Tuesday, May 19, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 3

अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை. 

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....

நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.

மேலும் சிந்திப்போம்.

=============================== பாகம் 2 ===========================================

ஸுசிர் = தூய்மையுடன்

தூய்மை என்பதை அகத்திற்கும் புறத்திற்கும் சேர்த்துப் பார்க்கலாம். 

புறத் தூய்மை எளிதாக விளங்கும். தன் உடலையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீடு எப்படி இருக்கிறது ? நம் மேஜை, நம் சமையல் அறை , படுக்கை அறை , நம் உடை  என்று ஒவ்வொன்றிலும் தூய்மையை  கடைப் பிடிப்பது பக்தி. 

கோவிலில் குப்பை போடுகிறோம். வேலை செய்யும் மேசையைப் பார்த்தால் புத்தகங்களும்,  காகிதங்களும், wire களும் அடைந்து கிடக்கிறது. 

நம் வீடு, அலுவலகம், நம் தெரு , நம் ஊர் என்று எதிலும் தூய்மை கிடையாது. குப்பை குளங்களுக்கு நடுவில்  வாழ்கிறோம். இது அல்ல பக்தி. 

நம் வீட்டு குப்பையை தெருவில் கொண்டு கொட்டிவிட்டு வீடு தூய்மையாகி விட்டது என்று  நினைக்கிறோம்.  தெரு அசுத்தமாகி விட்டது தெரிவதில்லை. 

தூய்மை பக்தியின் அடிப்படை. 

இன்று முதல் நம்மையும், நம் சுற்றுப் புற சூழலையும் தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். அதுதான் பக்தி. 

மனம் சுத்தமாக இருப்பது அகத் தூய்மை. 

உலகில் உள்ள அனைத்து அற நூல்களையும் தொகுத்து நாலே வார்த்தையில் சொன்னார் திருவள்ளுவர். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

எல்லா அறத்திற்கும் அடிப்படை மனதில் மாசு இல்லாமல் இருப்பது. குற்றம் இல்லாமல் இருப்பது. 

மாற்றிச் சொல்லவதானால், அனைத்து பாவங்களுக்கும் காரணம் குற்றமுள்ள மனம். 

மனம் தூய்மையாக இருந்தால் குற்றம் எப்படி  வரும் ?

உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தால் அதுவே பக்தி. 

வீட்டையும், மனதையும் சுத்தப் படுத்திப் பாருங்கள்....சுகம் தெரியும். 

பக்தியின் மணம் கமழும். 

மேலும் சிந்திப்போம் 

======================= பாகம் 3 ==================================================

தக்ஷ = திறமையுடன்

தக்ஷ என்பதற்கு திறமை, உறுதியுடன் (fitness ), புத்திசாலித்தனம் என்று பல அர்த்தங்கள் சொல்லலாம். எல்லாவற்றையும் விட சிறந்த அர்த்தம் ஆர்வத்துடன் கூடிய சுறு சுறுப்பு. Alert என்று சொல்லுவதைப் போல. எந்த நேரத்திலும் தயாராக,  அறிவு கூர்மையுடன், உடலில் ஒரு சுறு சுறுப்புடன் இருத்தல். 

பக்தன் என்றால் ஏதோ சோம்பேறித்தனமாக, பஜனை பாடிக் கொண்டு, பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டு இந்த சமுதாயத்திற்கு ஒரு பாரமாய் இருப்பவன் அல்ல.

பக்தன் என்பவன் புத்திசாலியாக இருக்க வேண்டும். சுறு சுறுப்பாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும்.

 நான் மூன்று வேளை கோவிலுக்குப் போகிறேன், இரண்டு தரம் குளிக்கிறேன், நாள் கிழமைகளில்  விரதம் இருக்கிறேன் என்றால் அது அல்ல பக்தி.

திறமை, வலிமை, தூய்மை...என்று பக்தனின் இலக்கணத்தை கண்ணன் பட்டியல் இடுகிறான்.

அது இன்னும் வரும் ....

Monday, May 18, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 2

अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை. 

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....

நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.

மேலும் சிந்திப்போம்.

=============================== பாகம் 2 ===========================================

ஸுசிர் = தூய்மையுடன்

தூய்மை என்பதை அகத்திற்கும் புறத்திற்கும் சேர்த்துப் பார்க்கலாம். 

