கீதை - 13.4 - ரிஷிகளால் கூறப்பட்ட க்ஷேத்ரம்
ऋषिभिर्बहुधा गीतं छन्दोभिर्विविधैः पृथक् ।
ब्रह्मसूत्रपदैश्चैव हेतुमद्भिर्विनिश्चितैः ॥१३- ४॥
ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் |
ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||
ருஷிபிர் = ரிஷிகளால்
பஹுதா = பலவிதமாக
கீதம் = பாடப்பட்டது
சந்தோபிர் = வேதத்தில்
விவிதை = பலவேறாக
ப்ருத²க் = தனித் தனியாக
ப்ரஹ்ம ஸூத்ர பதை = ப்ரம்ம சூத்ரத்தில் விவரித்தபடி
ஸ = மேலும்
எவ =நிச்சயமாக
ஹேதுமத்பிர் = காரண காரியங்களை ஆராய்ந்து சொன்னவர்களால்
விநிஸ்²சிதை = நிச்சயமாக்கப் பட்டது
இந்த க்ஷேத்ரமானது ரிஷிகளால் பலவிதமாக கூறப்பட்டுள்ளது. ப்ரம்ம சூத்ரத்தில் விவரிக்கப்பட்டது. வேதத்தில் கூறப்பட்டுள்ளது. காரண காரியங்களை ஆராய்ந்து தர்க சாஸ்த்திரத்தின் மூலம் நிச்சயமாக நிரூபிக்கப் பட்டது.
நான் கடவுள். தான் திருமாலின் அவதாரம். எனவே, நான் சொல்வதை நீ கேள் என்று கண்ணன் சொல்லவில்லை.
இன்னும் சொல்லப் போனால் கண்ணன் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.
வேதத்தில் கூறப் பட்டதை நான் சொல்கிறேன் என்கிறான்.
மேலும், இது ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் உள்ள கோட்பாடு அல்ல.
ஆராய்ச்சி செய்து தர்க சாஸ்திரத்தின் மூலம் நிரூபிக்கப் பட்டது (logic ) என்கிறான் கண்ணன்.
இனி வரும் சுலோகங்களில் ஒரு ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி செய்யும் மாணவனைப் போல இவற்றை பிரித்து, விளக்குகிறான் கண்ணன்.
அதைப் பற்றி மேலும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment