பகவத் கீதை - 1.18 - சங்க நாதம்
द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्॥१८॥
த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வஸ²: ப்ருதி²வீபதே|
ஸௌப⁴த்³ரஸ்²ச மஹாபா³ஹு: ஸ²ங்கா²ந்த³த்⁴மு: ப்ருத²க்ப்ருத²க் ||1-18||
த்ருபதோ = துருபதன்
த்ரௌபதே யாஸ்ச = திரௌபதியின் பிள்ளைகளும்
ஸர்வஸ = அனைவரும்
ப்ருதிவீபதே = உலகத்தின் தலைவனே (திருதராஷ்டிரனே , சஞ்சயன் சொல்வது)
ஸௌபத்ரஸ்ச = சுபத்திரையின் பிள்ளையும்
மஹாபா³ஹு = அகண்ட தோள்களை உடையவனும்
ஸங்காந்தத்மு: = சங்க நாதம் செய்தனர்
ப்ருதக் ப்ருதக் = தனித் தனியாக
இந்த உலகத்தின் தலைவனான திருதராஷ்டிரனே! துருபதனும், திரௌபதையின் மற்றும் சுபத்திரையின் பிள்ளைகளும், மற்றவர்களும் தனித் தனியே சங்க நாதம் செய்தனர்.
இரண்டு பக்கத்திலும் உள்ள பெரிய வீரர்களின் பட்டியலை திருதராஷ்டிரனுக்குத் தருகிறான். எல்லோரும் போர் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
பேரழிவு உறுதி என்பது கண் கூடாகத் தெரிகிறது.
திருதராஷ்டிரன் நினைத்தால் அந்த அழிவை தடுத்து நிறுத்தலாம். இன்னும் கூட சமயம் இருக்கிறது. கடைசி நொடியில் கூட போரை தவிர்க்க முடியும்.
எனவே தான், சஞ்சயன் சொல்கிறான் "இந்த பூ உலகுக்கு அரசனே" என்று திருதராஷ்டிரனைப் பார்த்து.
இந்த போரின் பொறுப்பு உன்னுடையது என்று எடுத்துச் சொல்கிறான்.
அரசன் என்ற முறையில், உயிர்களை காக்க வேண்டியது உன் கடமை. நீதியை நிலை நாட்ட வேண்டியது உன் கடமை என்று திருதராஷ்டிரனுக்கு அறிவுறுத்துகிறான்.
திருதராஷ்டிரன் கேட்டான் இல்லை. போர் நடக்கவே செய்தது. பேரழிவு நிகழ்ந்தது என்று வராலாறு சொல்கிறது.
அந்த அழிவுக்கு முழு பொறுப்பும் திரதராஷ்ட்டினையே சாரும்.
இரு தரப்பு பட்டியலும் முடிந்தது.
சண்டை தொடங்கி விட்டதா? இந்த குருஷேத்ர யுத்தத்தின் கதாநாயகன் அர்ஜுனன். அவன் எங்கே ? கதாநாயகன் களத்தில் இல்லாமல் போரா ?
அர்ஜுனன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ?
http://bhagavatgita.blogspot.com/2018/06/118.html
No comments:
Post a Comment