பகவத் கீதை - 1.26 - அர்ஜுனன் கண்டது
तत्रापश्यत्स्थितान्पार्थः पितॄनथ पितामहान्।
आचार्यान्मातुलान्भ्रातॄन्पुत्रान्पौत्रान्सखींस्तथा॥२६॥
தத்ராபஸ்²யத்ஸ்தி²தாந்பார்த²: பித்ரூநத² பிதாமஹாந்|
ஆசார்யாந்மாதுலாந்ப்⁴ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ²ம்ஸ்ததா² ||1-26||
தத்ர = அங்கே
அபஸ்யத்ஸ்த் = பார்த்தான்
ஸ்திதாந் = இருந்த
பார்த = அர்ஜுனன்
பித்ரூநத = சித்தப்பா, பெரியப்பா போன்றோரையும்
பிதாமஹாந் = தாத்தாக்களையும்
ஆசார்யாந் = ஆசிரியர்களையும்
மாதுலாந் = தாய்வழி சொந்தங்களையும்
ப்⁴ராத்ரூந் = சகோதரர்களையும்
புத்ராந் = பிள்ளைகளையும்
பௌத்ராந் = பேரப் பிள்ளைகளையும்
ஸகீந் = நண்பர்களையும்
ததா = மேலும்
அங்கே தந்தைமார்களையும், தாத்தாக்களையும், பிள்ளைகளையும், பேர ப் பிள்ளைகளையும், ஆசிரியர்களையும், நண்பர்களையும், தாய் வழிச் சொந்தங்களையும் அர்ஜுனன் பார்த்தான்.
இந்த ஸ்லோகமும் பாதியில் நிற்கிறது. இதன் தொடர்ச்சி அடுத்த ஸ்லோகத்தில் வருகிறது. அதையும் பார்த்த பின், நாம் விரிவாக சிந்திக்க இருக்கிறோம்.
நாளை வரை பொறுமை.
http://bhagavatgita.blogspot.com/2018/06/126.html
No comments:
Post a Comment