புறத் தூய்மை எளிதாக விளங்கும். தன் உடலையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நம் வீடு எப்படி இருக்கிறது ? நம் மேஜை, நம் சமையல் அறை , படுக்கை அறை , நம் உடை  என்று ஒவ்வொன்றிலும் தூய்மையை  கடைப் பிடிப்பது பக்தி. 

கோவிலில் குப்பை போடுகிறோம். வேலை செய்யும் மேசையைப் பார்த்தால் புத்தகங்களும்,  காகிதங்களும், wire களும் அடைந்து கிடக்கிறது. 

நம் வீடு, அலுவலகம், நம் தெரு , நம் ஊர் என்று எதிலும் தூய்மை கிடையாது. குப்பை குளங்களுக்கு நடுவில்  வாழ்கிறோம். இது அல்ல பக்தி. 

நம் வீட்டு குப்பையை தெருவில் கொண்டு கொட்டிவிட்டு வீடு தூய்மையாகி விட்டது என்று  நினைக்கிறோம்.  தெரு அசுத்தமாகி விட்டது தெரிவதில்லை. 

தூய்மை பக்தியின் அடிப்படை. 

இன்று முதல் நம்மையும், நம் சுற்றுப் புற சூழலையும் தூய்மையாக வைத்திருக்க முயல்வோம். அதுதான் பக்தி. 

மனம் சுத்தமாக இருப்பது அகத் தூய்மை. 

உலகில் உள்ள அனைத்து அற நூல்களையும் தொகுத்து நாலே வார்த்தையில் சொன்னார் திருவள்ளுவர். 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

எல்லா அறத்திற்கும் அடிப்படை மனதில் மாசு இல்லாமல் இருப்பது. குற்றம் இல்லாமல் இருப்பது. 

மாற்றிச் சொல்லவதானால், அனைத்து பாவங்களுக்கும் காரணம் குற்றமுள்ள மனம். 

மனம் தூய்மையாக இருந்தால் குற்றம் எப்படி  வரும் ?

உள்ளும் புறமும் தூய்மையாக இருந்தால் அதுவே பக்தி. 

வீட்டையும், மனதையும் சுத்தப் படுத்திப் பாருங்கள்....சுகம் தெரியும். 

பக்தியின் மணம் கமழும். 

மேலும் சிந்திப்போம் 

Sunday, May 17, 2015

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 1

கீதை - 12.16 - இப்படித்தான் வாழ வேண்டும் - பாகம் 1 

अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः ।
सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १६॥

அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||

அநபேக்ஷ: = எதையும் சார்ந்து இராமல் , சுதந்திரமாக 

ஸுசிர் = தூய்மையுடன்

தக்ஷ = திறமையுடன்

உதாஸீநோ =  பற்றுதல் அற்று

க³தவ்யத²: = | கவலை இன்றி, நடுக்கம் இன்றி 

ஸர்வாரம்ப = சர்வ + ஆரம்ப = அனைத்து தொடக்கங்களையும்

பரித்யாகீ = தியாகம் செய்து

யோ = அவன்

 மத்ப⁴க்த = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: = பிரியமானவன்

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக , தூய்மை உடையவனாய்,  திறமையுடன் , பற்றுதல் இன்றி , கவலை இன்றி  எல்லா ஆரம்பங்களையும் துறந்து என்னிடம் பக்தி செய்பவன் எவனோ, அவனே எனக்கு இனியவன் 

எதையும் சார்ந்து இராமால், சுதந்திரமாக: நாம் எதை சார்ந்து இருக்கிறோமோ அதனால் நமக்கு  துன்பம் வரும். எதையெல்லாம் விட்டு நீங்கி இருக்கிறோமோ, அவற்றால் துன்பம் வராது.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

எதை எதை விட்டு ஒருவன்  நீங்கி நிற்கிறானோ, அவற்றின் மூலம் அவனுக்கு துன்பம்  வராது.

எல்லாவற்றையும் விட்டு நீங்கி விட்டால், ஒரு துன்பமும் இல்லை.

எதற்கு இரண்டு தடவை யாதனின், யாதனின் என்று சொல்ல வேண்டும். அது போல  எதற்கு இரண்டு தடவை அதனின் அதனின் என்று சொல்ல வேண்டும் ? இருப்பதோ ஏழு வார்த்தை . அதில் இரண்டு வார்த்தையை ஏன் இரட்டிப்பாக்க வேண்டும்.

