பகவத் கீதை - சங்க நாதம்
துரியோதனின் பேச்சை கேட்ட பின், பீஷ்மர் சிங்க நாதம் செய்து தன் சங்கை ஊதினார் என்று பார்த்தோம்.
அவர் தன் சங்கை ஊதிய பின், அதுற்கு எதிராக பாண்டவர்களின் பக்கம் இருந்து யார் சங்க நாதம் செய்தார்கள் ?
திருஷ்டத்துய்மணன் சங்க நாதம் செய்திருக்க வேண்டும் ஏனென்றால் அவன் தான் பாண்டவர்களின் படைத் தளபதி
இல்லை என்றால் தர்மன் செய்திருக்கலாம், ஏனென்றால் அவன் பாண்டவர்களில் மூத்தவன்
இல்லை என்றால், பீமன் செய்திருக்கலாம், ஏனென்றால் அவன் துரியோதனனை கொல்வதாக சபதம் செய்தவன்
இல்லை என்றால் அர்ஜுனன் செய்திருக்கலாம், ஏனென்றால் அவன் மிக மிக பலசாலி.
இவர்கள் யாரும் பாண்டவர் தரப்பில் இருந்து சங்க நாதம் எழுப்பவில்லை
பின் யார் எழுப்பினார்கள் ? பீஷ்மரின் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது யார் ? அப்படி அவர் ஏற்றுக் கொள்ள என்ன காரணம் ?
No comments:
Post a Comment