கீதை - கர்ம யோகம் - ஒரு அறிமுகம்
கர்மயோகம் கீதையின் மூன்றாவது அத்யாயம்.
இதற்கு முந்தைய இரண்டாவது அத்யாயத்தில் கிருஷ்ணன் இரண்டு விஷயங்களைப் பற்றி கூறினான்.
முதலாவது, இந்த உலகம் எல்லாம் நிறைந்தது, பிறப்பும் இறப்பும் அற்றது, வெட்டவும், எரிக்கவும்,நனைக்கவும், கரைக்கவும் முடியாதது எதுவோ அதை உணர் என்றான். இந்த உலகத்தில் எல்லாம் தோன்றி மறைவன. எதுவும் புதிது இல்லை. பிறந்து இறந்து ஏதோ ஒரு சுழற்ச்சியில் இருக்கின்றன. என்று வாழ்வின் நிரந்தரமானது மற்றும் நிரந்தரம் இல்லாதது பற்றி கூறினான். இதை பல உரை ஆசிரியர்கள் ஆத்மா என்று பெயரிட்டார்கள். வியாசர் இடவில்லை. ஆத்மா என்று கொண்டதால், பல சிக்கல்கள் வந்தன. ஜீவாத்மா , பரமாத்மா இதில் எது என்ற முதல் குழப்பம். இந்த இரண்டு ஆத்மாவிருக்கு உள்ள தொடர்பு இரண்டவாது சிக்கல்.
இரண்டாவது, திட சித்தம் பற்றியும் அது உள்ளவன் எப்படி இருப்பான் என்பது பற்றியும் கூறினான். எப்படி புலன்கள் அறிவை மயக்கும் என்பதை படிப் படியாக விளக்கினான். இந்த அறிவு வந்து விட்டால் வேறு ஒரு குழப்பமும் வராதுஎ என்றான்..
அர்ஜுனன் கேட்கிறான் - அறிவுதான் உயர்ந்தது என்றால் பின் என்னை எதற்கு யுத்தம் செய்ய சொல்கிறாய் என்று.
ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமான கேள்வி.
அறிவு முக்கியம் என்றால், அதற்காக மற்ற எல்லாவற்றையும் விட்டு விட முடியுமா.
அறிவு முக்கியம் என்றால், அறிவை பெறுவதும் ஒரு வேலை தானே. அந்த கர்மாவை செய்தால்தானே ஞானம் வரும்.
கிருஷ்ணன் ரொம்ப பொறுமையாக சொல்கிறான் - அறிவு சிறந்தது தான் அதற்காக சாப்பிடாமல் இருந்து விடுவாயா என்ற அளவிற்கு போய் பேசுகிறான்.
வாழ்வில் இன்பம் வேண்டும் என்றால் அறிவும் வேண்டும், உழைப்பும் வேண்டும்.....
அறிவற்ற உழைப்பு விழலுக்கு இறைத்த நீர். முட்டாள் தனமாய் காரியம் செய்தால் சில சமயம் ஆபத்தில் கூட முடியலாம்.
உழைப்பற்ற அறிவால் ஒரு பலனும் இல்லை. படித்ததை உபயோகப் வேண்டும். குறைந்த பட்சம் பிறருக்கு சொல்லியாவது தர வேண்டும்.
பூட்டி வைத்த அறிவால் யாருக்கு என்ன பலன் ?
வெறும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது ... உழைப்பும் வேண்டும் என்று பேசுகிறது...கர்ம யோகம்.
உழைப்பு, கடமையை செய்தல் ஏன் உயர்ந்தது, அதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுகிறது.
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....அது என்னனா
No comments:
Post a Comment