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சுருக்கமாக சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே ?

எல்லாவற்றையும் ஒருங்கே விடுவது சாலச் சிறந்தது. அப்படி விட முடியாது என்பதை  வள்ளுவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் , பற்றை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை என்பதால் யாதனின் யாதனின் என்று  கொஞ்சம் கொஞ்சமாக விடுவதைப் பற்றிச்  சொன்னார்.

அது மட்டும் அல்ல, எவ்வளவுக்கு எவ்வளவு விடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு துன்பம் இல்லை.

அதையே கீதையும் சொல்கிறது.

சார்பு இன்றி, பற்று இன்றி, சுதந்திரமாக....

நமக்குத்தான் எவ்வளவு பற்று....

மனைவி /கணவன் மேல் பற்று, பிள்ளைகள், வீடு வாசல் என்று சொத்துகளின் மேல் பற்று,  நண்பர்கள், உறவுகள் என்று பற்று, மொழிப் பற்று, தேசப் பற்று, ஜாதி, மதம் என்று ஆயிரம் பற்றுகள்.

ஒவ்வொரு சார்பும், பற்றும் உங்களை சிதைக்கிறது என்பதை உணருங்கள்.

தேசப் பற்று உங்களை வேற்று தேசந்த்தவன் மேல் வெறுப்பும் பயமும் கொள்ள  வைக்கிறது.

ஜாதி, மதப் பற்று மற்ற மதத்ததை கீழாக நினைக்க வைக்கிறது.  மற்ற மதத்தை  பின் பற்றுபவர்களை கீழானவர்களாக நினைக்க வைக்கிறது.

என் வீடு, என் சொத்து என்று பொருளின் மேல் கொண்ட பற்று அதை இழந்து விடுவோமோ என்ற  பயத்தைத் தருகிறது.

ஆழமாக யோசித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு பற்றும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் துன்பத்தையே தருகிறது.

அது எவ்வளவு உயர்ந்த பற்றாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

புனிதமானது, உயர்வானது என்று அதற்கு எத்தனை முத்திரை வேண்டுமானாலும்  குத்திக் கொள்ளுங்கள்.  பற்று  பற்றுதான். அதனால் துன்பம் வரும்.

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

என்றார் திருமூலர்.

நீங்கள் பற்றை  விடுங்கள். துன்பம் உங்களை  விடும்.

மேலும் சிந்திப்போம்.

Saturday, May 16, 2015

கீதை - 12.15 - ஊருடன் ஒத்து வாழ்

கீதை - 12.15 - ஊருடன் ஒத்து வாழ் 

यस्मान्नोद्विजते लोको लोकान्नोद्विजते च यः ।
हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः ॥१२- १५॥

யஸ்மாந்நோத்³விஜதே லோகோ லோகாந்நோத்³விஜதே ச ய: |
ஹர்ஷாமர்ஷப⁴யோத்³வேகை³ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: || 12- 15||

யஸ்மாந் = எதிலிருந்தும்

ந = இல்லையோ

உத்விஜதே = சலனம்

லோகோ = மக்கள்

லோகாந் = உலகிலிருந்து , மக்களிடம் இருந்து

ந = இல்லையோ

உட்விஜதே = சலனத்தை தருவது

ச =  மேலும்

ய: = அவன்

ஹர்ஷா = களியாலும் , அதீத இன்பத்தாலும்

அமர்ஷ = கோபத்தாலும்

பயோ = பயத்தாலும்

உத்வேகை = நடுக்கத்தாலும் 

முக்தோ = விடுபட்டு இருக்கிறானோ

ய: = அவன்

ஸ = அவன்

ச = மேலும்

மே = எனக்கு

ப்ரிய:  = பிரியமானவன்

எவனை உலகம் வெறுப்பது இல்லையோ ; 

உலகை எவன் வெறுப்பது இல்லையோ 

களியாலும், பயத்தாலும் ,  சினத்தாலும் வரும் கொதிப்புகளில் இருந்து  எவன் விடு பட்டவனோ அவனே எனக்கு இனியவன் 

தனக்கு இனியவனின் குணங்களை மேலும் கண்ணன் கூறுகிறான்.

"எவனை உலகம் வெறுப்பது இல்லையோ, எவனை உலகம் வெறுப்பது இல்லையோ...."

