கீதை - 11.13 - பல கூறுகளை கொண்ட உலகை கண்டான்
तत्रैकस्थं जगत्कृत्स्नं प्रविभक्तमनेकधा ।
अपश्यद्देवदेवस्य शरीरे पाण्डवस्तदा ॥११- १३॥
தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||
தத்ர = அங்கு
ஏக ஸ்தம் = ஒரே இடத்தில்
ஜகத் = உலகம்
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ப்ர வி பக்த = பல கூறுகளாய்
அ நேக தா = பல வடிவங்களில்
அபஸ்²யத் = அவன் கண்டான்
தேவ தேவஸ்ய = கடவுள்களின் கடவுள்
ஸரீரே = உடலில்
பாண்டவ ஸ்ததா = பாண்டவன் கண்டான்
அங்கே, பல கூறுகளைக் கொண்ட, உலகம் முழுவதும், அந்த தேவ தேவனுடைய சரீரத்தில் ஒன்றாக இருப்பதை பாண்டவன் கண்டான்
இறைவன் இந்த உலகைப் படைத்தான், இறைவனால் எல்லாம் கூடும் என்றால் உலகில் ஏன் இவ்வளவு துன்பங்கள், வலிகள் , துரோகங்கள், நோய்கள், வறுமை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள்....
கடவுளால் இவற்றை போக்க முடியாதா ? பசியால் உயிர்கள் வருந்துகின்றன, போரில் மடிகின்றன...இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் கடவுள் எப்படி கருணை உள்ளம் கொண்டவராக இருக்க முடியும் ?
இந்த கேள்வி காலம் காலமாக கேட்கப் பட்டு வருகிறது.
சரியான விடை வியாசர் தருகிறார்.
இறைவன் என்பவன் அல்லது என்பது ஒரு தனி மனிதன் என்று நாம் நினைப்பதால் வரும் குழப்பம் இது. தனி மனிதனுக்கு பொறுப்புகள் இருக்க வேண்டும்.இறைவனை தனி மனிதனாக நினைத்து நாம் அவன் இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கிறானே என்று வருந்துகிறோம்.
இறைவன் என்பவன் தனி மனிதன் அல்ல. அனைத்தின் தொகுதிதான் இறை என்பது.
நல்லதும், கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்ந்ததும் அனைத்தும் சேர்ந்த கலவைதான் இறைவன்.
உலகின் அத்தனை கூறுகளையும் தன்னில் கொண்டதுதான இறைவன் என்ற தத்துவம்.
இதை விட தெளிவாக கூற முடியாது.
அதை பாண்டவன் கண்டான்.
பாண்டவன் அப்படி பார்த்ததை சஞ்சயன் கண்டான்.
உங்களுக்கும் அந்த காட்சி கிடைக்கட்டும்.
இறைவன் என்பவன் தனி மனிதன் அல்ல. அனைத்தின் தொகுதிதான் இறை என்பது.
ReplyDeleteநல்லதும், கெட்டதும் , உயர்ந்ததும், தாழ்ந்ததும் அனைத்தும் சேர்ந்த கலவைதான் இறைவன்.