கீதை - 10.4 மேலும் 10.5 - இன்பமும் துன்பமும் நமக்குள்ளே
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥१०- ४॥
பு³த்³தி⁴ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: |
ஸுக²ம் து³:க²ம் ப⁴வோऽபா⁴வோ ப⁴யம் சாப⁴யமேவ ச || 10- 4||
புத்தி = புத்தி
ஜ்ஞாநம் = ஞானம்
அஸம்மோஹ = மயக்கம் இன்மை
க்ஷமா = பொறுமை
ஸத்யம் = சத்யம்
தம: = அடக்கம்
ஸம: | = அமைதி
ஸுகம் = சுகம்
துகம் = துக்கம்
பவ = உண்மை
அபோவ = இன்மை
பயம் = பயம்
ச = மேலும்
அபயம் = பயமின்மை
யமேவ ச = மேலும்
புத்தியும், ஞானமும், மயக்கம் இன்மையும் , பொறுமையும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், பயமும், பயமின்மையும்.
இந்த சுலோகம் தொடர்கிறது. இந்த பட்டியல் முடியவில்லை. அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறது.
இரண்டையும் சேர்த்து பார்த்து விடலாம்.
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥१०- ५॥
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா³நம் யஸோ²ऽயஸ²: |
ப⁴வந்தி பா⁴வா பூ⁴தாநாம் மத்த ஏவ ப்ருத²க்³விதா⁴: || 10- 5||
அஹிம்ஸா = துன்புறுத்தாமை
ஸமதா = நடு நிலைமை
துஷ்டி = மகிழ்ச்சி
தபோ = தவம்
தாநம் = தானம்
யஸ = புகழ்
அயஸ = இகழ்
ப⁴வந்தி = உண்டாகின்றன
பா⁴வா = மனப் பாங்குகள்
பூ⁴தாநாம் = உயிரினங்களுக்கு
மத்த = என்னிடம் இருந்து
ஏவ= உறுதியாக
ப்ருத²க்³விதா⁴ = வெவ்வேறான
துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள்.
பெரிய பட்டியல்.
இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியம் என்ன ?
எல்லாம் என்னில் இருந்து பிறக்கின்றன என்று சொல்லிவிட்டுப் போகலாமே ?
எல்லாம் என்னில் இருந்து தோன்றின என்றால், பொதுவாக நமக்கு என்ன தோன்றும் - இந்த உலகம், மனிதர்கள், மலையும் , மரமும், கல்லும், மண்ணும் என்னால் தோற்றுவிக்கப் பட்டன என்று தோன்றும்.
இங்கே அவற்றை அல்ல....
இங்கே சொல்லப்படுவது மனம் மற்றும் அறிவு சார்ந்த விசயங்கள் ...
பொறுமை, அடக்கம், அமைதி, புகழ், இகழ், அகிம்சை, நடு நிலைமை ....
இவை எல்லாம் நமக்குள் தோன்றுபவை. இவை வெளியில் இல்லை. பொறுமையும், அகிம்சையும், அமைதியும், நமக்குள் தோன்றும் இயல்புகள்.
இவை எல்லாம் என்னில் இருந்து தோன்றுகின்றன என்று சொல்லும்போது கண்ணன் "என்னில்" என்பதை எதைக் குறிக்கிறான் என்று நமக்கு விளங்கும்.
கண்ணன் என்னில், எனக்கு, என்னை, நான் என்று சொல்லுவது எல்லாம் கண்ணன் என்ற உருவத்தை அல்ல, கரிய, மயிற் பீலி அணிந்த ஒரு உருவத்தை அல்ல....
அவன் குறிப்பிடுவது அனைத்து உயிர்களிலும் இருக்கும் அந்த ஓர் உணர்வை.
அதுவே அனைத்து இயற்கைக்கும் காரணம் - புகழ், இகழ், ஹிம்சை, அகிம்சை, அமைதி, நடு நிலை எல்லாம் அதில் இருந்து வருவது.
இவை எல்லாம் வெளியில் இருந்து வருவது இல்லை.
மனிதன் இவற்றை வெளியில் தேடிக் கொண்டிருக்கிறான்.
அமைதியை, புகழை, சுகத்தை, பெருமையை மனிதன் வெளியில் தேடிக் கொண்டிருக்கிறான்.
செல்வத்தில், அதிகாரத்தில், சொத்தில், உறவுகளில், பொருள்களில் இவற்றை தேடி அலைகிறான்.
இவை நமக்குள் இருக்கின்றன என்று அறிய வேண்டும்.
நல்லவை மட்டும் அல்ல - இகழும், துன்பமும், ஹிம்சையும், பயமும் நமக்குள் இருந்தே தோன்றுகின்றன.
பொருள்களும், இந்த உயிர்களும் எப்படி வந்தன என்பது முக்கியம் அல்ல.
இன்பமும், துன்பமும் நமக்குள் இருந்து வருகின்றன என்பதை உணரவேண்டும்.
with lot of hesitation to say please amend the heading as 10.4 and 10.5 (கீதை - 10.5 மேலும் 10.5) - Tks
ReplyDelete