கீதை - 10.36 - சூது, ஒளி , உண்மை, வெற்றி, நிச்சயம்
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥
த்³யூதம் ச²லயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் || 10- 36||
த்³யூதம் ச²லயதாமஸ்மி = வஞ்சகரில் சூது நான்
தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |= ஒளி உடையோரின் ஒளி நான்
ஜயோऽஸ்மி = வெற்றி நான்
வ்யவஸாயோऽஸ்மி = உறுதி நான்
ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் = உண்மை உடையோரின் உண்மையாக நான் இருக்கிறேன்
வஞ்சகரில் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். வெற்றி நான். உறுதி நான். உண்மை உள்ளவர்களில் உண்மை நான்.
சிறந்தவைகளை மட்டும் அல்ல, கீழான ஒன்றையும் தன் வடிவம் என்கிறான் கண்ணன்.
சிறந்தவைகளை மட்டும் சொல்லிக் கொண்டே போனால் , சமுதாயத்தில் கீழாக உள்ளவர்கள் இந்த கீதைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்று போய் விடுவார்கள். அவர்களையும் சேர்த்து கடைந்தேற்ற வேண்டும்.
வஞ்சகர்களில் சூது நான்.
எல்லாம் அவன் என்றானபின் சூது மட்டும் எப்படி அவன் இல்லாததாக இருக்க முடியும்.
நம்மிடையே வாழ்ந்த ஞானப் புலவன் பாரதி.
கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.
குப்பையும் மலமும் கடவுள் என்றான். உலகில் எந்த மதம் சொல்லும் இதை ? ஜீரணிக்க முடியாத உண்மை.
எல்லாம் கடவுள் தான் என்றால் குப்பையும், மலமும், சூதும் கடவுள்தான்.
ஒளி உடையோரின் ஒளி நான்.
விளக்கில் இருந்து ஒளி வருகிறது. ஆனால் ஒளிக்கும் விளக்குக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. விளக்கு பல வடிவங்களில் இருக்கும். எண்ணெய் , திரி , விளக்கு என்பவை பலவாக இருந்தாலும் ஒளி ஒன்றாகத்தான் இருக்கிறது.
உயிர்கள் பலவாக இருந்தாலும், அவற்றின் வெளிபாடு ஒன்றுதான்.
நல்லதும் கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்த்தும் எல்லாம் ஒன்றே.
இந்த ஸ்லோகங்கள் வாசித்து விட்டு போவதற்கு அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.
No comments:
Post a Comment