கீதை - 15.20 - பாவம் அற்ற வாழ்க்கை
इति गुह्यतमं शास्त्रमिदमुक्तं मयानघ ।
एतद्बुद्ध्वा बुद्धिमान्स्यात्कृतकृत्यश्च भारत ॥१५- २०॥
இதி குஹ்யதமம் ஸாஸ்த்ரமித முக்தம் மயாநக |
ஏதத் புத் த் வா புத் தி மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ் ச பாரத || 15- 20||
இதி = இதுவே
குஹ்யதமம் = இரகசிய ஞானம். மறை பொருள்
ஸாஸ்த்ரம் = சாஸ்திரம்
இதம் = இது
யுக்தம்மு = சொல்லப்பட்டது
மயா = என்னால்
அநக = பாவம் இல்லாதவனே
ஏதத் = இதுவே
புத்த்வா = அறிந்தவன்
புத்திமான் = அறிவுள்ளவன்
ஸியாத் = அவனால்
க்ருத க்ரித்யஸ் = அவனால் செய்யத்தக்கது செய்வோன்
ச = மேலும்
பாரத = பாரத குலத்தவனே
குற்றம் அற்றவனே, இவாறாக இரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரத குலத்தவனே , இதை உணர்ந்தவன் புத்திமானாவான். அவனே செய்யத் தகுந்ததை செய்வான்.
இந்த அத்த்யாயத்தின் கடைசி ஸ்லோகம்.
புருஷோத்தமன் என்பதை அறிந்து கொண்டவன் என்ன செய்வான் ? இதை அறிந்து கொள்வதால் என்ன பயன் ? இதை ஏன் வேலை மெனக்கெட்டு அறிந்து கொள்ள வேண்டும் ?
இரண்டு நன்மைகளை சொல்கிறது கீதை. சொல்லப் போனால் இரண்டும் ஒன்றுதான்.
அது என்ன இரண்டு நன்மைகள் ? பலன்கள் ?
ஒன்று, குற்றம் அல்லது பாவம் மறையும். பாவம் என்பது என்ன ? செய்யக் கூடாததை செய்து விட்டு அதன் விளைவுகளால் துன்பப்படுவது. தவறான ஒன்றை செய்து விட்டு அதன் விளைவுகளால் வருந்துவது.
இதை எப்படி மாற்றுவது ? பாவமும் தவறும் செய்யாமல் இருப்பது எப்படி ?
அதைத்தான் இரண்டாவது பலன் என்று சொல்கிறது கீதை..."இதை அறிந்தவன் செய்யத் தக்கதை செய்வான் "
எது செய்யக் கூடியதோ , அதை மட்டும் தான் செய்ய வேண்டும். செய்யக் கூடாததை செய்யக் கூடாது.
செய்ய முடியும் என்பதற்காக எல்லாவற்றையும் செய்து விடக் கூடாது. கொலை செய்ய முடியும் என்பதற்காக செய்து விடக் கூடாது.
எது செய்யத் தகுந்ததோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.
இந்த அத்தயாத்தில் சொல்லப் பட்டதை அறிந்தவன், எது செய்யக் கூடியது , எது செய்யக் கூடாதது என்று அறிவான் என்கிறது கீதை.
பாவம் இல்லாத, குற்றம் ஏதும் இல்லாத வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது கீதை.
மீண்டும் ஒரு முறை இந்த அத்தியாயத்தை படித்துப் பாருங்கள்.
அந்த வழி உங்களுக்குத் புலப்படலாம்.
புலப்படும் என்ற நம்பிக்கையோடு...
(மேலும் படிக்க
http://bhagavatgita.blogspot.in/2016/06/1520.html
)
No comments:
Post a Comment