Tuesday, October 28, 2014

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து

கீதை - 11.20 - எங்கும் வியாபித்து 


द्यावापृथिव्योरिदमन्तरं हि व्याप्तं त्वयैकेन दिशश्च सर्वाः ।
दृष्ट्वाद्भुतं रूपमुग्रं तवेदं लोकत्रयं प्रव्यथितं महात्मन् ॥११- २०॥

த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் ||

த்யாவா ப்ருதிவ்யோ = தியா என்றால்  தீபம்.ஒளி.  ஒளி வீசும் விண்ணுக்கும்; ப்ரித்வி என்றால் நிலம். பூமி. ஆகாயத்திற்கும் பூமிக்கும்

இதம் = இந்த 

அந்தரம் = உள்ளே 

ஹி = நிச்சயமாக

வ்யாப்தம் = வியாபித்து , நிறைந்து

த்வயை = உன்னால்

ஏகேன = ஒருவனாய்

திஸ = திசைகளிலும்

ச = மேலும்

ஸர்வா:  = அனைத்து

த்ருஷ்ட = காணும் 

ஆத்புதம்  = அற்புதம்

ரூபம் = வடிவம்

உக்ரம்  = உக்கிரமான

லோகத்ரயம்= மூன்று உலகங்களிலும்

ப்ரவ்யதி²தம் = நடுங்கும்படி

மஹாத்மந் = உயர்ந்த

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஒன்றாய் நிறைந்த உன் உக்கிரமான வடிவைப் பார்த்து மூன்று உலகங்களும் நடுங்குகின்றன 

நீங்கள் இருக்கும் அறை . அதையும் மற்ற அறைகளையும் சேர்த்து உங்கள் வீடு. உங்கள் வீட்டையும், மற்ற வீடுகளையும் சேர்த்து உங்கள் apartment . உங்கள் அபர்த்மென்ட் -டையும் மற்றவற்றையும் சேர்த்து உங்கள் தெரு. உங்கள் தெரு போல  பல தெருக்கள் சேர்த்த உங்கள் இடம் அல்லது ஊர். உங்கள் ஊரோடு பல  ஊர்கள் சேர்ந்து உங்கள் நாடு.

உங்கள் நாட்டைப் போல பல நாடுகள் சேர்ந்து இந்த பூமி. உங்கள் பூமியைப்   போல  பல கிரகங்கள் சேர்ந்து இந்த சூரிய குடும்பம். உங்கள் சூரிய குடும்பம் போல  சூரிய குடும்பங்கள் சேர்ந்து உங்கள் பால் வெளி என்று இந்த உலகம  விரிந்து கொண்டே போகிறது.

மாடியில் இருந்து பார்த்து பார்த்தால் அறைகள் தெரியாது...வீடுகள் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால் வீடுகள் தெரியாது, நகரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் நகரம் தெரியாது நாடு தெரியும்.

இப்படி நம் பார்வை விசாலமாக விசாலமாக மேடு பள்ளங்கள், ஏற்றத் தாழ்வுகள்  மறைந்து அனைத்தும் சமம் என்று தோன்றும்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உள்ள அனைத்தும் ஒரு  சக்தியின் வெளிப்பாடு  என்று பார்க்கும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் அது நிறைந்து  நிற்கிறது. எங்கும் வியாபித்து நிற்கிறது.

மாமன், மச்சான், குரு, தாத்தா, என்று பிரித்துப் பார்த்த அர்ஜுனன் இப்போது  சேர்த்துப்  பார்க்கிறான். எங்கும் நிறைந்து நிற்கும் ஒன்றைப் பார்க்கும் போது அவனுக்கு  நடுக்கம் வருகிறது. இதுவரை கண்டிராத ஒன்று.

அனைத்தையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வரூப தரிசனம்.

சூரியனையும், சந்திரனையும், கிரகங்களையும், பால்வெளியையும் ஒன்றாக  சேர்த்து பாருங்கள்.

எவ்வளவு பெரிய பிரமாண்டம். அதை நினைக்கும் போது அர்ஜுனனக்கு நடுக்கம் வருக்கிறது .

இதுவரை அப்படி அவன் பார்த்தது இல்லை.

தான் பெரிய வில்லாளி, அழகன் என்ற ஆணவம் எல்லாம் அவனை விட்டுப் போகிறது. நடுங்குகிறான். இதன் முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற பயம் வருகிறது.

அவன் மட்டும் என்ன ?  நாமும்தான்.

