Thursday, June 26, 2014

கீதை - 10.30 - பறவைகளில் நான் கருடன்

கீதை - 10.30 -  பறவைகளில் நான் கருடன் 


प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।
मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ॥१०- ३०॥

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன்

கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்

அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான்  கருடனாக இருக்கிறேன்

அசுரர்களில் பிரகலாதனாகவும் , இயங்குபவற்றில் காலமாகவும், மிருகங்களில் சிங்கமாகவும், பறவைகளில் கருடனாகவும் இருக்கிறேன்.

கண்ணன் தொடர்கிறான்.

பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.

பறவைகள்,  தான் செல்லும் வழியில் தங்கள் காலடித் தடத்தை  விட்டுச் செல்வது இல்லை

அவை போன பாதையை நாம் பின் பற்ற  முடியாது.

அவை வந்த பாதை கண்ணுக்குத்  தெரியாது.

 அங்கிருந்தது.இப்போது இங்கு  இருக்கிறது. எந்த வழியாக வந்தது என்பதற்கு பாதை இல்லை.

உண்மையும் அப்படித்தான்.  

அதை கண்டு அடைய  வழி இல்லை. யாரும் சொல்லித்தந்து அறிந்து விட முடியாது.

நாமே முயன்று அறிய  வேண்டும்.

கண்ணன் சொல்கிறான் நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன் என்று.

கண்ணன் சென்ற பாதையில் நாம் செல்ல முடியாது என்பது அர்த்தம்.

உங்கள் உண்மையை  நீங்கள் தான் தேடிக் கண்டடைய வேண்டும்.

புத்தகங்கள்,  மந்திரங்கள்,தந்திரங்கள், என்ற வழி முறையும்  உதாவது.

அவை உதவும் என்றால் எல்லோரும் அவற்றின் உதவியோடு இந்நேரம் கண்டு  பிடித்து இருப்பார்கள்.

உண்மையை கண்டறிய பாதை இல்லை.

பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்.


1 comment:

  1. To me it is not convincing

    பறவைகளுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.

    பறவைகள், தான் செல்லும் வழியில் தங்கள் காலடித் தடத்தை விட்டுச் செல்வது இல்லை

    அவை போன பாதையை நாம் பின் பற்ற முடியாது.

    அவை வந்த பாதை கண்ணுக்குத் தெரியாது.

    அங்கிருந்தது.இப்போது இங்கு இருக்கிறது. எந்த வழியாக வந்தது என்பதற்கு பாதை இல்லை.

    what happens to fishes and others who live and thrive in water

    ReplyDelete