பகவத் கீதை - 1.20 - அர்ஜுனன் வருகை
अथ व्यवस्थितान्दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः॥२०॥
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ :|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ : ||1-20||
ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|
அத = அதன் பின்
வ்யவஸ்திதாந் = அணிவகுத்து நின்ற
த்ருஷ்ட்வா = பார்த்து
த்ர்தராஷ்ட்ராந் = திருதராஷ்ட்ர (சேனைகளை )
கபித்⁴வஜ = குரங்கு கொடியுடைய
ப்ரவ்ருத்தே = ஆரம்பிக்கப் போகின்ற
ஸஸ்த்ர = போர் கருவிகளை
ஸம்பாதே = உபயோகப் படுத்தப் போகின்ற
தநு = வில்லை
உத்³யம்ய = எடுத்துக் கொண்டு
பாண்டவ : = பாண்டவனாகிய அர்ஜுனன் ||1-20||
ஹ்ருஷீகேஸ²ம் = ஸ்ரீ கிருஷ்ணா
ததா³ = அப்போது
வாக்யம் = வாக்கியம்
இதம் = இந்த
அஹ = சொன்னான்
மஹீபதே = அரசன்
இரு புறமும் சங்க நாதம் செய்து போருக்கு தயார் என்று அறை கூவல் விடுத்த பின் , அனுமக் கொடி உடைய அர்ஜுனன், கையில் வில்லை ஏந்திக் கொண்டு , பின்வருமாறு ஸ்ரீ கிருஷ்ணனிடம் அர்ஜுனன் கூறினான்
போருக்கு அர்ஜுனனும் தயாராகத்தான் இருக்கிறான். இது மிக மிக முக்கியமான ஒன்று. உற்றார் உறவினர்களை பார்த்து , "ஐயோ, இவர்களை எல்லாம் நான் கொல்ல வேண்டுமா ? அப்படி இவர்களை கொன்று , அதனால் கிடைக்கும் அரசால் என்ன இலாபம் " என்று பின்னால் மனம் பேதலிக்கிறான். ஆனால், அவர்களை கொல்வது என்ற முடிவோடுதான் வந்திருக்கிறான்.
போருக்கு யார் யாரெல்லாம் வந்திருப்பார்கள் என்று அர்ஜுனனுக்குத் தெரியாதா ? தெரியும். தெரிந்தே தான் போருக்கு வந்திருந்தான். ஆனாலும், அவர்களை நேரில் பார்த்த பின் மனம் மாறுகிறான்.
கடமைக்கும், பாசத்துக்கும் நடுவில் நடக்கும் போர் அது.
யோசித்துப் பாருங்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன். இரண்டு பக்கமும் படைகள் ஆரவாரமாக நிற்கின்றன. மிகப் பெரிய போர் நிகழ இருக்கிறது. அர்ஜுனன் போன்ற வீரனுக்கு தங்கள் வீரத்தை காட்ட அரிய சந்தர்ப்பம்.
உச்சக்கட்டம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
அடுத்து என்ன நிகழப் போகிறது என்று நம்மை நாற்காலியின் நுனிக்கு கொண்டு வரும் இடம்.
http://bhagavatgita.blogspot.com/2018/06/120.html
No comments:
Post a Comment