இங்கே உலகம் என்பதை வெறும் மனிதர்கள் என்று மட்டும் கொள்ளாமல் அதில் உள்ள அனைத்து உயிரினங்களையும் மற்ற உயிர் அற்ற பொருள்களையும் சேர்த்து பொருள் கொள்ளலாம். Environment என்று ஆங்கிலத்தில் கூறுவது போல.

சுற்றுப் புற சூழலோடு ஒத்துப் போபவன், மற்றவர்களுக்கு இதம் செய்பவன், எல்லாம் தனக்கு வேண்டும் என்று மற்றவர்களுக்கு இல்லாமல் எடுத்துக் கொள்ளாதவன்...இவனை உலகம் வெறுக்காது.

அதே போல், இவன் உலகை வெறுக்க மாட்டான். எல்லோர் மேலும் அன்பும் கருணையும்  கொண்டவன். இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்ற பாகு பாடு இல்லை.  மழை போல எல்லோருக்கும் நல்லது செய்பவன்.

இந்த உலகோடு வெறுப்பு, உலகம் வெறுப்பது ஏன் நிகழ்கிறது ?

அளவுக்கு அதிகமான இன்பத்தில் முழுகுவது, பயம், கோபம் இவற்றால் உலகோடு  உரசல் ஏற்படுகிறது.

பேராசையால் பயம் வரும். பயத்தில் இருந்து கோபம் வரும். இதனால் உலகோடு  வேறுபாடு ஏற்படுகிறது.

இதை அறிந்து, ஆசையும், கோபமும், பயமும் விட்டு வாழ்பவன் எனக்கு  இனிமையானவன்  என்கிறான் கண்ணன்.

சிந்தித்துப் பார்ப்போம்...இத்தனயும் வைத்துக் கொண்டு இறைவன் நம் மேல் அன்பு  செலுத்துவது இல்லை என்று வருந்துவதில் என்ன பிரயோஜனம் ?

Wednesday, May 13, 2015

கீதை - 12.14 - நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை

संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः ।
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः ॥१२- १४॥

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ³ யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||

ஸந்துஷ்ட:  ஸததம் = எப்போதும் மகிழ்வுடன்

யோகீ³ = யோகி

யதாத்மா =  தன்னடக்கத்துடன்

த்ருட நிஸ்சய:  = திட நிச்சயத்துடன்

மய் = என்னில்

அர்பித = அர்ப்பணம் செய்து

மநோ = மனம்

புத்திர் = புத்தி

யோ = அவன்

மத்பக்த: = என் பக்தன்

ஸ = அவன்

மே = எனக்கு

ப்ரிய: - பிரியமானவன்

எப்போதும் மகிழ்வுடன் , தன்னடக்கத்துடன் , திட நிச்சயமாய் , என்னில் மனத்தையும் புத்தியையும் அர்பணம்  செய்து என் பக்தனாகிய யோகி எனக்கு பிரியமானவன்.

இறைவனை நம்புபவர்கள் கூட ஏன் இறைவனை நம்புகிறார்கள் ? இறைவனால்  தங்களுக்கு ஏதோ பலன் கிடைக்கும் என்று நம்புவதால் அவர்கள் இறைவனை நம்புகிறார்கள். இந்த பிறவியில் அல்லது அடுத்த பிறவியில்  அல்லது சொர்க்கத்தில் எங்கோ இறைவன் நமக்கு ஏதாவது செய்வான்  என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. தங்களுக்கு அவன் இன்பத்தைத் தருவான், துன்பங்களை போக்குவான், ஆபத்தில் இருந்து தங்களையும்  தங்களை சார்ந்தவர்களையும் காப்பாற்றுவான் என்ற எதிர் பார்ப்பு  இருக்கிறது.

தங்கள் குறைகளை அவன் இட்டு நிரப்புவான் என்ற நினைக்கிறார்கள்.

அதற்காக இறைவனை போற்றுகிறார்கள், காணிக்கை செலுத்துகிறார்கள், முடியை  தருகிறார்கள், இன்னும் என்னனமோ செய்கிறார்கள்.

இறைவனை எப்படியாவது அடைந்து விட்டால் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் எப்படி இறைவனை அடைவது ? இறைவனுக்கு பிரியமானவர்களாய் ஆவது எப்படி ?

