Saturday, May 16, 2015

கீதை - 12.15 - ஊருடன் ஒத்து வாழ்

கீதை - 12.15 - ஊருடன் ஒத்து வாழ் 


यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥१२- १५॥

யஸ்மாந்நோத்³விஜதே லோகோ லோகாந்நோத்³விஜதே ச ய: |
ஹர்ஷாமர்ஷப⁴யோத்³வேகை³ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: || 12- 15||


யஸ்மாந் = எதிலிருந்தும்

ந = இல்லையோ

உத்விஜதே = சலனம்

லோகோ = மக்கள்

லோகாந் = உலகிலிருந்து , மக்களிடம் இருந்து

ந = இல்லையோ

உட்விஜதே = சலனத்தை தருவது

ச =  மேலும்

ய: = அவன்

ஹர்ஷா = களியாலும் , அதீத இன்பத்தாலும்

அமர்ஷ = கோபத்தாலும்

பயோ = பயத்தாலும்

உத்வேகை = நடுக்கத்தாலும் 

முக்தோ = விடுபட்டு இருக்கிறானோ

ய: = அவன்

ஸ = அவன்

ச = மேலும்

மே = எனக்கு

ப்ரிய:  = பிரியமானவன்



எவனை உலகம் வெறுப்பது இல்லையோ ; 

உலகை எவன் வெறுப்பது இல்லையோ 

களியாலும், பயத்தாலும் ,  சினத்தாலும் வரும் கொதிப்புகளில் இருந்து  எவன் விடு பட்டவனோ அவனே எனக்கு இனியவன் 


தனக்கு இனியவனின் குணங்களை மேலும் கண்ணன் கூறுகிறான்.

"எவனை உலகம் வெறுப்பது இல்லையோ, எவனை உலகம் வெறுப்பது இல்லையோ...."

இங்கே உலகம் என்பதை வெறும் மனிதர்கள் என்று மட்டும் கொள்ளாமல் அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மற்ற உயிர் அற்ற பொருள்களையும் சேர்த்து பொருள் கொள்ளலாம். Environment என்று ஆங்கிலத்தில் கூறுவது போல.

சுற்றுப் புற சூழலோடு ஒத்துப் போபவன், மற்றவர்களுக்கு இதம் செய்பவன், எல்லாம் தனக்கு வேண்டும் என்று மற்றவர்களுக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளாதவன்...இவனை உலகம் வெறுக்காது.

அதே போல், இவன் உலகை வெறுக்க மாட்டான். எல்லோர் மேலும் அன்பும் கருணையும்  கொண்டவன். இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற பாகு பாடு இல்லை.  மழை போல எல்லோருக்கும் நல்லது செய்பவன்.

இந்த உலகோடு வெறுப்பு, உலகம் வெறுப்பது ஏன் நிகழ்கிறது ?

அளவுக்கு அதிகமான இன்பத்தில் முழுகுவது, பயம், கோபம் இவற்றால் உலகோடு  உரசல் ஏற்படுகிறது.

பேராசையால் பயம் வரும். பயத்தில் இருந்து கோபம் வரும். இதனால் உலகோடு  வேறுபாடு ஏற்படுகிறது.

இதை அறிந்து, ஆசையும், கோபமும், பயமும் விட்டு வாழ்பவன் எனக்கு  இனிமையானவன்  என்கிறான் கண்ணன்.


சிந்தித்துப் பார்ப்போம்...இத்தனயும் வைத்துக் கொண்டு இறைவன் நம் மேல் அன்பு  செலுத்துவது இல்லை என்று வருந்துவதில் என்ன பிரயோஜனம் ?


No comments:

Post a Comment