கீதை - 10.19 - முடிவில்லாத பெருமை
श्रीभगवानुवाच
हन्त ते कथयिष्यामि दिव्या ह्यात्मविभूतयः ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥१०- १९॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ஹந்த = இப்போது
தே = உனக்கு
கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்
தி³வ்யா = பூரணமான
ஹ்யாத்மவிபூ⁴தய: | = ஹத் + ஆத்ம + விபூதாய = என் பெருமைகளை
ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவைகளை
குருஸ்²ரேஷ்ட = குருகுலத்தில் சிறந்தவனே
நாஸ்த்யந்தோ = நாஸ்தி + அந்தோ = அந்தம் இல்லாத
விஸ்தரஸ்ய மே = மிக விரிவான
குருகுலத்தில் சிறந்தவனே, என் அளவற்ற பெருமைகளில் பிரதானமானவற்றை உனக்குச் சொல்லுகிறேன்.
அளவற்ற ஒன்றை அளவான ஒன்றால் எப்படி அளப்பது ? இயற்கை, இறைவன், அதன் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். மனிதனின் அறிவுக்குள் அடங்காதது அது.
அறிவுக்கு, மனித ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. வரம்பற்ற ஒன்றை எப்படி மனித மனம் அறிய முடியும் ?
கண்ணன் ஆரம்பிக்கும் போதே அதை சொல்லி வைக்கிறான்.
கண்ணன் என்ன சொல்கிறான் என்று மேலும் பார்ப்போம்.
II need to realise this
ReplyDeleteOur knowledge level is very limited
அறிவுக்கு, மனித ஆற்றலுக்கு ஒரு வரம்பு உண்டு. வரம்பற்ற ஒன்றை எப்படி மனித மனம் அறிய முடியும் ?