கீதை - 10.31 - ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை)
पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् ।
झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी ॥१०- ३१॥
பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||
பவந: பவதாமஸ்மி = தூய்மை செய்பவற்றில் நான் காற்று
ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் = ஆயுதம் தான்கியவர்களில் நான் இராமன்
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி = மீன்களில் நான் சுறா
ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ = ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை )
இங்கே கங்கை என்பதற்கு பதில் ஜாஹ்ணவி என்ற பெயரை வியாசர் பயன்படுத்துகிறார்.
ஏன் ?
முன்பொரு காலம் ஜ்ஹாணவி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் கங்கை ஆற்றை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து விட்டார். பின் , எல்லோரும் கேட்டு கொண்டதற்கு இணங்க கங்கை ஆற்றை அவருடைய காதின் மூலம் வெளியில் விட்டார்.
இது என்ன ஆற்றை குடிப்பதாவது, பின் காதின் வழியே விடுவதாவது...அர்த்தமற்ற கதையாக இருக்கிறதே என்று நினைக்கலாம்.
இதன் அர்த்தம்.....
ஒரு விஷயத்தை நன்றாக படித்து முடித்தவர்களை "...அதை கரைத்து குடித்து விட்டான் " என்று சொல்லுவது வழக்கம். கங்கை என்பது அறிவின் குறியீடு. அந்த அறிவை ஒரு சொட்டு இல்லாமல் குடித்து முடித்தார் என்று அர்த்தம்.
பின் காதின் வழியாக விட்டார் என்றால் அந்த அறிவை மற்றவர்களுக்குச் சொல்லித் தந்தார் என்று அர்த்தம்.
அவர் சொல்ல மற்றவர்கள் கேட்டார்கள். அவர்களின் காதின் வழியே அந்த அறிவு பரிமாறப் பட்டது.
அப்படி அறிவின் மூலமாக கருத்தப்பட்ட கங்கை போல நான் இருக்கிறேன் என்கிறான் கண்ணண்.
No comments:
Post a Comment