கீதை - 10.18 - அமிர்தம் போன்ற சொற்கள்
विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन ।
भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मेऽमृतम् ॥१०- १८॥
விஸ்தரேணாத்மநோ யோக³ம் விபூ⁴திம் ச ஜநார்த³ந |
பூ⁴ய: கத²ய த்ருப்திர்ஹி ஸ்²ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் || 10- 18||
விஸ்தரேணாத்மநோ = விஸ்தரே +ஆ த்மநோ = விஸ்தாரமாக, விரிவாக ஆத்ம
யோக³ம் = யோகத்தை
விபூ⁴திம் = பெருமைகளை
ச = மேலும்
ஜநார்த³ந = ஜனார்த்தனா
பூ⁴ய: = மீண்டும்
கத²ய = கதையை
த்ருப்தி = திருப்தி
ஹி = மேலும்
ஸ்²ருண்வதோ = சொற்களை
நாஸ்தி = இல்லை
மே = எனக்கு
அம்ருதம் = அமிர்தம் போன்ற || 10- 18||
ஜனார்த்தனா, உன் யோகத்தையும் பெருமையையும் விரிவாக மீண்டும் ஒருமுறை சொல். அமிர்தம் போன்ற உன் சொற்கள் எனக்கு தெவிட்டுவதே இல்லை
வேதங்கள், உபநிஷத்துகள், கீதை போன்ற உயர்ந்த தத்துவங்களை கூறும் நூல்களை படித்தாலோ அல்லது மற்றவர்கள் சொல்லக் கேட்டாலோ கொஞ்ச நேரத்தில் சலிப்பு ஏற்படுவது உண்டு. இவை எல்லாம் நடை முறை சாத்தியங்கள் இல்லாதவை என்று ஒதுக்கி தள்ளி விட்டு வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்.
இங்கே, அர்ஜுனன் சொல்கிறான், "அமிர்தம் போன்ற உன் சொற்கள் எனக்கு தெவிட்டுவதே இல்லை " என்று. அந்த ஆர்வம் இல்லை இல்லை என்றால் இவற்றை அறிந்து கொள்ள முடியாது.
"இன்னும் விரிவாகச் சொல்" என்கிறான்.
கண்ணனும் பொறுமையாக மீண்டும் சொல்ல ஆரம்பிக்கிறான்.
No comments:
Post a Comment