Saturday, April 11, 2015

கீதை - 12. 1 - இறைவனா ? ஆத்மாவா ?

கீதை - 12. 1 - இறைவனா ? ஆத்மாவா ?




அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே | 
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா: || 12- 1||



அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ஏவம் = அப்படியாக
ஸததயுக்தா யே = எப்போதும் அதில் இலயித்து இருப்பவர்கள் 
பக்தாஸ் = பக்தர்கள்
த்வாம் = உன்னை
பர்யுபாஸதே = வழிபடுபவர்கள்  |
யே சாப் = அவர்கள்
அக்ஷரம் = அழியாத , என்றும் நிலைத்து இருக்கும்
அவ்யக்தம்  =  வெளிப்படாத
தேஷாம் = அவர்களில்
கே = யார்
யோகவித்தமா: = யோகத்தில் மேம்பட்டவர் யார்

ஒரு புறம் ஆத்மா அழிவற்றது,  அது பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை அதை  அறிந்தவன் என்னை அடைகிறான் என்று கீதை கூறுகிறது.

இன்னொரு புறம்  விஸ்வ ரூப தரிசனம் என்று இறைவனின் அனைத்தும் தழுவிய ஒரு   உருவத்தைப் பற்றியும் கூறுகிறது.  இதை அறிவபவன் என்னை அடைகிறான் என்றும் கூறுகிறது.

படிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது  இயற்கை.

எந்த வழியில் போவது ?

வெளிப்பட்டு நிற்கும்  வடிவை (manifest  - விஸ்வரூபம்) வழி படுவதா ? அல்லது வெளிபாடாமல் இருக்கும் (unmanifest ) ஆத்மாவை அறிவதா ?

ஆத்மா புலனுக்கு புலப்படாது

வெளிப்பட்ட உருவமோ புலனுக்கு வெளிப் படும்

எந்த வழியில் போவது ?

எது சிறந்தது ?

இரண்டு வழி உண்டென்றால் எது சிறந்து வழி ?

இறைவன் புலன்களுக்கு புலப்படுவானா ?

இந்த குழப்பம் அர்ஜுனனுக்கு வருகிறது.

நமக்கும்தான்.

பக்தி யோகத்தில் கண்ணன் விளக்குகிறான்.

மேலும் சிந்திப்போம்.


No comments:

Post a Comment