமக்கு என்ன பயன் (vlaue ) என்று சொல்லி விட வேண்டும்.
"இதை அறிவதால் துன்பத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடையலாம் "
அசூயை இல்லாமல் கேள் என்கிறார்.
"ஆமா, இது மாதிரி எத்தனை கேட்டிருப்போம் " என்று அலுத்துக் கொள்ளாமல், அதில் சந்தேகம் கொள்ளாமல் கேள் என்கிறார்.
இது ஞானம், விஞ்ஞானம் இரண்டும் கலந்தது.
இதை அறிவதனால் என பயன் ?
துன்பங்களை கடந்து மோக்ஷம் அடையலாம்.
No comments:
Post a Comment