19 - கீதை வாழ்வின் தளங்கள்
Physical plane - உடற் கூறு சார்ந்த பகுப்பு - உயிர் உள்ளது, உயிர் இல்லாதாது, ஆண், பெண் என்ற பிரிவு.
Physical plane - உடற் கூறு சார்ந்த பகுப்பு - உயிர் உள்ளது, உயிர் இல்லாதாது, ஆண், பெண் என்ற பிரிவு.
Scientific plane - அறிவியல் சார்ந்த பகுப்பு - எலும்பு, தசை, செல், ப்ரோட்டான்,
நியுட்ரான், எலெக்ட்ரான் என்ற பகுப்பு
Emotional plane - உணர்வு சார்ந்த பகுப்பு - தாய், தாரம்,
தந்தை, மகன், மனைவி, மகள், மாமா, மாமி என்ற பகுப்பு
இவை
எல்லாம் மனிதர்களை ஏதோ ஒரு வகையில் பிரித்து ஒன்றுக்கு ஒன்று எப்படி வேறு பட்டது
என்று நமக்கு காண்பிக்கின்றன.
இவற்றை
தாண்டி spiritual plane அதாவது
ஆன்மீகத் தளம் ஒன்று இருக்கிறது.
உங்களுக்குள்ளும்,
எனக்குள்ளும் இன்னும் உள்ள அத்தனை உயிர்களுக்கும் உள்ளே இருந்து இயக்குவது ஒரே
சக்தி தான் என்று கூறும் தளம்.
உள்ளே
போக போக வேறுபாடு குறைந்து கொண்டே போகிறது
அர்ஜுனன்
மீண்டும் சொன்னதையே சொல்கிறான்.
கடைசியில்
தான் திருப்பி திருப்பி ஒரே விஷயத்தை சொல்வதை உணர்ந்து, " என்னுடைய கோழைத்
தனத்தினால், சிறு மதியால், எது சரி, எது தவறு என்று உணராமல், குழம்பிய மனத்துடன்
உன்னை கேட்கிறேன், எது நல்லது என்று நிச்சயமாக எனக்குச் சொல். நான் உன் சீடன்.
உன்னை சரண் அடைகிறேன். எனக்கு கட்டளை இடு"
உங்கள்
மூக்கு கண்ணாடி கீறல் விழுந்து, அழுக்கு அடைந்து மங்கிப் போய் இருந்தால், அதை
அணிந்து கொண்டு நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் வெளி உலகம் மங்கலாக,
கீறல் விழுந்து தான் தெரியும். உற்று உற்று பார்க்க கண் வலியும் தலை வலியும் தான்
வரும். கண்ணாடியை எடுத்து விட்டுப் பார்த்தால் ஒன்றும் தெரிவது இல்லை. கண்ணாடி
அணிந்து கொண்டு பார்த்தால் எல்லாம் கோணல் மானலாகத் தெரிகிறது.
என்ன
தான் செய்வது?
நல்ல
பார்வை உள்ள யாரிடமாவது கேட்க்க வேண்டும். அதைத்தான் அர்ஜுனன் செய்கிறான். என்
புத்திக்கு எட்டவில்லை, என் மனமும் குழம்பி கிடக்கிறது. நீயே சொல் எது சரி, எது
தவறு என்று. நீ சொல்வதை நான் கட்டளையாக ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான்.
அப்படி
சொன்னானே தவிர, செய்யவில்லை. கிருஷ்ணன் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை.
மீண்டும் மீண்டும் அவனிடம் சந்தேகம் கேட்கிறான்.
அவனுடைய
சரணாகதி பரி பூரணமாகவில்லை.
அப்படி
அர்ஜுனன் சொன்னவுடன் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்து கிருஷ்ணன் சொல்ல
ஆரம்பிக்கிறான்....
கீதா
உபதேசம் இங்கிருந்து ஆரம்பிக்கிறது....
No comments:
Post a Comment