கீதை - 12.13 - இனிமையான வாழ்க்கைக்கு கீதை காட்டும் வழி - பாகம் 2
निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥
அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||
அத்வேஷ்டா = அ + துவேஷ்ட = வெறுப்பு இல்லாமல்
ஸர்வ பூதா நாம் = அனைத்து உயிர்களிடத்தும்
மைத்ர: = நட்புடன்
கருண = கருணையுடன்
ஏவ = நிச்சயமாக
ச = மேலும்
நிர்மமோ = நான் எனது என்று எண்ணாமல்
நிரஹங்கார: = நிர் + அஹங்கார = ஆணவம் இல்லாமல் (அஹம் = நான், எனது. கர் = செய்வது, செயல். அஹம் + கார = நான் செய்தேன், என்னால் நடக்கிறது என்ற எண்ணம்.அகம்பாவம்)
ஸமது³:க²ஸுக²:= சம + துக்க + சுக = துக்கத்தையும்,சுகத்தையும் சமமாக எண்ணி
க்ஷமீ = பொறுமையுடன் , பொறுப்பவன்
எந்த உயிரையும் பகைக்காமல், அவைகளிடம் நட்பும், கருணையும் கொண்டு , நான் எனது என்ற எண்ணம் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்து, பொறுமையுடன் இருப்பவன்
மிக மிக அழகான சுலோகம்.
ஆத்ம யோகம் அறிந்து என்ன பலன். எல்லாவற்றிலும் ஆத்மா இருக்கிறது. ஆத்மாவுக்குள் எல்லாம் இருக்கிறது என்று அறிந்து என்ன செய்வது. அந்த அறிவு நமக்கு என்ன செய்யும். சும்மா ஏதோ தெரிந்து கொண்டோம் என்று போய் விடுவதா.
இல்லை.
ஆத்ம யோகத்தின் செயல்பாட்டை இங்கே விளக்குகிறார்.
எல்லாவற்றிலும் இருப்பது ஆத்மா, ஆத்மாவில் எல்லாம் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டால், ஒன்றிலிருந்து மற்றதற்கு பேதம் இல்லை.
இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
அப்படி என்றால் வெறுப்பும் பகையும் எப்படி வரும். நீங்களே உங்கள் மேல் பகை கொள்ள முடியுமா ? உங்கள் உடலின் ஒரு பாகத்தை நீங்கள் வெறுத்து ஒதுக்க முடியுமா ? எல்லாம் ஒரு ஆத்மாவின் பகுதி என்று ஆனால் , ஒரு பெரிய உருவத்தின் ஔர் பகுதி நீங்கள், இன்னொரு பகுதி நான். நமக்குள் என்ன சண்டை ? சச்சரவு ?
ஆத்ம யோகத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் இந்த உலகம் அனைத்தும் ஒன்றே என்ற எண்ணம் வரும்.
பகை, வெறுப்பு , சண்டை, பூசல் எல்லாம் மறைந்து போகும்.
எல்லா உயிர்களிடத்தும் நட்பும் கருணையும் பிறக்கும்.மற்றவர்கள் உங்களில் இருந்து வேறு அல்ல என்று ஆன பின் அவரோடு நீங்கள் எப்படி சண்டை போட முடியும்.
உலகில் வேறு எந்த நூலாவது இப்படி சொல்லி இருக்கிறதா ? எங்கள் கடவுளை பின் பற்றுபவர்கள், எங்கள் மத நூலை பின் பற்றுபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று தான் அனைத்து மதமும் போதிக்கின்றன.
கீதை, கடவுள், மதம், நூல், என்ற எல்லாம் கடந்து செல்கிறது.
எல்லா உயிர்களையும் என்று சொல்லும் போது மனிதர்கள் மட்டும் அல்ல புல் , பூண்டு, விலங்குகள் என்று அனைத்தையும் சேர்த்துச் சொல்கிறது.
அனைத்து உயிர்களிடத்தும் நட்பும் , கருணையும்.
அந்த உயிர் எந்த மதத்தை சார்தவனாக இருந்தாலும் அவன் மேலும் நட்பும் கருணையும் கொள் என்கிறது கீதை...
இவ்வளவு பரந்த மனப்பான்மை வேறு எந்த மதத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த மத நூலும் சொல்வதாகத் தெரியவில்லை.
உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மேலும் நட்பும் கருணையும் கொள் என்ற இந்தத் தத்துவம் நம் தமிழ் இலக்கியத்தில் மிக மிக பெரிதாக பரவிக் கிடக்கிறது....
அவற்றை அடுத்த பகுதியில் சிந்திப்போம்....
================ பாகம் 2 =================================================
இந்து மதம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது. இந்த மதக் கொள்கைகளை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டு இருந்தது.
மேலே, கீதையில் எல்லா உயிர்களிடத்தும் நட்பும் கருணையும் என்று சொல்வதை பார்த்தோம்.
இதை கீதை மட்டும்தான் சொல்கிறதா அல்லது மற்ற இந்து மத நூல்களும் கூறுகின்றனவா ?
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
இந்த உலகம் அனைத்துமே இறைவனின் வடிவம் என்று போற்றியது கம்ப இராமாயணம். நீங்கள் இந்த மதத்தை பின் பற்றினாலும் சரி, பின் பற்றாவிட்டாலும் சரி நீங்கள் இறைவனின் அம்சம் என்று ஏற்றுக் கொண்டது இந்து மதம்.
காகம் உறவு கலந்து உண்ணக்
கண்டீர்; அகண்ட ஆகார சிவ
போகம் எனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் ஜகத்தீரே!
பேரின்ப வெள்ளம் பொங்கி ததும்பி கிடக்கிறது, எல்லோரும் பருகலாம்....சேர வாரும் ஜகத்தீரே என்று உலகில் உள்ள எல்லோரையும் அழைக்கிறார் தாயுமானவர். சிவ போகம் ஏக உருவாய் கிடக்குது என்கிறார். எல்லாம் ஒன்றாக இருக்கிறது. வேறுபாடு ஏதும் இல்லை என்கிறார் மிகப் பெரிய ஞானியான தாயுமானவர்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
ஒன்றே குலம் என்று ஓதினார் திருமூலர்.
ஞானிகள் எல்லோரும் அனைத்து உயிர்களையும் ஒன்றாகவே பார்த்தனர்.
அந்த ஒன்றின் பெயர் - ஆத்மா - இறைவன், என்று எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
ஒன்றுதான்
No comments:
Post a Comment