கீதை - 9.7 - வாழ்வின் நோக்கம் முன்னேற்றம்
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥९- ७॥
ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||
ஸர்வபூ⁴தாநி = அனைத்து உயிர்களும்
கௌந்தேய = குந்தி புத்திரனே
ப்ரக்ருதிம் = இயற்கையில்
யாந்தி = பிறக்கின்றன
மாமிகாம் = என்
கல்பக்ஷயே = கல்ப காலத்தின் முடிவில்
புந = மீண்டும்
தாநி = அவை எல்லாம்
கல்பாதௌ³= கல்ப காலத்தின் தொடகத்தில்
விஸ்ருஜாம் = படைக்கிறேன்
அஹம் = நான்
குந்தி மகனே, கல்ப காலத்தின் தொடக்கத்தில் நான் எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றுகின்றன. அந்த காலத்தின் முடிவில் அவை என் நிலையை அடைகின்றன.
ப்ரக்ரிதிம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள். - ,இயற்கை, சக்தி, இயல்பு, பழக்கம்.
உயிர்கள் இயற்கையில் பிறக்கின்றன.
உரை எழுதிய பல பெரியவர்கள் கல்ப காலத்தின் தொடகத்தில் நான் உயிர்களைப் படைக்கிறேன், இறுதியில் அவை என்னை வந்து அடைகின்றன என்று பொருள் சொல்லி இருக்கிறார்கள்.
சற்று வேறு கோணத்தில் பார்த்தால்,
காலத்தின் தொடகத்தில் உயிர்கள் இயற்கையில் தோன்றுகின்றன. காலத்தின் முடிவில் அவன் என் நிலையை அடைகின்றன
என்றும் பொருள் சொல்லலாம்.
"என் நிலை"யை அடைகின்றன என்றால் என்ன ? என்னை அடைகின்றன என்று சொல்லவில்லை. என் நிலை என்றால் என்ன ? எது கிருஷ்ணனின் நிலை ? தன்னைத் தான் அறிந்த ஒரு யோகியின் நிலை.
உயிர்களின் நோக்கம் அந்த இறை நிலையை அடைவது.
அதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஒரு கல்ப காலம் என்பது ஒரு குறியீடு.
பிறப்பது இயற்கை. பிறந்த பின் அவை தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். முன்னேறி முன்னேறி ஒரு இறை நிலையை அடைய வேண்டும்.
வாழ்வின் நோக்கம் முன்னேறிச் செல்வது.
நீங்கள் முன்னேருகிரீர்களா ? நேற்றையை விட இன்று நீங்கள் சிறந்தவர்களா ?
இன்றைய தினம் உங்களை நாளை ஒரு சிறந்த மனிதனாகச் செய்யுமா ?
நீங்கள் என்ன செய்து கொண்டு இருகிறீர்கள் ?
முன்னேற்றப் பாதையில் இருக்கிறீர்களா ?
வாழ்கை என்ற உந்து சக்தி நமக்கு நாளும் பாடம் நடத்துகிறது. அது மட்டும் அல்ல, தேர்வும் வைக்கிறது. தேர்வில் மதிப்பெண்ணும் தருகிறது.
தேர்வில் தேறாவிட்டால் என்ன ஆகும் ?
அதை அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறான் கண்ணன்.
some old people use to say sahalam Krisha narpanam ......Nr
ReplyDeletethe heading says goal and progress But i do not see any thing connected here....Nr
ReplyDelete