உலகை பிரித்து பிரித்து பார்த்தே நாம் பழகி விட்டோம். சேர்த்துப் பார்க்க பழகுவோம்.

சேரச் சேர அதன் பிரமாண்டம் தெரியும். நம் ஆணவம் விலகும்.  பணிவு வரும். எல்லாம் ஒன்றுதான் என்ற ஒற்றுமை உணர்வு வளரும்.

உள்ளே போகப் போக ஆத்மா என்ற ஒன்றை அடைவோம்.

அதை உணர்வது கடினம் ஏன் என்றால் அதை பார்க்க முடியாது.

உள்ளே செல்லும் பார்வையை வெளியே செலுத்தினால் உலகம் விரிந்து கொண்டே போகும்.

அந்த பிரமாண்டம்தான் விஸ்வரூபம்.

நம் பார்வை விரியட்டும்.

விஸ்வரூபம் நம் முன்னே விரிந்து கிடக்கிறது. நாம் தான் நம் பார்வையை குறுக்கிக் கொண்டு  அதை உணர்வதை தவிர்க்கிறோம்.

நீங்கள் நினைத்தால் இன்றே அந்த விஸ்வரூப தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்.

கிடைக்கட்டும்.


கீதை - 11.19 - சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு

கீதை - 11.19 -  சூரியனையும் சந்திரனையும் கண்களாகக் கொண்டு   


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

----------------------------------/ சூரியனையும் சந்திரனையும் கண்களாக/---------------------

சூரியனையும் சந்திரனையும் கண்களாக என்றால் ஏதோ நிஜமாகவே ஒரு கண்ணு சூரியன் போல  பெரிதாக, நெருப்பாக இருக்கும், இன்னொரு கண்ணு    சந்திரனைப்போல  சின்னதாக குளிர்ச்சியாக இருக்கும் என்று அர்த்தம் அல்ல. அப்படி இருந்தால்  பார்க்க சகிக்குமா ?

அதன் அர்த்தம் என்ன ?

இரவு பகல் என்று அனைத்து நேரங்களிலும் சர்வ சாட்சியாக இருப்பவன் அவன். யாரும் பார்க்கவில்லை என்று தவறு செய்யக் கூடாது. சூரியனோ, சந்திரனோ சாட்சியாக இருக்கும் வரை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கக் கூடாது.

கோவலன் வெட்டுப் பட்டான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்று என்று  உலகுக்கு எப்படி அறிவிப்பது ?

 கண்ணகி கேட்கிறாள் , யாரிடம் தெரியுமா ?

காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-

என்று கதிரவனிடம் கேட்கிறாள். அவன் தான் எல்லாவற்றிற்கும் சாட்சி. 

உங்கள் வாழ்கையை நீங்கள் ஒரு பார்வையாளனாக நின்று வேடிக்கை பாருங்கள். சுவாரசியமாக இருக்கும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு மூன்றாம் மனிதர் போல் தள்ளி நின்று  கவனித்துப் பாருங்கள். வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் தெரியும்.

ஓடுவதும், ஆடுவதும், பொய் சொல்லுவதும், ஏமாற்றுவதும், உருகுவதும்,  எல்லாம்  ஒரு திரைப் படம் போல, நாடகம் போலத் தெரியும்.

இந்த உலகம் அனைத்தையும் பார்க்கும் கண்கள் சூர்யனும் சந்திரனும்.

அந்த கண்களை உன்னில் காண்கிறேன் என்கிறான் அர்ஜுனன்.

ஆழ்ந்து சிந்தித்தால் அந்த கண்கள் என்ன என்று உங்களுக்கும் புரியும் ...


Sunday, October 12, 2014

கீதை - 11.19 - தொடக்கம், நடு , முடிவு இல்லாத

கீதை - 11.19 - தொடக்கம், நடு ,  முடிவு இல்லாத  


अनादिमध्यान्तमनन्तवीर्य मनन्तबाहुं शशिसूर्यनेत्रम् ।
पश्यामि त्वां दीप्तहुताशवक्त्रं स्वतेजसा विश्वमिदं तपन्तम् ॥११- १९॥

அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||


அநாதி - மத்யா - அந்தம் = தொடக்கம், நடு , முடிவு இல்லாத

அநந்த வீர்ய = எல்லை அற்ற வீர்யம் உள்ள

அநந்த பாஹும் = அனேக தோள்களுடன்

 ஸஸி ஸூர்ய நேத்ரம் = சந்திரனையும், சூர்யனையும் கண்களாகக் கொண்டு

பஸ்²யாமி = பார்கிறேன்

த்வாம் = உன்னை

தீப்தஹுதாஸவக்த்ரம் = கொழுந்து விட்டு எரியும் தீ போன்ற வாயினையும்

ஸ்வ தேஜஸா = தன்னுடைய ஒளியினால்

விஸ்வ மிதம் தபந்தம் = இந்த உலகை எரிப்பவனாகவும் காண்கிறேன்

தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.

