Tuesday, August 26, 2014

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப


अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥

அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||

அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.

பஸ்²யாமி = காண்கிறேன்

த்வாம் = உன்

ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை

நா = இல்லை

அந்தம் = முடிவு

 ந = இல்லை

மத்யம் = நடு

ந = இல்லை

புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்

பஸ்யாமி = காணுதல்

விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே  

விஸ்வரூப = விஸ்வ + ரூபம் =  அனைத்தையும் கொண்ட வடிவமாணவனே

பல தோள்களும், பல வாய்களும் , பல வயிறுகளும், பல விழிகளையும் கொண்ட உன் தோற்றத்திற்கு தொடக்கத்தையும், நடுவையும், முடிவையும் நான் காண்கிலேன். 


தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, நடுவும் இல்லை. எங்கும் நிறைந்து இருக்கிறது.

நாம் முன்பே சிந்தித்தது போல அனைத்து உலகும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உருவை, வடிவை கற்பனை செய்து பார்த்தால் அது தான் விஸ்வ ரூபம்.

என்ன அர்த்தம்.

எல்லா உலகும் என்று  சொல்லும் போது சில விஷயங்கள் நமக்கு புரிபடுகிறது.

முதலாவது, அனைத்தும்  ஒன்றுதான்.ஏற்றத் தாழ்வு இல்லை. அனைத்தும் இறை  வடிவம் தான்.

இரண்டாவது, ஒன்று மற்றொன்றாய் மாறும். ஆனால், இங்கே புதிதாக ஒன்று வருவது இல்லை, இருப்பது இல்லாமல் போவதும் இல்லை.

மூன்றாவது, அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. எதுவும் தனித்து இல்லை. என்னது, உன்னது என்று பிரித்துப் பார்ப்பது அர்த்தம் அற்ற செயல்.

 நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி  தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

விச்வேஸ்வரா - விஸ்வ ரூப ...

சிந்திப்போம்.




1 comment:

  1. If you are able to get that mental attitude II think that is the ultimate

    நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

    ReplyDelete