பகவத் கீதை - 2.01 - ஞான யோகம் - ஆரம்பம்
सञ्जय उवाच
तं तथा क्रिपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणम्।
विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः॥१॥
ஸஞ்ஜய உவாச
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்|
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||
ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்கிறான்
தம் = அவனிடம்
ததா = இவ்வாறு
க்ரிபயா = தன்னிரக்கத்துடன்
அவிஷ்டம் = நிறைந்த
அஸ்²ரு = கண்ணீர்
பூர்ணா = நிறைந்த
ஆகுல = குழம்பிய
இலேக்ஷணம் = தோற்றம்
விஷீத³ந்தம் = கவலை கொண்ட
இதம் = இந்த
வாக்கியம் = வாக்கியம்
உவாச = கூறினான்
மது⁴ஸூத³ந: = மதுசூதனன்
இவ்வாறு தன்னிரக்கம் மிஞ்சி, கண்ணில் நீர் ததும்ப, சோர்ந்து இருந்த அர்ஜுனனைப் பார்த்து , மதுசூதனன் இவ்வாறு கூறினான்
இந்த அத்தயாயத்தின் பெயர் சாங்கிய யோகம்.
சாங்கிய என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு அர்த்தம் - கணிதம். கணிதம் அல்லது கணக்கு என்றால் ஏதோ வாய்ப்பாடு , கூட்டல் கழித்தல் கணக்கு அல்ல.
கணிதம் போல , தர்க சாஸ்திரம் போல விளக்கம் சொல்வது. அறிவை அகலப் படுத்துவது.
எனவே, இதை ஞான யோகம் என்றும் சொல்லுவார்கள்.
யோகம் என்றால் இணைப்பது. சேர்ப்பது என்று பொருள்.
நமது மனம், வாக்கு செயல்களை இணைப்பது.
நம்மை இந்த உலகோடு இணைப்பது.
நம்மை , நம் நோக்கங்களோடு இணைப்பது.
ஞான யோகம் என்றால் நம்மை அறிவோடு இணைப்பது. அறிவின் தெளிவு இல்லாமல் நாம் குழம்பிக் கிடக்கிறோம். எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம். அந்த தடுமாற்றத்தில் இருந்து நம்மை விடுவிப்பது ஞான யோகம்.
பக்கத்து வீட்டு காரருக்கு வயிறு சரியில்லை என்று மருத்துவரைப் பார்த்தார். மருத்துவர் ஏதோ மருந்து தந்தார். நாளை எனக்கு வயிறு சரியில்லை என்றால் நானும் அதே மருந்தை சாப்பிட முடியுமா ? என் வலிக்குக் காரணம் வேறாக இருக்கலாம் அல்லவா ?
அர்ஜுனன் ஒரு போர் வீரன். பெரிய அறிவாளி. ஆற்றல் மிகுந்தவன். செல்வங்கள் நிறைந்தவன். அவனுக்கு உள்ள குழப்பங்கள் நமக்கும் இருக்குமா ? அவனுக்கு சொன்ன விடைகள் எப்படி நமக்குப் பொருந்தும் ? கண்ணன், அர்ஜுனனுக்குச் சொன்னதை நாம் ஏன் படிக்க வேண்டும் ?
நாம் என்ன நாளைக்கு , தேரையும், வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு சண்டைக்கா போகப் போகிறோம் ? இல்லையே ? பின் எதற்கு நாம் கீதையை படிக்க வேண்டும் ?
அதானே .....
http://bhagavatgita.blogspot.com/2018/08/21.html
No comments:
Post a Comment