இது ஏதோ ஒரு பயங்கரமான உருவம் போல  இருக்கிறது. தீ கக்கும் வாய், சூர்ய சந்திரர்கள் கண் போன்றவை என்றால் ஒரு கண்

பெரிதாகவும்,இன்னொன்று ரொம்ப சிறிதாகவும் இருக்கும். பார்க்க சகிக்காது. பல்லாயிரம் தோள்கள், பெரிதும் சிறிதுமான  கண்கள்....

விஸ்வரூபம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் இந்த சிக்கல் இருக்காது.

இதை கொஞ்சம் எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்.

 அழகான பெண்ணைப் பார்க்கிறோம்.

அந்த பெண் எப்படி இருக்கிறாள் என்று கேட்டால் என்ன சொல்லுவோம் ?

அவள் கண் நான்கு சென்டிமீட்டர் அகலமும், ஒரு சென்டிமீட்டர் உயரமும் இருந்தது, அவள் ஐந்து அடி எட்டு அங்குலம் இருந்தாள் , எடை ஒரு அறுபது கிலோ இருக்கும் ...என்றா சொல்லுவோம்....

இது எல்லாம் அவளின் கூறுகள்தான் தான்...

ஆனால் அந்த பெண் என்பவள் இந்த கை கால் மூக்கு என்ற அவயங்கள் இல்லை.

இவை அனைத்தும் சேர்ந்த ஒரு கலவை.

ஒரு முழுமையான ஒரு உருவம்.

பெண் என்பது ஒரு உதாரணத்திற்கு  சொன்னது.

தாஜ் மகால் என்றால் என்ன என்று கேட்டால் அது இத்தனை ஆயிரம் சலவை கற்களை கொண்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

அந்த கற்கள் அனைத்தையும் ஒன்று சேர பார்பதுதான் தாஜ் மகால். ஒவ்வொரு கல்லாகப் பார்த்தால்  தாஜ் மகால்  தெரியாது.கல்தான்  தெரியும்.

அது போல,

இந்த  ,உலகை , இந்த பிரபஞ்சத்தை ஒன்றாகப் பார்க்க  வேண்டும்.

கையும் காலும், கண்ணும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவைதான்.  அனைத்தும் சேர்ந்து ஒரு பெண்ணாக நாம் பார்ப்பது இல்லையா ?

அது போல

 மரமும்,செடியும், ஆணும், பெண்ணும், விலங்குகளும், உயிரற்ற பொருள்களையும் ஒன்றாகக் காண்பதுதான் விஸ்வ ரூபம்.

 விஸ்வம் என்றால்  உலகம்.

ரூபம் என்றால்  வடிவம்.

 உலகை ஒரே வடிவாக காண்பது  விஸ்வரூபம்.

இப்போது மீண்டும் ஸ்லோகத்தைப்  பார்ப்போம்.


தொடக்கமும்,நடுவும், இறுதியும் இல்லாதவனாய், எண்ணில் அடங்கா தோள்களையும், சூர்யனையும், சந்திரனையும் கண்களாகவும், அனல் பறக்கும் வாயையும் கொண்டு இந்த உலகை எரிப்பவனாக நான் உன்னை காண்கிறேன்.


இந்த உலகில் உயிர்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன, வாழ்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்து கொண்டும் இருக்கின்றன. 

பிறப்பு ஒரு போதும்  நிற்பது இல்லை. அது போலவே  நடுவான வாழ்வும், இறுதியான இறப்பும். இது தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கிறது.

இவற்றை நீங்கள் ஒன்றாகப் பார்த்தால் தெரியும் இது தொடக்கம், நடு மற்றும் இறுதி இல்லாதது  என்று. ஒரு சக்கரம் போல  சுழன்று கொண்டே இருக்கிறது. 

எண்ணில் அடங்கா தோள்கள் ....இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தால்   எத்தனை தோள்கள் இருக்கும். 

சூரியனையும் சந்திரனையும் கண்களாக ....

மேலும் சிந்திப்போம் ....

