கீதை - 15.1 - வேத வித்து
ஷ்ரீ பகவாநுவாச
ஊர்த்வமூலமதஃஷாகமஷ்வத்தஂ ப்ராஹுரவ்யயம்.
சந்தாஂஸி யஸ்ய பர்ணாநி யஸ்தஂ வேத ஸ வேதவித்
ஷ்ரீ பகவாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்
ஊர்த்வ மூலம் = வேர்கள் மேலேயும்
அதஃஷாகம் = கிளைகள் கீழேயும்
அஷ்வத்த = அஸ்வத மரத்தின்
ப்ராஹு = கூறுகிறார்கள்
அவ்யயம் = மாறாத, நிலைத்த
சந்தாஂஸி = வேதங்களில்
யஸ்ய = அவற்றில்
பர்ணாநி = இலைகள்
ய = அவன்
ஸ்த = அவற்றில்
வேத = வேதங்களை
ஸ = அவன்
வேதவித் = விற்பனனாவான் வேதங்களில்
மாறாத அது மேலே வேர்களையும், கீழே கிளைகளையும் கொண் டது. ஆலமரம் போன்ற அதன் இலைகளே வேதங்கள். இதை அறிந்தவன் வேதத்தை அறிவான்.
இந்த உலகம், அதில் உள்ள பொருள்கள் , உயிர்கள் எல்லாம் ஒன்றிலிருந்து வந்தது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் ?
மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், உயிர் அற்ற பொருள்கள் என்று எத்தனை எத்தனை இருக்கிறது.
மனிதர்கள் என்று எடுத்துக் கொண்டால் அதில் தான் எத்தனை பிரிவு - ஆண் , பெண், நல்லவன், கெட்டவன் , கருப்பு, சிவப்பு, உயரம் குட்டை, ஒல்லி பருமன் என்று ஆயிரம் வேறுபாடுகள்.
அப்படித்தான் மற்றவற்றிலும்.
ஒன்றில் இருந்துதான் அனைத்தும் வந்தது என்றால் ஏன் இத்தனை பிரிவுகள் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
ஒருவேளை, இவை அனைத்தும் ஒன்றில் இருந்து வந்தவை அல்லவோ. ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு மூலம் இருக்குமோ ?
இவை அனைத்தும் எங்கிருந்து வந்தன ? எங்கிருந்தோ வந்தன என்றால் அந்த மூலத்திற்கும், இந்த உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? இவற்றை தோன்ற வைத்த பின் அது என்ன ஆயிற்று ?
இவற்றைப் பற்றி அறிந்துகொண்டவன் புருஷர்களில் உத்தமன் என்று அழைக்கப் படுகிறான்.
இந்த ஞானத்தைப் பற்றி இந்த அத்யாயம் பேசுகிறது.
வேதத்தின் சாரத்தை இரண்டு வரியில் அடக்கிச் சொல்கிறது கீதை.
"இதை அறிந்தவனே வேத வித்து" எனப் படுவான் என்கிறது.
எதை அறிந்தால் ?
No comments:
Post a Comment