கீதை - 1.11 - பீஷ்மனை காத்து நில்லுங்கள்
अयनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि॥११॥
அயநேஷு ச ஸர்வேஷு யதா²பா⁴க³மவஸ்தி²தா:|
பீ⁴ஷ்மமேவாபி⁴ரக்ஷந்து ப⁴வந்த: ஸர்வ ஏவ ஹி ||1-11||
அயநேஷு = அனைத்து முக்கியமான இடங்களிலும்
ச = மேலும்
ஸர்வேஷு = அனைத்து
யதா²பா⁴கம் = உங்களுடைய இடங்களில் இருந்து
அவஸ்தி²தா: = நிலையில்
|
பீ⁴ஷ்மம் = பீஷ்மரை
யேவ =மட்டும்
அபி⁴ரக்ஷந்து =காத்து நில்லுங்கள்
ப⁴வந்த: = நீங்கள்
ஸர்வ =அனைத்து
ஏவ ஹி = அதையும் செய்யுங்கள் ||1-11||
தன் படையின் பட்டியலை தந்த பின், துரியோதனன் படைத் தளபதிகளைப் பார்த்து சொல்லுகிறான் "நீங்கள் பீஷ்மரை காத்து நில்லுங்கள்" என்று.
ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் - Play to win, play not to lose என்று.
அதாவது வெற்றிக்காக போராடுவது என்பது வேறு. தோற்று விடக் கூடாது என்று போராடுவது என்பது வேறு.
துரியோதனன் மனதில் வெற்றி கொள்வோம் என்ற நம்பிக்கை இல்லை.
படையைப் பார்த்து , "பாண்டவ சேனையை முறியடியுங்கள்" என்று சொல்ல வில்லை. பீஷ்மரை காத்து நில்லுங்கள் என்று சொல்லுகிறான்.
அதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.
கௌரவர்களும் பாண்டவர்களும் , வெவ்வேறு சிற்றரசர்களை சேர்த்து கொண்டு தங்கள் படையை தயார் செய்து வைத்திருக்கின்றனர்.
இந்தப் போர், இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் போர். பங்காளி சண்டை.
இதில், மற்ற அரசர்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்கள் போர் செய்ய ஒரு காரணமும் இல்லை.
பாண்டவர்களை முறியடியுங்கள் என்று சொன்னால், "ஏன்" என்ற கேள்வி வரும். கௌரவர் பக்கம் இருக்கும் பல சிற்றரசர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு பகையும் இல்லை. மேலும், அவர்கள் பாண்டவர் பக்கம் நீதி இருப்பதாகக் கூட நினைக்கலாம். அப்படி இருக்கும் போது, அந்த அரசர்களை பாண்டவர்களை எதிர்த்து போரிடச் சொன்னால் , அது அவ்வளவு நன்றாக இருக்காது என்று நினைத்து, பீஷ்மரை காத்து நில்லுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.
அடுத்து என்ன நிகழ்ந்தது ?
http://bhagavatgita.blogspot.in/2018/03/111.html
No comments:
Post a Comment