Sunday, September 21, 2014

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ

கீதை - 11.18 - அறியத்தக்கதில் உயர் தனி இடம் நீ 



त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् ।
त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥११- १८॥

த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||

த்வம் = நீயே

அக்ஷரம் = அழிவற்றவன் (க்ஷரம் = அழியக்  கூடியது. அக்ஷரம் = அழிவற்றது)

பரமம்  = உயர்ந்தவன்

வேதிதவ்யம்= அறியத்தக்கதவன்

த்வம் = நீ 

அஸ்ய = இந்த

விஸ்வஸ்ய = இந்த பிரபஞ்சத்தில்

பரம் = ஆதி, உயர்ந்தது

நிதாநம் = உறைவிடம்

த்வம் = நீயே 

அவ்யய: = மாறாத

ஸாஸ்வத = நிரந்தரமான

தர்ம = தர்மத்தின்

கோப்தா = காவலன்

ஸநாதந = நிரந்தரமான, அழிவற்ற

த்வம் = நீயே

புருஷோ =  புருஷன்

மதோ மே = என்று நான் நினைக்கறேன்

நீயே அழிவில்லாதவன், அறியதக்கவற்றில் உயர்ந்தவன் நீ, என்றும் உள்ள அறத்தினை காக்கும் புருஷன் நீ. 

எது அழிவில்லாதது ?

பிறக்கும் எதுவும் அழியும்.

தோன்றும் எதுவும் மறையும்.

எனவே அழிவில்லாதது பிறக்காத, தோன்றாத ஒன்றாக இருக்க வேண்டும்.

பிறக்காத, தோன்றாத என்றால் எப்போதும் அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

எது அது ?

அது பொருளாக இருக்க முடியாது. பொருள் என்றால் தோற்றுவிக்கப் பட்டிருக்க வேண்டும்.

அது எந்த ஒரு உயிராகவும் இருக்க முடியாது. உயிர் என்றால் பிறந்திருக்க வேண்டும்.

பின் எது அது ?

இந்த உலகை நடத்திச் செல்லும் அறம் அல்லது உண்மை.

எந்த உண்மை, எந்த விதி, எந்த அறம் என்றும் நிலைத்து நிற்கிறதோ அதுவே  நீ என்று  அர்ஜுனன் அறிகிறான்.

அதை அறிந்தால் எல்லாவற்றையும் அறிந்த மாதிரி.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

பொருள்கள் கீழே விழுகின்றன.  ஆப்பிள் விழுகிறது, கல் விழுகிறது, இல்லை விழுகிறது, மழை விழுகிறது...ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா ? இல்லை அனைத்தையும் இயக்கம் ஒரு விதி இருக்கிறதா ?

ஒரு விதி அனைத்தையும் கட்டுப் படுத்துகிறது. அந்த விதி சாஸ்வதமானது. என்றும் உள்ளது. அழிவில்லாதது.

அதை அறிந்தால், கீழே விழும் பொருள்கள பற்றிய அனைத்தையும் அறிந்த மாதிரி.

இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு விதி இருக்கிறதா அல்லது கீழே விழுவது, மேலே எழுவது, பக்கவாட்டில் நகர்வது என்று எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒரு விதி இருந்தால் எப்படி இருக்கும் ?

அதை அப்படியே இன்னும் விரிவாக்கினால், மனிதர்களின் எண்ணங்களை,  செயல்களை, இவற்றை கட்டுப் படுத்தும் ஒரு விதி இருக்கும் என்றால் அதை  அறிவது எவ்வளவு முக்கியம். அந்த விதியை இறைவனாக காண்கிறான் அர்ஜுனன்.








Wednesday, September 3, 2014

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம்

கீதை - 11.17 - மகுடம், கதை, சக்ராயுதம் 



किरीटिनं गदिनं चक्रिणं च तेजोराशिं सर्वतो दीप्तिमन्तम् ।
पश्यामि त्वां दुर्निरीक्ष्यं समन्ता द्दीप्तानलार्कद्युतिमप्रमेयम् ॥११- १७॥

கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||

கிரீடிநம் = கிரீடம்

கதிநம் = கதை

சக்ரிணம் = சக்ராயுதம்

ச = மேலும்

தேஜோராஸிம் = ஒளி வீசும்

ஸர்வதோ = அனைத்து திக்குகளிலும்

தீப்திமந்தம் = ஒளியூட்டும்

பஸ்யாமி = நான் பார்க்கிறேன்

த்வாம் = உன்னை

துர் நிரீக்ஷ்யம் = மனதில் நிறுத்த கடினமான

ஸமந்தா த் = அனைத்து பகுதிகளிலும்

தீ³ப்தாநலார்கத்³ = சூரியனைப் போல ஒளி விடும்

அப்ரமேயம் = அளவிட முடியாத



கிரீடமும், கதையும், சக்ராயுதமும் கொண்ட சூரியனைப் போல ஒளிவிடும் உன் அளவிட முடியாத உருவத்தை நான் காண்கிறேன் 

