28 - ஆத்மா அழிவற்றது
இந்த உலகில் உள்ள அனைத்தும் ஆத்மாவால் நிறைந்து உள்ளது. ஆத்மா அழிவற்றது. அதை யாராலும் அழிக்க முடியாது.
இன்னும் ஒரு படி மேலே போய், எது அழிக்க முடியாததோ, அது ஆத்மா எனப்படும். ஆத்மா அனைத்திற்குள்ளும், அனைத்திற்க்கு வெளியேயும் இருக்கிறது.
அது எப்படி முடியும் ?
ஆகாயம் பானைக்கு உள்ளேயும், வெளியேயும் இருப்பதைப் போல ஆத்மா எங்கும் நிறைந்து இருக்கிறது.
இன்னொரு சிந்தனை - அழிவு என்றால் என்ன ?
இருந்து பின் இல்லாமல் போவது. ஒன்றாய் இருந்து பின் மற்றொன்றாக மாறுவது தேய்ந்து போவது
ஆத்மா இந்த மாற்றங்களுக்கு உட்பட்டது அல்ல.
உலகில் உள்ள அனைத்தும் ஆறு நிலைகளை அடைகின்றன. ஆத்மா இந்த நிலைகளை அடைவது இல்லை.
அந்த ஆறு நிலைகளாவன....
No comments:
Post a Comment