கீதை - 10.23 - செல்வமும் அழிவும் நான்
रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥१०- २३॥
ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||
ருத்ராணாம் ஸங்கர = ருத்ரர்களில் சங்கரனாக
சா அஸ்மி = நான் இருக்கிறேன்
வித்தேஸோ = குபேரனாக இருக்கிறேன்
யக்ஷரக்ஷஸாம் = யக்ஷ இராட்சசர்களில்
வஸூநாம் = வசுக்களில்
பாவகஸ்²சாஸ்மி = நான் அக்கினியாக இருக்கிறேன்
மேரு: ஸி²க²ரிணாமஹம் = மலைகளில் நான் மேருவாக இருக்கிறேன்
ருத்திரர்களில் நான் சங்கரனாகவும்; அரக்கர்களில் நான் குபேரனாகவும், வசுக்களில் நான் அக்நியாகவும், மலைகளில் மேருவாகவும் இருக்கிறேன்.
சங்கரன் - அழிவின் கடவுள்.
இறப்பு, அழிவு என்றாலே ஏதோ துக்ககரமான ஒன்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
அழியாமல் பிறக்காது. ஒவ்வொன்றுக்கும் ஒரு கால நிர்ணயம இருக்கிறது. பிறப்பதும் இறப்பதும் இயற்கை.
ஆவதும் அழிவதும் இயற்கை.
இதில் துக்கப்பட என்ன இருக்கிறது ?
அது மட்டும் அல்ல...
இறப்பு, அழிவு என்பது உடலுக்கும், பொருளுக்கும் மட்டும் அல்ல...நாம் கொண்டிருக்கும் கொள்கைகளுக்கு, நாம் அறிந்த பழைய கோட்பாடுகளுக்கு, நம்பிக்கைகளுக்கும் சேர்த்துதான்.
சில பேர் பிறந்தது முதல் கடைசி வரை சில விஷயங்களை நம்பிக்கொண்டே இருப்பார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு எதிராக எத்தனை புதிய கருத்துகள், கோட்பாடுகள் வந்தாலும் நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று பழமைகளிலேயே தொங்கிக் கொண்டு இருப்பார்கள். புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள் மனதில் உதிக்க வேண்டும் என்றால் பழையனவற்றை விட்டு விடும் தைரியம் வேண்டும். பழையனவற்றை காலி செய்தால்தான் புதியன நுழைய முடியும்
ருத்திரர்களில் நான் சங்கரன் !
பழையனவற்றை அழிப்பதில் நான் சங்கரனாக இருக்கிறேன்.
யக்ஷ ராட்சதர்களில் நான் குபேரன்.
குபேரன் செல்வத்தின் அதிபதி. உலகில் உள்ள அனைத்து செல்வத்திற்கும் அதிபதியான குபேரன் எப்படி இருக்க வேண்டும் ? மிக அழகாக, வசீகரமாக இருக்க வேண்டும் அல்லவா ? அது தான் இல்லை...மிக மிக அருவருக்கத் தக்க விதத்தில் குள்ளமாய், கருப்பாய், குண்டாய் , கோரை பற்கள் நீண்டு இருக்கும் ஒரு உருவத்தை தந்து இருக்கிறார்கள் நம் முன்னவர்கள். செல்வம் செல்வம் என்று அலைபவன் குரூரமாக இருப்பான் என்று சொல்லாமல் சொன்னார்கள்.
உலகிலேயே மிக அழகானவன் யார் - மன்மதன். அன்பு நிறைந்த இடத்தில் அழகு நிறைந்து இருக்கும்.
ஒரு பக்கம் அழிவு, ஒரு பக்கம் செல்வம். இரண்டிலும் உச்சபட்சம் நான் என்கிறான் கண்ணன்.
First time I'm seeing Kuber is not all that good looking.
ReplyDeletesome extra words added here by the author which is not necessary
http://ts2.mm.bing.net/th?&id=HN.608043163137409882&w=300&h=300&c=0&pid=1.9&rs=0&p=0