கண்ணனின் அந்த விஸ்வரூபம்  தலையில் கிரீடம், கையில் கதை  மற்றும் சக்கரம்  ஏந்தி  இருக்கிறது. மிக மிக பிரகாசமாய் ஒளி விட்டுக் கொண்டு இருக்கிறது.


திருமாலை வர்ணிக்கும் போது சங்கு, சக்கரம், கதை, கிரீடம், பட்டு பீதாம்பரம்  என்று வர்ணிப்பது  வழக்கம்.


இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது.

இதன் உள் அர்த்தம்  என்ன.

சங்கு - கடமையைச்  செய்ய விடும் அழைப்பு

கதை - கடமையில் இருந்து  தவறுபவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை ஒழுங்கு  படுத்தும் கருவி.

சக்கரம் - தானும் கடமையைச் செய்யாமல், செய்பவர்களையும் தடுத்து   அக்கிரமம் செய்பவர்களை   அழிக்க வந்த கருவி.

மகுடம், பட்டு பீதாம்பரம் - கடமையை சரிவர செய்தால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்

ஒளி வீசும் உருவம் - அஞ்ஞான இருளை போக்கும் ஞான ஒளி .

மேலே சொன்னவற்றை  தெளிவாக உணர்த்தும் ஞானம் தான் ஒளி .

விஸ்வரூபம் தரும் பாடம்...

மேலும் படிப்போம்.



Tuesday, August 26, 2014

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப

கீதை - 11.16 - விஸ்வேஸ்வர விஸ்வரூப


अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥११- १६॥

அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||

அநேக பாஹூ உதரா வக்த்ர நேத்ரம் = அனேக தோள்களும், வயிறும், வாய்களும் , கண்களும்.

பஸ்²யாமி = காண்கிறேன்

த்வாம் = உன்

ஸர்வதோ அநந்த ரூபம் = அனைத்து திசைகளிலும், பல முகங்களிலும் கொண்ட பல்வேறு உருவங்களை

நா = இல்லை

அந்தம் = முடிவு

 ந = இல்லை

மத்யம் = நடு

ந = இல்லை

புந ஸ்த ஆதி³ம் = ஆதியையும்

பஸ்யாமி = காணுதல்

விஸ்வேஸ்வர = விஸ்வ + ஈஸ்வரன் = அனைத்தையும், அனைத்திற்கும் ஈஸ்வரனே, தலைவனே  

விஸ்வரூப = விஸ்வ + ரூபம் =  அனைத்தையும் கொண்ட வடிவமாணவனே

பல தோள்களும், பல வாய்களும் , பல வயிறுகளும், பல விழிகளையும் கொண்ட உன் தோற்றத்திற்கு தொடக்கத்தையும், நடுவையும், முடிவையும் நான் காண்கிலேன். 


தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை, நடுவும் இல்லை. எங்கும் நிறைந்து இருக்கிறது.

நாம் முன்பே சிந்தித்தது போல அனைத்து உலகும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உருவை, வடிவை கற்பனை செய்து பார்த்தால் அது தான் விஸ்வ ரூபம்.

என்ன அர்த்தம்.

எல்லா உலகும் என்று  சொல்லும் போது சில விஷயங்கள் நமக்கு புரிபடுகிறது.

முதலாவது, அனைத்தும்  ஒன்றுதான்.ஏற்றத் தாழ்வு இல்லை. அனைத்தும் இறை  வடிவம் தான்.

இரண்டாவது, ஒன்று மற்றொன்றாய் மாறும். ஆனால், இங்கே புதிதாக ஒன்று வருவது இல்லை, இருப்பது இல்லாமல் போவதும் இல்லை.

மூன்றாவது, அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது. எதுவும் தனித்து இல்லை. என்னது, உன்னது என்று பிரித்துப் பார்ப்பது அர்த்தம் அற்ற செயல்.

 நான்காவது,உலகம் அனைத்தும் இறை வடிவம் என்ற எண்ணம் வரும் போது எப்படி  தவறு செய்ய மனம் வரும் ? யாரையும் திட்டுவதோ, கோவித்து பேசுவதோ, மற்றவர்களுக்குத் துன்பம் தருவதோ, உயிர்களை வதைப்பதோ, கொலை, கொள்ளை , கற்பழிப்பு போன்ற செயல்கள் செய்வதோ முடியாத ஒன்று. இந்த எண்ணம் வரும்போது சர்வம் ஈஸ்வர மயம் என்று தோன்றும்.

விச்வேஸ்வரா - விஸ்வ ரூப ...

சிந்திப்போம்.




Monday, August 25, 2014

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில் காண்கிறேன்

கீதை - 11.15 - அனைத்தையும் உன்னில்  காண்கிறேன் 


अर्जुन उवाच
पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसंघान् ।
ब्रह्माणमीशं कमलासनस्थ मृषींश्च सर्वानुरगांश्च दिव्यान् ॥११- १५॥

அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||


அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்கிறான்

பஸ்²யாமி = நான் காண்கிறேன்

தேவாம்ஸ் = தேவர்களை 

தவ = உன்னுடைய

தேவ = தேவா !

தேஹே = தேகத்தில்

ஸர்வாம்ஸ் = அனைத்தும்

ததா = அந்த வகையில்

பூதவிஸே = அனைத்து உயிர்களின் 

ஷஸங்கா⁴ந் = கூட்டத்தை

ப்ரஹ்மா = பிரம்மா

ஈசம் = ஈசன்

கமலாஸநஸ்தம் = தாமரை மலரில் அமர்ந்து இருப்பவன்

ரிஷி = ரிஷிகள்

ச = மேலும்

ஸர்வ = அனைத்து

உரகன்  = பாம்புகள்

ச = மேலும்

தி³வ்யாந் = தெய்வீகமான


அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே ! உன் உடலில் அனைத்து தேவர்களையும், ,தாமரை மலாரில் இருக்கும் ஈசனான பிரமனையும், எல்லா ரிஷிகளையும், அனைத்து பூதங்களின் தொகுதிகளையும், தேவ சர்பங்களையும்  இங்கு காண்கிறேன் 

அது என்ன பிரம்மா, பூதங்களின் தொகுதி  சொல்லி விட்டு உடனே தேவ சர்ப்பங்கள் என்று  சொல்கிறார்.அதில் என்ன அர்த்தம் இருக்கும் ?

விசரூபம் என்பது அனைத்தையும் தன்னுள் அடக்கியது என்று பார்த்தோம்.

ஒரு கோடியில் பிரம்மா. இன்னொரு கோடியில் கீழான பாம்பு.

யானை முதல் எறும்பு ஈறாக என்று சொல்வது போல.

வானும் நிலமும் சாட்சியாக என்று சொல்வது போல.

இரண்டு எதிர் எதிர் துருவங்களை சொல்லிவிட்டால் இடையில் உள்ளதை அனைத்தும்  சொன்ன  மாதிரி.

உரகன் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு - மார்பில் நகர்வது என்று  பொருள்.உர்ஸ் என்றால்  மார்பு என்று பொருள். மார்பில் நகர்வது பாம்பு.

பிரமா முதல் பாம்பு வரை அனைத்து பூதங்களின் தொகுதிகளையும் நான் காண்கிறேன்  என்றான் அர்ஜுனன்.

பிரமாவும் , பாம்பும் ஏதோ ஒரு மாபெரும் சக்தியின் இரண்டு துருவங்கள். இடைப்பட்ட  அனைத்தும் அதில் அடக்கம்.

இதில் தாத்தா, மாமா, குரு , பங்காளிப் பிள்ளைகள் , அண்ணன் , தம்பி என்பதெல்லாம்  புறத்  தோற்றங்கள்.

பாசத்தைக் காட்டி, கடமையில் இருந்து விலகப் பார்த்தான் அர்ஜுனன்.

பாசம் என்பது பிரித்துப் பார்பதால்  வருகிறது.

பகையும் அப்படியே.

என் பிள்ளை, என்  மனைவி,என் நாடு, என்று பிரிக்கும் போது பாசமும் வருகிறது, பகையும் வருகிறது.

இதைப் போக்க கண்ணன் விஸ்வரூபத்தை  காட்டினான் அல்லது உணர்த்தினான்.

வெவ்வேறு நாடு, வெவ்வேறு சமயம், வெவ்வேறு உறவுகள் என்று பிரித்துப் பார்க்காமல்  அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கும் சக்தியை தந்தான் அர்ஜுனனுக்கு கண்ணன்.