முதலில், எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.  எப்போதும் மகிழ்ச்சியுடன்  எப்படி இருப்பது ? நமக்கு ஆயிரம் தேவைகள் இருக்கிறது. ஒன்று தீர்ந்தால்  அடுத்தது முளைக்கிறது. என்று நம் ஆசைகள் எல்லாம் நிறைவேறி  நாம் நிரந்தர சந்தோஷமாக இருப்பது ?

ஆசைகள் நிறைவேறுவதால் சந்தோஷம் வருவது இல்லை.

ஆசையே இல்லாத போதுதான் சந்தோஷம் வருகிறது.

எனவே, இரண்டாவது, தன்னடக்கத்துடன், அதாவது புலன் அடக்கத்துடன் இருக்க  வேண்டும் என்கிறான். ஆசையின் பின்னால் ஓடுபவனுக்கு ஒரு காலும்  நிம்மதியும் சந்தோஷமும் இருக்காது.

மூன்றாவது, இறைவன் மேல் திடமான நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது , இன்று மிகவும் கடினமான காரியம். அறிவியல் வளர வளர இறைவன் மேல்  சந்தேகம் வளர்ந்து கொண்டே போகிறது. மனம் நம்பினாலும் புத்தி சந்தேகப்  படுகிறது.

முதலில் நம்பிக்கை வர வேண்டும். பின் நம்புவது வரும்.

விதை விதைத்த பின், நம்புங்கள் செடி முளைக்கும் என்று.

சந்தேகப் பட்டு தோண்டி தோண்டி பார்த்துக் கொண்டிருந்தால் முளைக்காது.

நம்புங்கள்...என்றேனும் ஒரு விதை முளை விடலாம்.

நம்புவதைத் தவிர வேறு வழி இருப்பதாகவும் தெரியவில்லை.

Saturday, May 9, 2015

கீதை - 12.13 - இனிமையான வாழ்க்கைக்கு கீதை காட்டும் வழி - பாகம் 2

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।
निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥

அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||

அத்வேஷ்டா = அ + துவேஷ்ட = வெறுப்பு இல்லாமல்

ஸர்வ பூதா நாம் = அனைத்து உயிர்களிடத்தும்

மைத்ர: = நட்புடன்

கருண = கருணையுடன்

ஏவ = நிச்சயமாக

ச = மேலும்

நிர்மமோ =  நான் எனது என்று எண்ணாமல்

நிரஹங்கார: = நிர் + அஹங்கார = ஆணவம் இல்லாமல் (அஹம் = நான், எனது. கர் = செய்வது, செயல். அஹம் + கார = நான் செய்தேன், என்னால் நடக்கிறது என்ற  எண்ணம்.அகம்பாவம்)

ஸமது³:க²ஸுக²:= சம + துக்க + சுக =  துக்கத்தையும்,சுகத்தையும் சமமாக எண்ணி

 க்ஷமீ = பொறுமையுடன் , பொறுப்பவன்

எந்த உயிரையும் பகைக்காமல், அவைகளிடம் நட்பும், கருணையும் கொண்டு , நான் எனது என்ற எண்ணம் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்து,  பொறுமையுடன் இருப்பவன் 

மிக மிக அழகான சுலோகம்.

ஆத்ம யோகம் அறிந்து என்ன பலன். எல்லாவற்றிலும் ஆத்மா இருக்கிறது. ஆத்மாவுக்குள்  எல்லாம் இருக்கிறது என்று அறிந்து என்ன செய்வது. அந்த அறிவு நமக்கு  என்ன செய்யும். சும்மா ஏதோ தெரிந்து கொண்டோம் என்று போய் விடுவதா.

இல்லை.

ஆத்ம யோகத்தின் செயல்பாட்டை இங்கே விளக்குகிறார்.

எல்லாவற்றிலும் இருப்பது ஆத்மா, ஆத்மாவில் எல்லாம் இருக்கிறது என்று   ஏற்றுக் கொண்டால், ஒன்றிலிருந்து மற்றதற்கு பேதம் இல்லை.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால், உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

அப்படி என்றால் வெறுப்பும் பகையும் எப்படி வரும்.  நீங்களே உங்கள் மேல் பகை   கொள்ள முடியுமா ? உங்கள் உடலின் ஒரு பாகத்தை நீங்கள் வெறுத்து ஒதுக்க முடியுமா ? எல்லாம் ஒரு ஆத்மாவின் பகுதி என்று ஆனால் , ஒரு பெரிய உருவத்தின் ஔர் பகுதி நீங்கள், இன்னொரு பகுதி நான். நமக்குள் என்ன சண்டை ? சச்சரவு ?

