கீதை - 12.20 - தர்மம் என்ற அமிர்தம்
ये तु धर्म्यामृतमिदं यथोक्तं पर्युपासते ।
श्रद्दधाना मत्परमा भक्तास्तेऽतीव मे प्रियाः ॥१२- २०॥
யே து த⁴ர்ம்யாம்ருதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
ஸ்²ரத்³த³தா⁴நா மத்பரமா ப⁴க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: || 12- 20||
யே = அவர்கள்
து = மேலும்
தர்ம்யாம்ருத = தர்மம் என்ற அமிர்தத்தை
இதம் = இந்த
யதோக்தம் = இங்கே சொல்லப் பட்ட
பர்யுபாஸதே = பரி + உபாசதே = வழிபட்டு
ஸ்ரத்த தாநா = நம்பிக்கையுடன்
மத்பரமா = என்னையே பரமாகக் கொண்டு
பக்தாஸ் = பக்தர்கள்
தே = அவர்கள்
அதீவ = மிக அதிகமான
மே = அவன்
ப்ரியா: = பிரியமானவன்
இந்தத் தர்மம் என்ற அமிர்தத்தை நான் கூறியபடி என்னை பரமாகக் கொண்டு நம்பிக்கையுடன் வழிபடும் பக்தர் எனக்கு மிக இனியவர்
மொத்தம் 36 குணங்களை வியாசர் கூறினார். இதுதான் தர்மம். இதை கடை பிடியுங்கள் என்று சொல்கிறார்.
ஏன் கடை கடை பிடிக்க வேண்டும் ? கடைபிடித்தால் என்ன ஆகும் ? கடை பிடிக்காவிட்டால் என்ன ஆகும் ? இதெல்லாம் நடை முறையில் சாத்தியமா ? என்று பல கேள்விகள் நமக்குள் எழுவது சகஜம்.
எனவே "நம்பிக்கையுடன்" என்று குறிப்பிடுகிறார். நம்பிக்கையுடன் ஆரம்பிக்க வேண்டும்.
மருத்துவர், மருந்து தருகிறார். நோய் குணமாகும் என்றும் நம்பித்தான் உண்கிறோம். கேள்வி கேட்டு கொண்டு இருப்பதில்லை.
பிறவி பிணிக்கு வியாசர் என்ற மருத்துவர் தரும் மருந்து இது.
இதை கடை பிடிப்பதை ஏதோ கடமை என்று நினைக்காமல், இதை ஒரு வழிபாடு என்றே கொள்ள வேண்டும் கூறுகிறார்.
முயன்று பார்ப்போம்.
No comments:
Post a Comment