பகவத் கீதை - 2.47 - கடமையைச் செய், பலனை எதிர் பார்க்காதே - பாகம் 4
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि॥४७॥
கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||
கர்மணி = வேலை செய்வதில்
ஏவ = நிச்சயமாக
அதி⁴காரஸ் = அதிகாரம்
தே = உன்
மா = இல்லை
ப²லேஷு = 'பல்' என்றால் பழம். பலேஷு, பலன்.
கதா³சந| = என்றும் , எப்போதும்
மா = இல்லை
கர்ம = வேலையின்
ப²லஹேதுர் = வேலையின் பலன்களில்
பூ⁴ர் = கொள்ளாதே
மா = இல்லை
தே = உன்
ஸங்கோ = சங்கம், தொடர்பு, எதிர்பார்ப்பு
அஸ்த் = இருக்க வேண்டும்
அகர்மணி = கர்மாணி என்றால் வேலை செய்வது. அ + கர்மாணி என்றால் வேலை செய்யாமல் இருப்பது.
கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது.
(முதல் மூன்று பாகங்களும் கீழே இருக்கிறது. Scroll down )
ஆயிரம்தான் சொன்னாலும் நாம் கேட்க மாட்டோம். பலன் இல்லாமல் காரியமா...நடக்கவே நடக்காது என்று அடம் பிடிப்போம். அளவான பலன், கொஞ்சம் பலன், தேவையான அளவு பலன் என்று ஏதாவது ஒன்று வேண்டும்.
ஒண்ணுமே எதிர்பார்க்காமல் ஒன்றைச் செய்வது என்பது முடியவே முடியாது என்று நாம் நினைப்போம்.
ஆனால்,
நாம் நிதமும் அதைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா.
வீட்டுக்கு, குடும்பத்துக்கு செய்வதை சொல்லவில்லை. நாம் நம் சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பலன் எதிர்பார்க்காமல் காரியம் செய்கிறோம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
நாம் வருமானவரி காட்டுகிறோமே !
அதற்கு பலன் எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நான் இவ்வளவு வரி கட்டினேன் , எனக்கு இவ்வளவு பலன் வேண்டும் என்று யாரும் கோர்ட்டுக்குப் போக முடியாது.
பலன் கருதாமல் கட்ட வேண்டியதுதான்.
கீதை சொன்னால் அதோடு நாம் வாதம் செய்வோம்.
அரசாங்கம் சட்டம் போட்டு பிடுங்கிக் கொண்டு போனால், வாயை மூடிக் கொண்டு இருப்போம்.
தனிமனிதன் மாற மறுப்பதால், வருமான வரி போன்றவற்றை வலிந்து திணிக்க வேண்டி இருக்கிறது.
அது மட்டும் அல்ல, Corporate Social Responsibility (CSR) என்று கம்பெனி சட்டத்தில் ஒன்று இருக்கிறது. அதன் படி ஓரளவுக்கு மேல் வருமானம் உள்ள நிறுவனங்கள் கண்டிப்பாக அந்த வருமானத்தில் ஒரு பகுதியை சமுதாய நன்மைக்கு செலவிட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது.
பள்ளிகள் கட்டுவது, மருத்துவ மனைகள் கட்டுவது, போன்றவற்றை அவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
கீதை மென்மையாக சொன்னதை, அரசாங்கம் சட்டம் போட்டுச் சொல்கிறது.
நம் நூல்கள் சொன்னவற்றை நாம் கேட்பது இல்லை.
"ஹா...அதெல்லாம் நடை முறைக்கு ஒவ்வாதவை " என்று தள்ளி வைத்து பழக்கப் பட்டுவிட்டோம்.
சட்டம் என்று வந்தால், வாய் மூடிச் செய்வோம்.
இன்று எவற்றோடெல்லாம் நீங்கள் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களோ நாளை அவை சட்டமாக வரும்.
அறம் என்பதை விட்டு விலகவே முடியாது.
நாளடைவில் அவை சட்டமாக வந்து நம்மை மிரட்டுகின்றன. இப்ப என்ன செய்வாய் என்று கேட்கின்றன.
பாகம் 4
பாகம் 3
https://bhagavatgita.blogspot.com/2019/07/247-3.html
பாகம் 2 :
பாகம் 1:
No comments:
Post a Comment