பகவத் கீதை - அறிமுகம்
குருஷேத்ர போர்க் களம். பாண்டவர்கள் ஒரு புறம். கௌரவர்கள் மறு புறம். கடல் போல் படைகள் இரு புறமும். நியாயம் , அநியாயம் எந்த பக்கம் என்று உறுதியாகச் சொல்ல முடியாத ஒரு கட்டம். பிடித்ததோ, பிடிக்கவில்லையோ எல்லா அரசர்களும் ஏதோ ஒரு பக்கம் சேர்ந்து விட்டார்கள் இந்த யுத்தத்தில். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.
யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால், கண்ணன் அர்ஜுனனுக்கு கீதை உபதேசம் செய்கிறான். இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மகாபாரதத்தின் மணி மகுடமாய் விளங்குவது பகவத் கீதை.
இது எழுதப்பட்ட காலம் 400 BC . கிறிஸ்த்து பிறப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. எழுதப்பட்டது அப்போது என்றால், நடந்தது எப்போது ?
மகாபாரதத்தில்
100000 ஸ்லோகங்கள் உள்ளன. அதில் 700 ஸ்லோகங்கள் பகவத் கீதை. 18 அத்யாயங்கள்.
கிட்டத்தட்ட
2000 ஆண்டுகள் ஓடி விட்டது. கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறது கீதை...கலங்கரை விளக்கம் போல்.
அதில் என்ன தான் இருக்கிறது ? இன்றைய கால கட்டத்திற்கு அது உதவுமா ? நமக்கு வாழ்வில் ஒரு சிக்கல் வரும்போது கீதை நமக்கு வழி காட்டுமா ? எல்லா இனத்தவர்க்கும் அதன் வழிகாட்டுதல்கள் பொருந்துமா ?
தொடர்ந்து பார்ப்போம் ....
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteGood RS. Pl keep it up ...
ReplyDeleteI like your approach to explaining the Gita. There are no religious overtones; and you focus on the systematic and logical build-up of the Gita. Your effort is a boon for people like me who have not had the focus or discipline to read Gita.
ReplyDeleteClearly, the Gita is a gem in our cultural heritage.
Thanks for your effort. Wish you good luck and many readers for this blog.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
ReplyDeleteவேட்ப மொழிவதாம் சொல்
என்ற வள்ளுவர் வாக்குப்படி இன்னும் எழுத மாட்டாரா என்று நினைக்கும் வண்ணம் எழுதும் உங்கள் எழுத்து இந்த blog மூலம் பலரை அடைந்து வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
I have started from today reading this blog from the beginning and hope to get updated soon. I like the way you explain.
ReplyDelete