ஆத்ம யோகத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் இந்த உலகம் அனைத்தும் ஒன்றே  என்ற எண்ணம் வரும்.

பகை, வெறுப்பு , சண்டை, பூசல் எல்லாம் மறைந்து போகும்.

எல்லா உயிர்களிடத்தும் நட்பும் கருணையும்  பிறக்கும்.மற்றவர்கள் உங்களில் இருந்து வேறு அல்ல என்று ஆன பின் அவரோடு நீங்கள் எப்படி சண்டை போட முடியும்.

உலகில் வேறு எந்த நூலாவது இப்படி சொல்லி இருக்கிறதா ? எங்கள் கடவுளை பின் பற்றுபவர்கள், எங்கள் மத நூலை பின் பற்றுபவர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று தான் அனைத்து மதமும் போதிக்கின்றன.

கீதை, கடவுள், மதம், நூல், என்ற  எல்லாம் கடந்து செல்கிறது.

எல்லா உயிர்களையும் என்று சொல்லும் போது மனிதர்கள் மட்டும் அல்ல புல் , பூண்டு, விலங்குகள் என்று அனைத்தையும் சேர்த்துச் சொல்கிறது.

அனைத்து உயிர்களிடத்தும் நட்பும் , கருணையும்.

அந்த உயிர் எந்த மதத்தை சார்தவனாக இருந்தாலும் அவன் மேலும் நட்பும் கருணையும் கொள் என்கிறது கீதை...

இவ்வளவு பரந்த மனப்பான்மை வேறு எந்த மதத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த மத நூலும் சொல்வதாகத் தெரியவில்லை.

உலகில் உள்ள அனைத்து உயிர்கள் மேலும் நட்பும் கருணையும் கொள் என்ற இந்தத் தத்துவம் நம் தமிழ் இலக்கியத்தில் மிக மிக பெரிதாக பரவிக் கிடக்கிறது....

அவற்றை அடுத்த பகுதியில் சிந்திப்போம்....

================ பாகம் 2 =================================================

இந்து மதம் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பமாக இருக்க வேண்டும் என்று  நினைத்தது. இந்த மதக் கொள்கைகளை பின் பற்றுபவர்கள் மட்டும் அல்ல, எல்லோரும்  சுகமாக இருக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டு இருந்தது. 

மேலே, கீதையில் எல்லா உயிர்களிடத்தும் நட்பும் கருணையும் என்று சொல்வதை பார்த்தோம். 

இதை கீதை மட்டும்தான் சொல்கிறதா அல்லது மற்ற இந்து மத நூல்களும் கூறுகின்றனவா ?

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.

இந்த உலகம் அனைத்துமே இறைவனின் வடிவம் என்று போற்றியது கம்ப இராமாயணம். நீங்கள் இந்த மதத்தை பின் பற்றினாலும் சரி, பின் பற்றாவிட்டாலும் சரி  நீங்கள் இறைவனின் அம்சம் என்று ஏற்றுக் கொண்டது இந்து மதம். 

காகம் உறவு கலந்து உண்ணக்
கண்டீர்; அகண்ட ஆகார சிவ
போகம் எனும் பேரின்ப வெள்ளம்
பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குது, ஐயோ!
இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச்
சேர வாரும் ஜகத்தீரே!

பேரின்ப வெள்ளம் பொங்கி ததும்பி கிடக்கிறது, எல்லோரும் பருகலாம்....சேர வாரும் ஜகத்தீரே என்று உலகில் உள்ள எல்லோரையும்  அழைக்கிறார் தாயுமானவர். சிவ போகம் ஏக உருவாய் கிடக்குது என்கிறார். எல்லாம் ஒன்றாக இருக்கிறது. வேறுபாடு ஏதும் இல்லை என்கிறார் மிகப் பெரிய ஞானியான தாயுமானவர். 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

ஒன்றே குலம் என்று ஓதினார் திருமூலர். 

ஞானிகள் எல்லோரும் அனைத்து உயிர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். 

அந்த ஒன்றின் பெயர் - ஆத்மா - இறைவன், என்று   எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

ஒன்றுதான் 

Thursday, May 7, 2015

கீதை - 12.13 - இனிமையான வாழ்க்கைக்கு கீதை காட்டும் வழி - பாகம் 1