கீதை - 13.3 - அறிவியலின் தொடக்கம்
तत्क्षेत्रं यच्च यादृक्च यद्विकारि यतश्च यत् ।
स च यो यत्प्रभावश्च तत्समासेन मे शृणु ॥१३- ३॥
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் |
ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||
தத் = அந்த
க்ஷேத்ரம் = க்ஷேத்ரம்
யச்ச = எது?
யாத்³ருக்ச = எந்த வகைப்பட்டது
யத்விகாரி = எவ்வித மாற்றங்களைக் கொண்டது
யதஸ்²ச யத் = எங்கிருந்து வந்தது
ஸ ச யோ = அவன் யார்
யத் ப்ரபாவஸ்ச = அவன் பிரபாவம் என்ன (பெருமை என்ன)
தத் = அவற்றை
ஸமாஸேந = சுருக்கமாக
மே = நான்
ஸ்ருணு = சொல்லக் கேள்
அந்த க்ஷேத்திரம் என்பது என்ன ? அது எந்த வகையானது ? என்ன மாற்றங்களை உடையது ? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் என்பவன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லக் கேள்.
அறிவது எது ? அறியப்படுவது எது? அறியப்படும் பொருள் எப்படியெல்லாம் மாறும்? அறிபவன் யார் ? அவனுடைய குணங்கள் என்ன ?
இவற்றைப் பற்றி நான் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்கிறான் கண்ணன்.
அறிவதும் , அறியப்படுவதும் இரண்டும் சேரும்போதுதான் அறிவு பிறக்கிறது.
இவற்றைப் பற்றி கீதை விளக்குகிறது.
என்ன என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment