கீதை - பதின்மூன்றாம் அத்தியாயம் - ஒரு தொகுப்பு
1. இந்த உடல் க்ஷேத்ரம் என்று சொல்லப் படுகிறது. இதை அறிந்து கொள்பவன் க்ஷேத்ரன்ஞன் .
2. எது க்ஷேத்ரம் , யார் க்ஷேத்ரன்ஞன் என்று அறியும் அறிவே உண்மையான அறிவு.
3. இந்த க்ஷேத்ரம் என்பது பல்வேறு ரிஷிகளால் உணரப் பட்டு, எடுத்து பாடப் பட்டது. இதை அறுதி இட்டுக் கூற முடியாது. யூகங்கள் நிறைந்தது.
4. இந்த உடல் மட்டும் அல்ல, அதில் உள்ள புலன்கள், அதில் எழும் ஆசைகள், பகை, துக்கம், இன்பம், துன்பம் என்று இவை அனைத்தும் சேர்ந்தது க்ஷேத்ரம்.
5. ஞானம் என்றால் என்ன ?
6. கர்வம் இன்மை, பெருமிதம் இன்மை, பிறருக்கு ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை , தன்னைக் கட்டுப் படுத்துதல், புலன் இன்பங்களில் விருப்பம் இன்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துக்கம், தோஷம் இவற்றின் பால் சம நிலை, பற்றற்ற தன்மை, சொந்தங்களை தனது என்று கருதாமை, விரும்பியது மற்றும் விரும்பாதது என்று எது நடந்தாலும் சம சித்தம் , தவறாத யோகம், பக்தி, கூட்டங்களை விடுத்து தன்மை நாடுதல், தன்னைத் தான் அறிந்து கொள்வதில் தளரா முயற்சி, தத்துவ ஞானங்களின் பொருளை அறிந்து கொள்ளுதல் ...இவையே ஞானம் எனப்படும். இவை அல்லாதவை அஞ்ஞானம்.
7. ஞேயம் என்பதை அறிந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு பெறலாம். அநாதியாகிய பரப்பிரம்மம், அதில் சத் ம் இல்லை, அசத்தும் இல்லை. அது உலகம் எங்கும் நிறைந்து இருக்கிறது. அனைத்து புலன்களிலும் இருந்து அவற்றை செம்மையுற செலுத்துவது, புலன்களுக்கு அப்பாற்பட்டது, பற்று இல்லாது, அனைத்தையும் ஏற்றுக் கொள்வது, தனக்கு என்று குணம் என்று ஒன்று இல்லாதது, உடலுக்கு நிகழும் அனுபவங்களை தூய்பது அது. அனைத்து போருகளுக்கும் உள்ளேயும், வெளியேயும் இருப்பது, ; சரமும் அசரமுமாவது; நுண்மையால் அறிய முடியாதது, தூரமானது; அருகிலிருப்பது.
உயிர்களில் பிரிவுபட்டு இல்லாமல் ஆனால் பிரிந்தது போல இருப்பது. பூதங்களாய் தாங்கோது அது. புலன்களுக்கு உணர்வைத் தருவது, அவற்றை பிறக்கச் செய்கிறது.
8. ஒளிகளுக்கெல்லாம் அதுவே ஒளி தருவது. அனைதிற்குள்ளும்இருப்பது. அதுவே ஞானம்.
9. இதை அறிபவன், எனது தன்மையை அடைகிறான்.
10. பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் ஆதியில் இருந்தே இருக்கிறது. வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறக்கின்றன.
11. காரியங்களைச் செய்வது பிரகிர்தி. சுக துக்கங்களை உணர்வது புருஷன்.
12, புருஷன் பிரகிருதியில் இருந்து, அதில் நிகழும் குணங்களைத் அனுபவிக்கிறான். குணங்களினிடம் பற்றுக் கொள்வதன் மூலம், இவன் நல்லவனாகவும், தீயவனாகவும் தோன்றுகிறான்.
13. அனைத்தையும் செலுத்துவோன் , அனுமதி தருபவன், ஏற்றுக் கொள்பவன், அனுபவிப்பவன்...இந்த காரியங்களைச் செய்யும் அவனே பரம புருஷன்.
14. புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையும் அறிந்தவன் மீண்டும் மீண்டும் பிறப்பது இல்லை.
15. இந்த புருஷன், ப்ரகிர்தி, க்ஷேத்திரன், க்ஷேத்ரன்ஞன் என்பவற்றை ஞான, யோக மற்றும் கர்ம மார்கத்தில் சென்று அறியலாம். அல்லது அதில் சென்றவர்களை கேட்டும் அறிந்து கொள்ளலாம்.
16. உயிர்கள் க்ஷேத்திரம் மற்றும் க்ஷேத்திரக்ஞனும் சேர்வதால் தோன்றுகின்றன.
17. புருஷன் அனைத்து உயிர்களிலும் சமமாக இருக்கிறான். அதை அறிபவனே காட்சி உடையவன்.
18. எங்கும் எதிலும் ஈசனைக் காண்பவன் துன்பப் பட மாட்டான். அவன் பரகதி அடைவான்.
19. தொழில்கள் என் மூலம் நடக்கிறது. நான் நடத்துவது இல்லை என்று அறிபவனே காட்சி உடையவன்.
20. அனைத்தும் ஒன்றில் இருந்தே வந்தது என்று அறிபவன், பரந்த பிரமத்தை அடைவான்
21. தொடக்கம் இல்லாமையாலும், தன்கென்று ஒரு குணம் இல்லாமையாலும் பரமாத்மா குற்றம் அற்றவன். இவன் உடம்பிலிருந்தாலும் செயல் அற்றவன். பற்று அற்றவன் - ஆகாயத்தைப் போல, சூரியனைப் போல.
22. இவற்றை தன் அறிவால் எவன் காண்கிறானோ, அவன் இந்த பூத பிரகிரிதிகளை விட்டு உயர்ந்த நிலையை அடைகிறான்.
No comments:
Post a Comment