கீதை - 10.41 - பெருமை, அழகு, உண்மை, வலிமை
यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा ।
तत्तदेवावगच्छ त्वं मम तेजोंऽशसंभवम् ॥१०- ४१॥
யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||
யத்³யத்³விபூ⁴திமத் = எது எது பெருமை உடையதோ
ஸத்த்வம் = சாத்தியமானதோ
ஸ்ரீமத் = அழகு, கம்பீரம் உடையதோ
உர்ஜிதம் ஏவ வ = வலிமை உடையதோ
தத் தத் ஏவ = அவைகளின்
வக³ச்ச = அறிந்து கொள்
த்வம் = உன்
மம = என்
தேஜோம்ऽஸ = ஒளியின், பெருமையின், மகிமையின்
²ஸம்ப⁴வம் = சம்பவிக்கிறது
எவை எல்லாம் பெருமை, உண்மை, அழகு, வலிமை உடையதோ அவை எல்லாம் என் மகிமையின் அம்சத்தில் இருந்து பிறந்தது என்று நீ அறிந்து கொள்
இதுவரை 54 உதாரணங்கள் தந்தான் கண்ணன். கருடன், வியாசன், மேரு மலை, மௌனம் , அர்ஜுனன்,கந்தன், சுறா என்று ஏதேதோ தான் யார் என்பதற்கு உதாரணங்கள் தந்தான்.
அந்த பட்டியல் முடிவு இல்லாதது. சொல்லிக் கொண்டே போகலாம்.
அதை மொத்தமாக சொல்வது என்றால் எதெது பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ அவை என் அம்சத்தில் பிறந்தது என்று அறிந்து கொள் என்று முடிக்கிறான்.
இந்த அத்யாயத்தை படிப்பவர்கள் , என்ன இதில் ஒன்றுமே இல்லையே, ஏதோ நான் அது, நான் இது என்று கண்ணன் தன் பெருமையைக் சொல்லிக் கொண்டுப் போகிறான். இதில் எனக்கு என்ன பிரயோஜனம். கண்ணன்தான் அவதாரம் என்று தெரியுமே. அவன் வலிமையானவன் என்று தெரியும்.எதற்கு ஒரு முழு அத்யாயம் இதற்கு என்று ?
இந்த அத்யாம் மூலம் வியாசர் என்ன சொல்ல வருகிறார் ?
அடுத்த கடைசி ஸ்லோகத்தையும் பார்த்து விட்டு இந்த இந்த பட்டியலின் நோக்கம் என்ன்னவாக இருக்கும் என்று சிந்திப்போம்.
ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இந்த பட்டியலின் அடி நாதம் என்ன என்று சிந்திப்போம்.
No comments:
Post a Comment