Saturday, May 30, 2015

கீதை - 13.1 - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

கீதை - 13.1 - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்


अर्जुन उवाच 
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव ||

அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான் 

ப்ரக்ருதிம் = பிரகிருதி 

புருஷம் = புருஷம் 

சைவ = மேலும் 

க்ஷேத்ரம் = க்ஷேத்ரம் 

க்ஷேத்ரஜ்ஞன் = க்ஷேத்ரஜ்ஞன்  

மேவ ச = அவற்றுடன் 

ஏதத்³வேதி³தும் = இவற்றை அறிய 

இச்சா²மி = இச்சை கொண்டுள்ளேன் 

ஜ்ஞாநம் = ஞானம் 

ஜ்ஞேயம்= ஞேயம்

ச கேஸ²= கேசவனே 

கேசவா, பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் இவற்றை அறிய விரும்புகிறேன் 

வாழ்கை , உலகம் என்றால் என்ன ?

உடல், அதில் உள் இயங்கும் ஒரு  சக்தி,  உடலுக்கு வெளியே இயங்கும் உள்ள பொருள்கள், அந்த பொருள்களுக்கு இடையே நிகழும் பரிமாற்றம் இவற்றைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன் என்கிறான். 

நான் யார், என்னை இயக்குவது எது, இந்த உலகம் எதனால் ஆனது, எனக்கும் இந்த உலகிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றி இந்த அத்யாயம் அலசுகிறது. 

பிரகிருதி = இது உயிரற்ற பொருள் 
புருஷன் = சக்தி. Spirit என்று சொல்லுவார்களே அது. 
க்ஷேத்திரம் = இவை இரண்டும் இயங்கும் வெளி அல்லது இடம் 
க்ஷேத்திரக்ஞன் = இந்த வெளியை அறிபவன் 
ஜ்ஞாநம் = அறிவு, knowledge 
ஜ்ஞேயம் = அறியப்படுவது 

இவற்றைப் பற்றி ஆராய்கிறது இந்த அத்யாயம். 

மிக ஆழ்ந்த பொருள் பொதிந்த அத்யாயம்.


கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம், ஆத்ம யோகம் இவற்றைப் பற்றியெல்லாம் கண்ணன்  கூறினான். அர்ஜுனன் அவற்றை முழுவதுமாக அறிந்தான் இல்லை. அவனுக்குள் குழப்பமே நிற்கிறது. 

கண்ணா, அதைஎல்லாம் விடு, நான் யார் ? இந்த உடலா, எனக்குள் இருக்கும் உயிரா ? 

இந்த உலகம் என்பது என்ன ? இந்த உலகை அறிந்து கொள்ளும் நான் யார் ? அறியும் ஞானம் என்பது என்ன ? எதை  அறிகிறேன் ? இவற்றைச் சொல்லு  என்கிறான். 

கண்ணனும் சொல்ல ஆரம்பிக்கிறான். 

வாருங்கள். அர்ஜுனனோடு கூட சேர்ந்து நாமும் இவற்றைப் பற்றி புரிந்து கொள்ள முயல்வோம்.

No comments:

Post a Comment