கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம்
किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥११- १७॥
கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||
கிரீடிநம் = கிரீடம்
கதிநம் = கதை
சக்ரிணம் = சக்ராயுதம்
ச = மேலும்
தேஜோராஸிம் = ஒளி வீசும்
ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்
தீப்திமந்தம் = ஒளியூட்டும்
பஸ்யாமி = நான் பார்க்கிறேன்
த்வாம் = உன்னை
துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான
ஸமந்தா த் = அனைத்து பகுதிகளிலும்
தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்
அப்ரமேயம் = அளவிட முடியாத
கிரீடமும், கதையும், சக்ராயுதமும் கொண்ட சூரியனைப் போல ஒளிவிடும் உன் அளவிட முடியாத உருவத்தை நான் காண்கிறேன்
கண்ணனின் அந்த விஸ்வரூபம் தலையில் கிரீடம், கையில் கதை மற்றும் சக்கரம் ஏந்தி இருக்கிறது. மிக மிக பிரகாசமாய் ஒளி விட்டுக் கொண்டு இருக்கிறது.
திருமாலை வர்ணிக்கும் போது சங்கு, சக்கரம், கதை, கிரீடம், பட்டு பீதாம்பரம் என்று வர்ணிப்பது வழக்கம்.
இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது.
இதன் உள் அர்த்தம் என்ன.
சங்கு - கடமையைச் செய்ய விடும் அழைப்பு
கதை - கடமையில் இருந்து தவறுபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை ஒழுங்கு படுத்தும் கருவி.
சக்கரம் - தானும் கடமையைச் செய்யாமல், செய்பவர்களையும் தடுத்து அக்கிரமம் செய்பவர்களை அழிக்க வந்த கருவி.
மகுடம், பட்டு பீதாம்பரம் - கடமையை சரிவர செய்தால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்
ஒளி வீசும் உருவம் - அஞ்ஞான இருளை போக்கும் ஞான ஒளி .
மேலே சொன்னவற்றை தெளிவாக உணர்த்தும் ஞானம் தான் ஒளி .
விஸ்வரூபம் தரும் பாடம்...
மேலும் படிப்போம்.
No comments:
Post a Comment