கீதை - அத்யாயம் 10 - ஒரு தொகுப்பு
யாரும் என் பெருமையை உணர மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மூலம் நானே.
நான் பிறப்பு இல்லாதவன். தொடக்கம் இல்லாதவன். இந்த உணர்ந்தவன் எல்லா மயக்கங்களும் நீங்கப் பெறுவான்.
- மதியையும்,
- ஞானத்தையும் ,
- மயக்கமின்மையும்,
- பொறுத்தலையும் ,
- வாய்மையும்,
- அடக்கத்தையும்
- அமைதியும்,
- இன்பத்தையும்
- துன்பத்தையும்
- உண்மையும்,
- இன்மையும்,
- அச்சத்தையும்
- அஞ்சாமையும்,
- துன்புறுத்தாமையும்,
- நடுமையும்,
- மகிழ்ச்சியையும்
- ஈகையும்,
- தவமும்,
- இகழும்,
- புகழும்,
மகரிஷிகள் ஏழு பேரும் நான்கு மனுக்களும் மனத்தால் என் இயல்பைப் பெற்றார்கள் . அவர்களுடைய மரபினரே இந்த மக்கள் எல்லாம்.
இதை அறிந்தவன் யோகத்தில் இருப்பான்.
நானே தொடக்கம், என்னிடம் இருந்தே எல்லாம் தோன்றின என்று உணர்ந்தவன் என்னை அன்புடன் தொழுவான். அவன் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவான். அவனுக்கு நான் புத்தி யோகம் அளிப்பேன். இதனால் அவன் என்னை அடைவான். அவர்களின் அஞ்ஞான இருளை நான் விலக்குவேன்
- உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான்.
- அவ்வுயிர்களின் முதலும், முடிவும், இடையும் நானே
- விஷ்ணு;
- ஞாயிறு;
- காற்றுகளில் மரீசி;
- நக்ஷத்திரங்களில் சந்திரன்.
- வேதங்களில் சாமவேதம்;
- தேவரில் இந்திரன்;
- புலன்களில் மனம் ;
- உயிர்களிடத்தே உணர்வு .
- ருத்திரர்களில் சங்கரன்;
- இயக்கர் அரக்கருள் குபேரன்.
- வசுக்களில் தீ;
- மலைகளில் மேரு.
- புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி
- படைத்தலைவரில் கந்தன்.
- நீர் நிலைகளில் கடல்.
- மகரிஷிகளில் பிருகு;
- வாக்குகளில் ‘ஓம்’
- யக்ஞங்களில் ஜபயக்ஞம்;
- ஸ்தாவரங்களில் இமாலயம்.
- மரங்களனைத்திலும் அரசமரம்.
- தேவரிஷிகளில் நாரதன்;
- கந்தர்வருள்ளே சித்ரரதன்;
- சித்தர்களில் கபில முனி.
- குதிரைகளிடையே உச்சை சிரவம் .
- யானைகளில் என்னை ஐராவதம் ,
- மனிதரில் அரசன்
- ஆயுதங்களில் வஜ்ரம்;
- பசுக்களில் காமதேனு;
- பிறப்பிப்போரில் மன்மதன்;
- பாம்புகளில் வாசுகி.
- நாகர்களினிடை அநந்தன்;
- நீர் வாழ்வோரில் வருணன்;
- பிதிர்க்களில் அரியமான்;
- தம்மைக் கட்டினவர்களில் யமன்.
- அசுரரில் பிரகலாதன் ;
- இயங்குனவற்றில் காலம் ;
- விலங்குகளில் சிங்கம்;
- பறவைகளில் கருடன்.
- தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று ;
- படைதரித்தோரில் ராமன்;
- மீன்களில் சுறா;
- ஆறுகளில் கங்கை.
- படைப்புகளின் ஆதியும் அந்தமும் .
- வித்தைகளில் அத்யாத்ம வித்தை;
- பேசுவோரிடையே பேச்சு.
- எழுத்துகளில் அகரம்;
- புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு;
- அழிவற்ற காலம்;
- அனைத்தையும் சுமப்போன் .
- எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் .
- எதிர்காலப் பொருள்களின் பிறப்பு .
- பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை
- சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்;
- சந்தஸ்களில் காயத்ரி;
- மாதங்களில் மார்கழி;
- பருவங்களில் இளவேனில்.
- வஞ்சகரின் சூது .
- ஒளியுடையோரின் ஒளி .
- நான் வெற்றி; நான் நிச்சயம்.
- உண்மையுடையோரின் உண்மை .
- விருஷ்ணி குலத்தாரில் வாசுதேவன்;
- பாண்டவர்களில் தனஞ்ஜயன்;
- முனிகளில் வியாசன்;
- கவிகளில் சுக்கிர கவி.
- ஆள்வோரிடத்தே கோல் ;
- வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி .
- ரகசியங்களில் நான் மௌனம்!
- ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
- எல்லா உயிர்களிலும் விதை .
- சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.
என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.
எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது
அன்றி, இதைப் பற்றி தெரிந்து கொள்வதால் உனக்குப் பயன் யாது? எனது மகிமையின் ஒரு பகுதியால் இந்த உலகை நிலை நிறுத்தியுள்ளேன்.
இப்படி ஒரு நீண்ட பட்டியலையும் கொடுத்து பின் இதைஎல்லாம் அறிந்து உனக்கு என்ன ஆகப் போகிறது என்று கேள்வியும் கேட்கிறான் கண்ணன்.
இந்த பட்டியலின் மூலம் கண்ணன் என்ன சொல்ல வருகிறான் ?
இந்த பட்டியலின் அடி நாதமாக விளங்குவது என்ன ?
ஒவ்வொன்றிலும் எது சிறந்ததோ,உயர்ந்ததோ அது நான் என்கிறான்.
இன்னும் சொல்லப் போனால், அதை மிகத் தெளிவாக கடைசியில் சொல்கிறான்
"எவை எவை பெருமை, உண்மை, அழகு, வலிமை உள்ளதோ -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது"
இதில் இருந்து நாம் பல விஷயங்களை புரிந்து கொள்ளலாம்:
1. ஒவ்வொரு உயிருக்குளும் அது சிறந்ததாக மாறும் சக்தி இருக்கிறது. அந்த சக்தி தான் இறை சக்தி. நம்மை உயர்த்தும் சக்தி.
2. அந்த சக்திதான் potential சக்தி. அந்த சக்தியை வெளிக் கொணர்வதன் மூலம் நாம் இறைத் தன்மையை அடைகிறோம்.
3. எது நமது அடிப்படை சக்தியோ,அதை முழுமையாக அடையும்வரை நாம் மனிதனும் அல்லாமல் இறைவனும் அல்லாமல் அல்லாடிக் கொண்டு இருப்போம்.
4. ஒவ்வொரு உயிரும் இறைத் தன்மையை அடைய முடியும் என்பதால் அனைத்து உயிரும் சமம் தான். உயர்ந்தது தாழ்ந்தது என்று ஒன்றும் இல்லை.
5. நாம் நம் துறை எதுவாக இருந்தாலும், அதில் சிறந்தவர்களாக ஆகும் போது நாம் இறைத் தன்மையை அடைகிறோம்.
மீண்டும் ஒரு முறை படித்துப் பார்ப்போம்.
-
Very good presentation / narration
ReplyDelete