கீதை - 11.19 - தொடக்கம், நடு , முடிவு இல்லாத
अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥
அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||
அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத
அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள
அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்
ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு
பஸ்²யாமி = பார்கிறேன்
த்வாம் = உன்னை
தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்
ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்
விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்
தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.
இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்
பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான கண்கள்....
விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.
இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.
அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.
அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?
அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....
இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...
ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.
இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.
ஒரு முழுமையான ஒரு உருவம்.
பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு சொன்னது.
தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால் தாஜ் மகால் தெரியாது.கல்தான் தெரியும்.
அது போல,
இந்த ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க வேண்டும்.
கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான். அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?
அது போல
மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.
விஸ்வம் என்றால் உலகம்.
ரூபம் என்றால் வடிவம்.
உலகை ஒரே வடிவாக காண்பது விஸ்வரூபம்.
இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.
இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன.
பிறப்பு ஒரு போதும் நிற்பது இல்லை. அது போலவே நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது என்று. ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டே இருக்கிறது.
எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால் எத்தனை தோள்கள் இருக்கும்.
சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....
மேலும் சிந்திப்போம் ....
We need more from you. Just one sloga in Oct is too low considering your contribution in the past...Tks.....Nr
ReplyDelete