பகவத் கீதை - 1.39 பாவத்தில் இருந்து விலகாமல் இருப்பது சரியா ?
कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन॥३९॥
கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴ : பாபாத³ஸ்மாந்நிவர்திதும்|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் ப்ரபஸ்²யத்³பி⁴ர்ஜநார்த³ந ||1-39||
கதம் = எப்படி
ந = இல்லை
ஜ்ஞேயம் = அறிவுள்ளவர்கள்
அஸ்மாபி⁴ = நாம்
பாபாத் = பாவத்தில் இருந்து
அஸ்மாந் = இதில் இருந்து
நிவர்திதும் = நிறுத்தாமல், திரும்பி போகாமல், நிவர்த்தி செய்யாமல்
குலக்ஷய க்ரிதம் = குடும்பத்தை அழிக்கக் கூடிய
தோ³ஷம் = பாவத்தை
ப்ரபஸ்²யத்³பி⁴ர் = தெரிந்தவர்கள்
ஜநார்த³ந = ஜனார்தனா
ஜனார்தனா, குல நாசம் விளைவிக்கும் இந்த பெரிய பாவத்தை தெரிந்த பின்னும் நாம் இதை விட்டு விலகாமல் இருப்பதன் காரணம் என்ன.
நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கும். ஆனால், அதை நமக்குச் செய்ய மனம் இருக்காது. அதைச் செய்யாமல் இருக்க ஆயிரம் நியாயங்களை நாம் சொல்லுவோம்.
" ரொம்ப களைப்பாக இருக்கிறது. அப்புறம் செய்கிறேன். "
"என்ன செஞ்சு என்ன பலன்? இதை செய்றதுக்கு செய்யாமலேயே இருக்கலாம்."
" செஞ்சு ஒண்ணும் ஆகப் போவது இல்லை. எதற்கு வம்பா இதை செய்யணும்."
" செஞ்சா மட்டும் என்ன உடனே பலன் கிடைத்து விடவா போகிறது. படிச்சவன் எல்லாத்துக்கும் வேலை கிடைச்சுருச்சா ? நான் படிச்சு என்ன ஆகப் போகிறது."
இப்படி ஆயிரம் சாக்கு போக்கு சொல்லுவோம். எல்லாமே கேட்க சரியாக இருப்பது போலத்தான் தெரியும்.
களைப்போ, பலன் இருக்கிறதோ இல்லையோ, பிடிக்கிறதோ இல்லையோ , நாம் செய்ய வேண்டியவற்றை நாம் செய்தே ஆக வேண்டும்.
தனி மனித இன்ப துன்பங்களை தள்ளி வைத்து விட்டு, ஒரு சமுதாய நோக்கில், ஒரு நாட்டின், இந்த மனித குலத்தின் மேம்பாட்டுக்காக சிந்திக்கிறது கீதை.
மேலும் சிந்திப்போம்.
http://bhagavatgita.blogspot.com/2018/07/139.html
No comments:
Post a Comment